Sunday, April 13, 2008

என் பார்வையில் மலேசியா...4

மலேசியா வந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது,இந்த இரண்டு வருடங்களில் ஓரளவு சுற்றிப்பார்த்து (தெரிந்து)கொண்டுள்ளேன்,மலேசியாவில் நான் பார்த்த ஒரு சில முக்கியமான இடங்கள்...

1.லங்காவி தீவு..
2.கெண்டிங் மலைவாசற்தலம்..
3.கேமரூன் மலைவாசற்தலம்..
4.கோலாலம்பூர் மற்றும் சுற்றுப்புறங்கள்..
5.ஈப்போ லாஸ்ட் வோல்டு ஆப் தம்பூன்..
6.தைப்பிங் உயிரினங்கள் காப்பகம்...
7.பிறை பறவைகள் சரணாலயம்..
8.பினாங்கு அதன் சுற்றுப்புறங்கள்..
9.லம்போங் பூஜோங் அருங்காட்சியகம்

மேலும் பார்க்க கூடிய இடங்கள்...


மலாக்கா அதன் சுற்றுப்புறங்கள்,பங்கோர் தீவுகள்..இதில் நான்
ஏற்கனவேஇந்தபதிவில் கேமரூன் பற்றி ஓரளவு எழுதிஉள்ளேன்.. அதில் சற்று விரிவாக இன்று காண்போம்...


View Larger Map

ஈப்போவில் இருந்து புதியதாக துவங்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையில் நானும் எனது நண்பருமாக முதல் தனி சுற்றுப்பயணம் மலேசியாவில்,அதுவும் முழுக்க முழுக்க பேருந்து பயணம்....
பேருந்து ஈப்போ நிலையத்தில் நிற்கின்ற பொழுது, நான் மட்டும் கீழ் சென்று உணவு வாங்க சென்றேன்.. பேருந்தின் ஓட்டுநர் ஒரு தமிழர் , அவர் என்னை மலேசியர் என்று நினைத்துக்கொண்டார் போல,அய்யா நீ எந்த ஊர் என்றார்,( இங்கு போதுவாக இளைஞர்களை பெரியவர்கள் அன்பாக அய்யா என்றும்,இளைஞிகளை அம்மா,என்றும் அழைப்பர்) நான் பணிபுரியும் ஊரை சொன்னதோடு நான் இந்தியன் என்றும் தெரிவித்துவிட்டேன்,பிறகு ஏன் தைபூசத்திற்கு போகவில்லையா என்றார், நான் சொன்னேன் , என் நண்பன் சித்தப்பாவானதால், அவர் கலந்து கொள்ள இயலாது ,என்பதால் இருவரும் கேமரூன் வர உத்தேசித்தோம் என்றேன் , ஏற்பாடுகளை பற்றிகேட்டார்,ஒன்றும் செய்யவில்லை இனிமேல்தான் என்றோம்,எனவே அவருக்கு தெரிந்த நபரை ஏற்பாடு செய்யட்டுமா,என்றார் சரி என்றோம்,அது போல் அவர் கம்போங் ராஜா (ராஜக்களின் கிராமம்)என்ற ஊரில் ஒரு அந்த கால பென்ஸ் காருடன் (பெரும்பாலும் கேமரூனில் வாடகை ஊர்திகளாக பென்ஸ்)ஒரு ராஜா நின்றிருந்தார்..அவரது பெயர் மட்டும் தான் ராஜா,நாங்க இந்தியர்கள் என்று தெரிந்ததும்,அவர் நோக்கம் பெரும்பாலும் ,பணம் கறப்பதிலே இருந்தது,என்ன செய்வது அவர் தொழில் அப்படி...? அங்கிருந்து எங்களை ப்ரிஞ்சாங் அழைத்துச்சென்றார்,ஆனால் அப்பேருந்து ப்ரிஞ்சாங் வரை செல்லும் என்பதை பிறகு அறிந்து கொண்டேன்,கேமரூனில் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்கள்...1.பட்டாம் பூச்சிகள் பூங்கா,எனக்கு என்னவோ மனம் ஒப்பவில்லை, பட்டாம்பூச்சிகள் ஒருவித சோர்விலே இருந்தன...
அடுத்து காக்டஸ்வேலி(கள்ளிப்பூங்கா) மிக சிறப்பாக பராமரிக்கின்றார்கள்,ஓரளவு பெரிய பூங்கா,அடுத்து ஸ்ட்ராபெரி பழத்தோட்டம், நாங்கள் சின்னசாமி & மகன்கள் அவர்களது தோட்டத்திற்கு சென்றிருந்தோம்,அந்த இடுகை,,அதன் பிறகு போ டீ( BOH TEA)எனப்படும் தேயிலை தோட்டமுடனான தொழிற்சாலைக்கு சென்றிருந்தோம்,உடனடி,பச்சை,மற்றும் ஸ்டிராபெரி,எலுமிச்சை போன்ற சுவைகளில் தேயிலை வைத்திருந்தார்கள், நான் உடனடி மற்றும் எலுமிச்சை குளிர் தேநீர் இரு பொட்டலங்கள் வாங்கிக்கொண்டேன்,அங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையோர்களில் சொந்த ஊர் நாமக்கல் சுற்றுவட்டாரம் என்று , அந்த தொழிற்சாலையின் சுற்றுலாவழிகாட்டி மலேசிய இந்தியர் கூறினார்,அங்கிருந்து கிளம்பும் போது ,அந்த வாடகை ஊர்திக்கு மணி நேர அடிப்படையில் ,பேசியிருந்த போதும், அவர் எங்கள் அனுமதி இன்றி வெள்ளைகார தம்பதிகளை ஏற்றிகொண்டு வந்து,நீங்க கொஞ்சம் சமாளித்துக்கொள்ள முடியமா என்றார்,நானும் ஒன்றும் பிரச்சினை இல்லை என்று ஆங்கிலத்தில்,கூறிவிட்டு அமர்ந்து கொண்டோம்,என்ன செய்வது.?,வெள்ளைக்காரரும் உங்களுக்கு வசதிப்படுமா?என்று கேட்டார்,ஒன்றும் பிரச்சினை இல்லை சொல்லிவிட்டு,பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டோம்,அவர்கள் இங்கிலாந்து யார்க்சையர் பகுதியை சேர்ந்தவர்கள்,வட இந்திய சுற்றுப்பயணம் முடித்து,அப்படியே மலேசியா , பார்த்து தாய்லாந்து மற்றும் கம்போடியா வழியாக தம் நாடு திரும்பவிருப்பதாக கூறினார், உங்களுக்கு யார்க்சையர் தெரியுமா,,? என்றார், நான் ஓ.. கவுண்டி கிரிக்கெட்டு நடக்குமே என்றேன், நல்லது இந்தியர்கள் பெரும்பாலும் உலக நடப்புகளை தெரிந்துவைத்துள்ளீர்கள் என்றபடி,அந்த ஹர்பஜன் ,ஆண்ரு சிம்மன்ஸ் ப்ரச்சினை என்னவாயிற்று என்றார்,நான் சொன்னேன் ஆஸ்திரேலியர்களுக்கு எப்போதும் தாம் ரொம்ப உயர்ந்தவர்கள் என்ற நினைப்பு என்றேன், அவர் சொன்னார் உண்மையில் ஆண்ரு உண்மையான ஆஸ்திரேலியரே அல்ல, அவர் இங்கிலாந்தை சேர்ந்தவர் என்று கூறினார்... நான் வேகமாக அவர் ஆஸ்திரேலிய பூர்வ குடி என்று சொல்கிறனரே..என்றேன், இல்லை என் நண்பன் ஒருவனது ஊர்தான் ஆன்ருவின் சொந்த ஊர் என்றார்...அப்போழுது ஓட்டுனர் ராஜா நீங்க இங்கே இறங்கி பக்கத்தில் , ஒரு தமிழ் பள்ளி இருக்கின்றது, பார்த்து கொண்டுஇருங்கள், நான் பத்து நிமிடத்தில் இவர்களல் விட்டு விட்டு வருகிறேன் என்றுகூறினார்,எனவே நாங்கள கீழ் இறங்கி ,அத்தம்பதிகளிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டோம்...

தொடரும் பக்கங்கள்....

முந்தைய இடுகைகள்
என் பார்வையில் மலேசியா..1,

என் பார்வையில் மலேசியா..2,

என் பார்வையில் மலேசியா..3,

ரத்தன் டாடாவுக்கு ஒரு கடிதம்...?


இந்தியாவின் முன்னெற்ற காரணிகளில் ஒருவரும்,சிறந்த மேலாண்மையாளரும்
கட்டுமானம்,மூலப்பொருள்கள்,சேவைத்துறை,நுகர்வோர் ,அறிவியல் தொழில்நுட்பம் என பரந்து விரிந்து கிடக்கும் சாம்ராஜ்யத்தின் மன்னரான திரு.ரத்தன் டாடா அவர்களே....

என் போன்ற இளைஞர்களுக்கு முன்னுதாரணமான...உங்களுக்கு ஒரு வேண்டுகோள்,


ஆலிவர் ரிட்லி,கடல்வாழ் ஆமைகளில் சிறிய வகைகளில் ஒன்று,இதன் இதய வடிவ ஆலிவ் நிறத்திற்காக இப்பெயர் பெற்றது...உலக இயற்கை மற்றும் இயற்கை வள பாதுகாப்பு நிறுவனத்தின் அழிந்துவரும் உயிரினங்களின் சிவப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளது... இதன் முக்கிய இனப்பெருக்க நிலப்பகுதி இந்தியாவில் இந்தியப்பெருங்கடல்கரைகளான,ஒரிசாவின் தேவி,காகிர்மாதா,ருசிகுல்யா ஆகிய பகுதிகளாகும்...

View Larger Map
இங்கு தாம்ராவில் தங்களது டாடா நிறுவனத்தால் கட்ட திட்டமிடப்பட்டுள்ள துறைமுகத்தால்,ஏறக்குறைய 150000,முதல் 350000 ஆமைகளது இனப்பெருக்கம் பாதிக்கப்படக்கூடும்,



(ஏற்கனவே எண்ணெய் ,எரிவாயு கிணறு தோண்டுதலினால் கடந்த 10 வருடங்களில் ஏற்கனவே 100000 மேற்பட்ட ஆமைகள் இறந்திருக்கின்றன) எனவே தாங்கள் சுற்றுப்புற ,உயிரிகளின் நலன் கருதி கட்டவிருக்கும் துறைமுகத்தை அதிக பாதிப்பளிக்காத அருகில் உள்ள வேறு ஏதேனும் இடத்திற்கு மாற்ற வேண்டுகின்றேன்....

மூலம் : பச்சைஅமைதி

ஆர்வமுள்ளவர்கள் தொடர்புகொள்ள :witness@in.greenpeace.org


விக்கி

Friday, April 11, 2008

மதம்..... பிடிக்காத.........மதம்......????? 2

மதம் பிடிக்காத..... மதம்...!




ஒஷோ
பிறக்கவும் இல்லை,இறக்கவும் இல்லை...
அவரி இப்பூமிக்கு வருகை புரிந்து சென்ற நாட்கள்
Dec 11, 1931 - Jan 19, 1990

ஓஷோ என்றால் வானம் பூச்சொரிந்து ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று பொருள்....


கிறிஸ்துவம்,இந்து,புத்த,ஜைன,முகமதிய போன்ற கோட்பாடுகளும்,அனைத்தும், சமய வழிபாட்டு முறைகளே...
உண்மையான மததிற்கு பெயரில்லை...!பெயர் இருக்காது...!
புத்தரும் ,யேசுவும் வாழ்ந்தார்கள்,ஆனால் நினைவில் கொள்ளுங்கள்,யேசு கிறிஸ்துவரல்ல,புத்தன் புத்திஸ்ட் அல்ல....அவர்கள் இந்த வார்த்தைகளை கேட்டிருக்க கூட மாட்டார்கள், ஏதேனும் ஒரு மதத்தை உண்மையாலும் பின்பற்றுபவர்கள்,மிக கடுமையாக ,உறுதியுடன் அக்கோட்பாட்டை பின்பற்றிக்கொண்டுறிருக்க மாட்டார்கள்,எளிமையானவனவர்களாக இருப்பார்கள்,உலகில் சுமார் முன்னூரு மதங்கள் உள்ளன....உண்மை என்பது ஒன்றாகத்தானே இருக்க வேண்டும், எவ்வாறு முன்னூறு மதங்கள்..?கேலிக்குறியது...!

ஒரே அறிவியல்(நுணுக்கம்),ஆனால் முன்னூறு மதங்கள்..அறிவியல்(நுணுக்கத்தை) வைத்து பார்க்கும் போது உண்மையான பொருள் ஒன்றுதான்,ஆகவே மதமும் ஒன்றாய்த்தான் இருக்க வேண்டும்...ஆனால் அதற்கு பெயரில்லை,கோட்பாடுகளும் இல்லை,
நான் அதைதான் சொல்லித்தருகின்றேன்,ஒருவேளை யாராவது உங்களிடம் நான் என்ன கற்பிக்கின்றேன் என்று கேட்டால்..? உங்களால் பதிலளிக்க இயலாது..?எனெனில் நான் மதகோட்பாடுகளையோ ,போதனைகளையோ,பின்பற்றும் வழிமுறைகளையோ கற்பிப்பதில்லை,நான் உங்களுக்கு மதம் பிடிக்காத(இல்லாத) மதத்தை அதன் சுவையை போதிக்கிறேன்,நீங்கள் எவ்வாறு புனித,மேம்பட்ட நிலையை அடைய,உங்களை தயார் படுத்திக்கொள்வது என்றுதான் கூறுகின்றேன்..நான் ஒருபோதும் புனிதத்தை,மேன்மை நிலையை பற்றி கூறவில்லை,சுலபமாகா கூறவேண்டுமெனில் இதுதான் ஜன்னல் ,இதை திறந்து பாருங்கள்...அழகான நட்சத்திரங்கள் மின்னுகின்ற வானம் தெரியும்...

ஓஷோ..

தொடரும்... மறுபக்கம்,,,?

Thursday, April 10, 2008

உலகின் மிகச்சிறிய துப்பாக்கி..... !

உலகின் மிகச்சிறிய கைத்துப்பாக்கி...5.5 செமீ நீளம் கொண்டது...
விலை...ஏறக்குறைய இரண்டரை இலட்சங்கள்...மட்டுமே...
















நன்றி :சுவிஸ்

மதம்..... பிடிக்காத.........மதம்......????? 1

மதம் பிடித்த யானை மட்டுமல்ல ,மனிதனும் பயங்கரமானவன்,

மதத்தை மனிதன் பின்பற்றலாம், ஆனால் மனிதனை மதம் பீடிக்கலாகாது, நான் இந்துக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன், என்னை ஆரம்ப காலங்களில் கவர்ந்த மதம்-இந்து ,கடவுள்- முருகனும், அய்யப்பனும்,சபரி மலைக்கு இதுவரை நான்கு முறை சென்று,வந்ததும் உண்டு ,ஆனால் என் இரண்டாவது வகுப்புதோழன் சத்தியன் வந்த பிறகுதான் ,கிறிஸ்துவ மதம் எனக்கு அறிமுகம் ஆனது,அன்றிலிருந்து நான் பாதி கிரிஸ்துவன்...அவனுடனே சில பல சமயங்களில்,(முக்கியமாக தேர்வு நேரங்களில் )சிறு வயதில் இறந்த அவனது சகோதரியின் கல்லரைக்கு சென்று வழிபட்டு வருவோம்..வேளாங்கன்னி மாதாவையும் நான் இருமுறை தரிசித்தது உண்டு... அது போலவே எனக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்தது என் தோழி பாத்திமா,என் முதல் வகுப்பில் இருந்து என்னுடன் ஒரே வகுப்பில் இல்லாவிடினும் ,உயர்னிலைப்பள்ளிவரை கூடப்படித்தவள்.. நாகூர் தர்காவிற்கும் இருமுறை சென்று வந்துள்ளேன்...அதன் பிறகு நான் வளர வளர நட்பு வட்டமும் வளர்ந்தது..

காலங்கள் மாறின... என் சகோதரன் பெரும் புத்தக விரும்பி,அவரது உபயத்தில் மறைந்திருக்கும் உண்மைகள் என்ற ஓஷோ என்று அழைக்கப்படும்,ரஜினீஷ் அவரது புத்தகத்தை என் ஏறக்குறைய 15 வயதில் படித்தேன்....

சில இன்னும் மர்மங்கள் ...
தொடரும்....







Wednesday, April 9, 2008

செந்தழல் ரவி , மலேசிய மூர்த்தி விவகாரம்.....

இன்று தட்ஸ்தமிழில் வெளி வந்துள்ளது....
இங்கு காண்க...

Tuesday, April 8, 2008

கண்டிப்பாக இந்தியாவில் மட்டும் இவ்வாறு காணலாம்......?





















இணைப்பு
இந்திய சாலை போக்குவரத்து....

உங்களது சுட்டெலி (மவுஸ்)கையாலும் திறனை மேம்படுத்த .... ஒரு விளையாட்டு ,கட்டாயமாக படிக்க/விளையாட வேண்டியது...


புதுசு கட்டாயமாக மனவலிமை உடையவர்களுக்கு மட்டும் பெரிய திரையில் விளையாட


விளையாடும் முறை தமிழில்
1.play the maze பொத்தானை சொடுக்கவும்..

2.நீல நிற சிறு சதுர வடிவ முனையை சுட்டெலி( மவுஸ்) உதவியோடு ஒரங்களில் படாமல் சிவப்பு நிற இலக்கை அடையவும்....












தாங்கள் இந்த விளையாட்டை விரும்பினால் ,ஒரு ஓட்டோ அல்லது கருத்தோ கூறுங்களேன்...

நன்றி

வடக்கு சைனாவில் பனிமழை பெய்த போது...சில புகைபடங்கள்...











இதற்கு ஏதும் வர்ணனை தேவையா என்ன...!

உலகின் மிக சிறிய குட்டி ராணி ( பெண்)... இந்தியாவில் வசிக்கிறார்

ஜோதி அம்ஜே..... உலகின் மிகச்சிறிய ராணி.. ஆம் அவரது உயரம்
1 அடி 11இஞ்சுகள், அவரின் மொத்த எடை சராசரி இரண்டு வயது குழந்தையைவிட குறைவாக 5 கிலோகிராம்கள் மட்டுமே...

அவர் வசிக்கும் நாக்பூரின் செல்ல ராணி இவரே,மக்கள் இவரை கடவுளின் குழ்ந்தையாக எண்ணி வழிபடுகின்றனர்.. ஆயிரத்திலோருத்தி,அல்லது ஈராயிரத்திலோருத்தியோ அல்ல... 25000 பேரில் ஒருத்தி..ஆம் மரபணுக்கோளாறால் ஏற்படும் அக்கொன்ரோபிலேசியா எனும் குறைபாடு 25000 பேரில் ஒருவருக்கே ஏற்படுமாம்...




14 வயதான ஜோதி... சராசரி மாணவிகள் போல் பள்ளி செல்கிறார்,
குள்ளையாக இருப்பதால் அனைவரது கவனமும் தன் மேல் இருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும்,மும்பை போன்ற பெரிய நகரத்தில் வேலை செய்பவராகவும்,உலகின் பல நகரங்களுக்கு பிரயாணம் செய்யவும் விரும்புகிறார்....

அவருக்கு மிக பிடித்த பஞ்சாபி பாடகர்,மைகா சிங்குடன் ஒரு இசை தொகுப்பும்,ஒரு புகழ் பெற்ற நடிகை ஆவதுமே தன் இலட்சியம் என்று கூறுகிறார்....
ஜோதியைவிட்டு ஒரு நாள் கூட பிரிந்து இருக்க இயலாது என அவரது பெற்றோர்கள் கூறுகிறனர்...

ஜோதியின் குட்டி முகத்தில் ,மங்காத புன்னகை தவழ நாம் வாழ்த்துவோம்...

தகவல் : தின அஞ்சல்

Monday, April 7, 2008

குட்டி பயில்வான்-ரோமியோ தேவ்

உலகின் மிக சிறிய பயில்வான் ரோமியோ தேவ்.....

21/2 அடி 9 இஞ்ச் உள்ள இவரால்,1.5 கிலோ எடை கொண்ட டம்பெல்லை தூக்கமுடியும்,ஆனால் இவரது மொத்த எடை 9 கிலோகிராம்களே...

இவர் தலையின் விட்டம் 15இன்ச்,மார்பளவு 20இன்ச்.....

தொலைக்காட்சி மற்றும் நடன நிகழ்ச்சிகள் மூலம் வசதியாக வாழ்ந்தாலும்,பண்க்காரராக வாழ்வது தன்னை ஈர்க்கவில்லை என்று தன்னடக்கத்துடன் கூறுகின்றார்,,

உருவத்தில் சிறியவரானாலும், தம் முயற்சியால் வாழ்வில் உயர்ந்தா இவர்,லண்டனில் நிகழ்ச்சி நடத்துவதே தம் இலட்சியம் என்று கூறு்கின்றார்...













இவரைப்பார்த்தால் , எனக்கு இவர் நியாபகம் வருகின்றது...

Saturday, April 5, 2008

ஒதுக்குதலும் ,புண்படுத்துதலும்....?

ஒரு சில விசயங்கள்....

வாழ்க்கையில் நம்மை யாராவது ஒதுக்கினால்,அல்லது ஒதுக்கப்பட்டால் நமக்கு எவ்வளவு வலி ஏற்படும்,உணர்ந்தால் தான் தெரியும் அதன் வலி...


அது போலவே நாம் எத்தனையோ பேரை மனதாலோ ,உடலாலோ தெரிந்தோ,தெரியாமலோ புண்படுத்தி இருப்போம்,

இனிமேலாவது இத்தகைய தவறுகளில் இருந்து நம்மை திருத்திக்கொள்ள வேண்டும்....



Friday, April 4, 2008

புரட்சிக்கலைஞர் விஜயகாந்த்.....&வைரமுத்து...

ஹொகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு , முட்டுக்கட்டை போடும் கர்நாடகாவை எதிர்த்து தமிழ்திரை உலகம் நடத்திய உண்ணாவிரத ஆர்ப்பாட்ட வீடியோக்கள்..



உண்ணாவிரதத்தில் ரஜினி.... புகைப்படம்.....

???????????????????????????????????????????????










நன்றி:சென்னைஆன்லைன்

Thursday, April 3, 2008

கர்நாடகாவை கண்டிக்கும் உண்ணாவிரதத்திற்கு ரஜினி வருகை......!

தமிழ்க திரையுலகமே திரண்டு கர்நாடகாவின் போக்கை கண்டித்து நடத்தும்,உண்ணாவிரதத்தில்,ரஜினி கலந்து கொள்வாரா....?

இதுதான் இப்ப எல்லோருடைய கேள்வி....? முக்கியமா.... தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் கேட்க்கும் கேள்வி....?

கண்டிப்பா, சார்ப்பா ரஜினிகாந்த் வருகின்றேன் என்று கூறிஉள்ளதாக செய்தி.

நன்றி ஒரே இந்தியா(என்ன பொருத்தம் பாருங்க)


இப்ப நான் தெரியாம கேட்கின்றேன்....

வந்தாரை வாழவைக்கும் தமிழகம், அப்படின்னு சொல்லுறோம், உண்மைதான் ஒத்துக்கொள்கின்றேன்...
நாமதான் ரஜினியை வாழ வைத்தோம்னு , சொல்லுறீங்க , சரி....!

இப்ப ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி நம்ம விட்டுக்கு கூட்டீட்டுவருகிறோம்,நம்மளை விரும்பி,நம்மளை நம்பி அந்த பொண்ணு கூட வருது ,வாழுது..இப்ப ஒரு சின்ன பிரச்சினை,அந்த பொண்ணோட அம்மாவினால் அப்படின்னா...?
அந்த பொண்ணுகிட்ட உனக்கு நான் வேணுமா...?
இல்லை உன்னை பெத்து வளர்த்த அம்மா வேணும்னா...? கண்டிப்பா அந்த பொண்ணு தன்னோட எதிர்காலம் ,எல்லா யோசிச்சு...கண்டிப்பா...எனக்கு நீங்கதான் வேணும்னு சொல்லுவா இல்லையா...!

அது மாதிரிதான் இதுவும்...தமிழன் ஏன் இன்னும் பின் தங்கியே இருக்கின்றான் ,என்றால் அவனை பிரிக்கும், பிரித்துக்கொண்டிருக்கும் பிரிவினை வாத சக்தியான சாதி,சாதி ,சாதி....

அவனை ஒன்று சேர்க்கும் ஒரே விசயம்...தமிழ்
நல்ல வேளையா ஒவ்வோரு சாதியும் , ஒவ்வொரு மொழி பேசுலை, இல்லைன்னா தமிழன்னு ஒரு பிரிவே இருந்துருக்காது...

எப்ப ஒவ்வோரு சாதியும்,சாதிக்கட்சியும்,தமிழ் நாட்டுல ஒழியுதோ , அன்னைக்குதான் உண்மையிலே தமிழனும் , தமிழ்நாடு முன்னேறும்...

மதிப்புக்குறிய,அம்மா ,அய்யாக்களே.... !
தயவு செய்து கேட்டுக்குறேன்,தமிழ்னா ...ஒன்றுபடுங்க.... அதுதான் நமக்கும் , நாட்டுக்கும்,நல்லது.... நான் தமிழன் , தமிழன்னு சொல்லி பிளவுபடாதீங்க....



நம்ம தம்பியோ அல்லது அண்ணோ , சண்டை போட்டால், நாம் எப்படி விட்டுக்குடுத்து போவேமோ....! அதுபோல் நினைத்துகொள்ளுங்கள்...மேலாக
ரஜினி,வருவாரா...? இங்க சாப்பிடரவங்க கட்டாயமா வரணும்னு... நதி நீர் இணைப்பை திட்டதிற்கு முட்டு கட்டை போடுர ,சொல்லுர,கேட்கிற மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய ஓட்டிற்காக ,பணத்திற்காக, புகழுக்காக இந்தியாவை துண்டாட நினைக்கும் தமிழக , கர்நாடக அய்யாக்களே ,


வெள்ளைக்காரன் நம்மை பிடிச்சதுக்கும்,
இந்தியா இன்னும் ,வல்லரசாகாமல்(சாகாமல்)இருக்கிறதுக்கும்...?

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்தவேண்டும்வெளிநாட்டில் என்று நாம் பாடியது நிலைக்க வேண்டுமானால்...

நம் இந்தியாவாக, ஆம் பள்ளிப்புத்தகத்தில் உள்ள படி,இந்தியா,
பல்வேறு மதம்,மொழி,இனம்,பழக்கவழக்கங்கள்,உணவு,உடை,காலநிலை,கலாச்சாரம்,
கொண்ட...இன ,மத,மொழி சார்பற்ற மக்களாட்சி நாடு......இதை நீங்கள் வளர்க்க கூட,வேண்டாம்...!

அப்படியே நான்/நாம் தவழ்ந்த,வளர்ந்த , நம் ஒரே இந்தியாவாக விட்டுவிடுங்கள்....


க இரா.செந்தில் நாதன்
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
தமிழ்ன் என்று மட்டும் கூறி தனித்திராமல்..
வாழ்க பாரதம்
(நானும் தமிழந்தானுங்க)

உண்மையான கடவுள் ஒருவரே....!

உலகில் பல கடவுள்கள்&மதங்கள் இருக்கலாம், ஆனால் உண்மையான கடவுள் யார்.....?

உண்மையாக ,சத்தியத்தின் வழி நடக்க சொல்லும் கிரிஸ்துவத்தின் ஏசுவா....?

அமைதியையும்,நன்மார்க்கத்தையும் போதிக்கும் இஸ்லாத்தின் நபிகளா....?


அனைத்தும் சமம் என்று கீதையில் கூறும் இந்துக்களின் கண்ணனா.....?


ஆசையை துறக்க சொல்லும் பவுத்த மதத்தின் கெளதமபுத்தரா...?

இல்லை ,
சிவனா..?பிரம்மாவா...?மேரி மாதாவா...? ஒருவர் இல்லை ஒன்றுதான்....

தாய் தம் குழந்தைகளிடம் காட்டுவதும்,காதலன் காதலியிடம் காட்டுவதும்,கணவன் மனைவி இடம் காட்டுவது போல மட்டும் இல்லாமல் ,நமக்கு அறிமுகம் இல்லாத,புதியவர்கள்,சக பிரயாணிகள்... நம்மை பார்த்து உதிர்க்கும் சிறு புன்னகை,சிறு உதவும் தருணங்கள்,அல்லது ஐந்தறிவு உள்ள விலங்கினங்கள் செய்யும் கொஞ்சலும்,சிறு குழந்தைகளின் சிரிப்பும்,இக்காரணிகளை உருவாக்கும்......?



அன்பும்,அவை வெளிவரும் உயிர்களும்,கடவுளே.... !


ஆம் அன்புதான் கடவுள் நீ எந்த மதமாக இருந்தாலும், சாதியாக இருந்தாலும்,எந்த நாடாக இருந்தாலும்,எந்த நிறமாக இருந்தாலும்....

உன்னுள்... உங்களுள் அன்பு இருந்தால் நீ,நீங்கள் கடவுள்....!

இப்படியேல்லாம் நான் யோசிக்க காரணம்....இதுதான்...!

நம்ம ஏஆர்.ரகுமான் மழை பொழிகிறார்.... உண்மையாகவே அவர் ஒரு ஜீனியஸ்..
சரஸ்வதி அருள் நிறைய இருக்கு அவருக்கு...?




என்னை மாதிரி இந்தி புரியாதவங்க , விடியோவில் சவுண்ட் மியூட் பண்ணிவிட்டு, இதை கேளுங்க...

Get this widget | Track details | eSnips Social DNA


நான் முதலில் தமிழில் கேட்ட ,பிறகுதான் வீடியோவை தேடி பிடித்தேன்...எம் பி திரி அதாங்ஜ (MP3)வேணும்னா,பின்னூட்டமோ,மின் அஞ்சலோ அனுப்பவும்

Wednesday, April 2, 2008

ஏன் இந்தியா இப்படி....? மட்டைப்பந்தாட்டம்....

இந்தியா ,தென் ஆப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் ஆமதாபாதில் நடந்து கொண்டு இருக்கின்றது....

இது வேகப்பந்தாளர்களுக்கு உகந்த மைதானமாக கருதப்படுகின்றது..முதன் முறையாக இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வுசெய்து உள்ளது குறிப்பிடதக்கது....

அதன் விபரம்....
ஆமதாபாத் : இந்தியா-தென்னாப்ரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்தியா டாஸ் வென்று முதலில்பேட்டிங் ‌செய்ய முடிவு செய்தது. தற்போது பேட்டிங் செய்யும் இந்தியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஜாபர் 9 ரன்; சேவாக் 6 ரன்; லட்சுமண் 3 ரன் எடுத்தும் கங்குலி ரன் ஏதும் எடுக்கவில்லை...

ரன்கள் விக்கெட்
56 /8

76/9

Tuesday, April 1, 2008

சிறந்த வைரஸ் எதிர்ப்பான்....

சிறந்த வைரஸ் எதிர்ப்பான்....




சும்மாதான் ,வந்தது வந்துவிட்டீர்கள்...

இலவச வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் வேண்டுமா...? அவாஸ்ட் வீட்டு கணிணி பதிப்பை உபயோகித்து பாருங்கள்... என்னளவில் மிக சிறப்பாக உள்ளது.... முழு இலவசம்...

இதன் கூட சோன் அலாரம் சேர்த்து இயக்கலாம், ஆனால் சோன் அலாரம் இலவசம் இல்லை... சோதனை -மாதிரி மட்டும் கிடைக்கும்,உங்களுக்கு பிடித்திருந்தால் தறவிறக்கம் செய்யவும்