Saturday, May 10, 2008

பயணம்.....



ஒரு சின்ன கவிதை முயற்சி.... மேலும் அதிகம் அன்புடன் பார்க்க,இதை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் போது நான் பயணித்துக்கொண்டிருப்பேன்.....

க இரா.செந்தில் நாதன்

Sunday, May 4, 2008

என் பார்வையில் மலேசியா...5

கடந்த இரண்டரை ஆண்டுகள்
மலேசிய வாசம், முற்றுப்பெருகிறது..ஆம் இந்த மாத மத்தியில் இந்தியா திரும்பவிருப்பதால்,இந்த வாழ்க்கைபயணத்தில், பல சிறந்த பாடங்கள் கற்றுத்தந்த மலேசியாவிற்கும்,மக்களுக்கும் என் நன்றிகள்,இங்கு நான் கண்டவரை , அல்லது என் வரையில் எந்தவொரு கசப்பான் சம்பவங்கள் நிகழவில்லை, ஒரு சில சிறு சிறு விசயங்கள் தவிர, பல நல்ல நண்பர்களையும்,அறிவையும் உருவாக்கியுள்ளது,

அந்த ஒருசில விசயங்கள்... விரைவில்...


இதுவரை...
என் பார்வையில் மலேசியா..1,

என் பார்வையில் மலேசியா..2,

என் பார்வையில் மலேசியா..3,

என் பார்வையில் மலேசியா..4,

இடுகைகளில் மலேசியாவில் நான் சென்றுபார்த்த ஒரு சில இடங்களில் ஒரு சில விசயங்களை பகிர்ந்து கொண்டேன்...
1.லங்காவி தீவு.. காண்க ஜில்லேன்று ஒருமலேசியா டிபிசிடி விரைவில்
2.கெண்டிங் மலைவாசற்தலம்.. இது ஒரு பொழுதுபோக்கு பூங்கா..
3.கேமரூன் மலைவாசற்தலம்.. இங்கு
4.கோலாலம்பூர் மற்றும் சுற்றுப்புறங்கள்.. விரைவில்
5.ஈப்போ லாஸ்ட் வோல்டு ஆப் தம்பூன்.. விரைவில்
6.தைப்பிங் உயிரினங்கள் காப்பகம்... விரைவில்
7.பிறை பறவைகள் சரணாலயம்..விரைவில்
8.பினாங்கு அதன் சுற்றுப்புறங்கள்..விரைவில்
9.லம்போங் பூஜோங் அருங்காட்சியகம் இதை இங்கு டிபிசிடி அவரது பதிவில் காண்க..
அதன் தொடர்ச்சியாக மலசியாவில் இந்தியர்களிடையே மிக புகழ் பெற்ற ,மாரான் திரு.மரத்தாண்டவரை இந்த இடுகையில் காண்போம்...புகைபடபதிவு...


View Larger Map


Saturday, May 3, 2008

மிதக்கும் மனிதரும் அவரது ரகசியமும்...

மிதக்கும் மனி்தரை தெரியுமா,,,? ஆம் இவர் ஒருகைமட்டும் சுவற்றில் ஊண்றியபடி மிதப்பார்... புகைபடங்கள் காண்க...









அவரது பெயர் ஜான் லொர்பீர்,ஜெர்மனியை கலைஞர்,அவரது மிதக்கும் அ உறையும் நிகழ்ச்சி மிக பிரபலம்,அவர் குறித்து இங்கு காண்க, ஜெர்மனில் உள்ளதால் டோண்டு அய்யாவிடம்,உதவி வேண்டுவோர் பெறலாம்...
அந்நிகழ்ச்சியின் இரகசியம் இதோ....

Friday, May 2, 2008

மதம்..... பிடிக்காத.........மதம்......?????





முந்தைய பகுதி 1


முந்தைய பகுதி 2

ஒஷோ மறக்க,மறுக்க முடியாத மனிதர்....?,நமக்கு நெருங்கிய,அல்லது உறவினரோ நம்மைவிட்டு பிரியும் ,இறக்கும் தருணங்கள்....மிக கடினமானவை... ஆனால் அத்தகைய இறப்பை ஒரு விழாவாக கொண்டாட செய்தவர்...ஓஷோ... !

ஓஷோ...ஒரு வித்தியாசமானவர்,...!

"..நீங்கள் பேசுவது உண்மையாய் இருக்கலாம் , ஆனால் நான் நல்லதை (சில நல்ல பொய்கள்)மட்டும் பேசுவேன்..."


அவரிடம் தினமும் 60மிகி அளவு வேலியம்(Valium) எனும் போதை பொருள் உட்கொல்லும் பழக்கம் இருந்தது,மேலும் அவர் நைட்ரஸ் ஆக்சைடு(N2O) எனும் சிரிப்பூட்டும் வாயு நுகரும் பழக்கம் கொண்டவர் என்றும் கூறப்படுகின்றது...

ரஜினீஸ் புரம்...

1980 களில் ,ஓஷோ அவர்தம் ,வழிதொடர்பவர்களின் வேண்டுகோளின்படி,அமரிக்காவின் ஓரிகான் மாநிலத்திற்கு குடி பெயர்ந்தார்...அங்கு அவர்களுக்காக மத்திய ஒரிகானில் சுமார் 64000 ஏக்கர் நிலம் ,$5.75 மில்லியன் மதிப்பில் ,அதாவது 30 மடங்கு சந்தை நிலவரத்தைவிட அதிகம் கொடுத்து வாங்கப்பட்டது...

View Larger Map


" தியானம் கட்டாயமாக வியாபாரமாக்கப்பட கூடாது ஆச்சார்யா ரஜ்னீஷ்1971"

ஓஷோவிடம் ஏறக்குறைய 90 கும் மேற்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் இருந்தன...


ஆனால் 1985 வருடம்,போதை பொருள வைத்துஇருத்தல்,மற்றும் குடி நுழைவு முறைகேடு,உயிர்கிருகி தாக்குதல்,போன்ற பல்வேறு காரணங்கள் ஒஷோ மற்றும் அவரது ஆசிரம தலைமை நிர்வாகி மா ஆனந்த் ஷீலா மீது குற்றம் சாட்டி ,ஓஷோ நாடுகடத்தப்பட்டார்...மா ஆனந் ஷீலா சிறைதண்டனை பெற்று , அவர் நன்னடத்தை காரணமாக 1988 ல்,விடுதலை பெற்று தற்போழுது சுவிட்சர்லாந்தில் தாதியர் விடுதிவைத்துள்ளார்...


இதன் பிறகு இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அனுமதி மறுக்கப்பட்டு,இந்தியா திரும்பிய >ஓஷோ...உடல்நலக்குறைவினால்,ஜனவரி 19 ,1990ல் இயற்கை எய்தினார்...

அவருக்கு அமெரிக்காவில் ஆர்சனிக் விசம்,மற்றும் அணுக்கதிர் வீச்சுக்கு ஆட்படுத்தப்பட்டார் எனவும்,கூறப்படுகின்றது...

முற்றுலுமாக புரிந்து கொள்ளப்படாத ஓஷோ ஒரு,மர்மம் தான்,பல்வேறு தியான முறைகளை,உருவாக்கியவர்,மனிதனை கடவுளின் நிலைக்கு (அ)மேம்பட்ட நிலைக்கு உயர்த்த வழி காட்டியவர்,.... ஆனால்
அவரும் சராசரி மனிதர்களைப்போல்,பாலுணர்வும்,சொகுசான வாழ்க்கை முறைகளையும்,ஆடம்பரங்களையும் விருப்பினார்....அனுபவித்தார், ஆகவே.....?????

மனிதன் கடவுளை அடைதல் அ மேம்பட்ட நிலையை அடைதல் என்றால் என்ன...?
இருக்கும் நிலையில் இருந்து ஒரு மேன் மாறுதலை அடைதல் எனக்கொள்ளலாமா..ஆம் இது உடல்,மனம்,செயல் சார்ந்தது...ஒரு வேளை உணவு இல்லாதவனுக்கு, உணவு கிடத்தால் அவன் அளவில் அது உடல்மனம் சார்ந்த மேம்படுதல்,இதுவே ஒரு இளைஞனிடம் அவன் காதலி காதலை ஏற்றுக்கொண்டால் அது மனம் சார்ந்த மேன்படுதல்,இது பிறகு மாறலாம், ஆகவே ஒரு சில சிறிய அல்லது தற்காலிக மாற்றங்கள் மகிழ்ச்சியை கொடுக்கும்,எதுவுமே நீண்ட கால மகிழ்ச்சியை தராது,

எந்த ஒரு மதமும்,மார்க்கமும்,மனிதனை கடவுளாக்காது,மேம்பட்டவனாக ஆகக் கூடிய வழிமுறைகளை காட்டும், கற்றுக்கூட தராது....ஆம் மனிதம் மேம்பட்டவனாக மாறுவது என்பது அவனுள் ,அவன் எண்ணங்களுள் ஏற்படும் மாற்றமேயன்றி வேறில்லை,எண்ணம் நல்லனவாக,இருந்தால் சொல்,செயல்,நல்லனவாகும்...

இக்கட்டுரை யாவும் என் சொந்த கருத்து ,யாவரேனும் புண்படும் படி கருத்துக்கள் இருந்தால் ,மன்னிக்கவும்...

தொடர்புடைய முகவரிகள்..
தாபான்

புத்தகம்

ஓஷோ

விடுதலை முண்னணி


அன்புடன்
கஇரா.செந்தில்நாதன்




உலகின் மிக நீளமான் கூந்தல் கொண்ட பெண் &பெண்கள் &குடும்பம்....


இந்திய பெண்கள் மட்டும் அல்ல,உலக பெண்கள் அனைவருக்குமே,கூந்தலின் மீது அலாதி ஆர்வம் உண்டு,நம்ம கோலங்கள் பிருந்தாதாஸ்... ?கூந்தலுக்கு இயற்கையான வாசம் உண்டா இல்லையா.. என்று விவாதம் நடந்ததாக கூட புராணங்களில் கூறப்படுகின்றது..

அதன் தொடர்புடைய செய்திகள்

தற்போதைக்கு உலகின் மிக நீளமான கூந்தல் கொண்ட பெண்... ஷி கியுபிங்(xie qiuping) சீன நாட்டை சார்ந்தவர்.... அவர் தனது 13ஆம் வயதில் அதாவது 1973ல் இருந்து கூந்தலை வளர்த்து வருகின்றாராம்...

அவரது கூந்தலின் நீளம் :5.627 m (18 ft 5.54 in) மேல் விவரங்கள் இங்கு காண்க
அவரது புகைப்படம்


காணொளி


மிக நீண்ட கூந்தல் கொண்ட குடும்பத்தினரை தெரியுமா,,,,? சத்தியமா அவர்கள் இந்தியர்கள் அல்ல... லாக்போர்ட் அமரிக்காவை சார்ந்த சதர்லேண்டு சகோதரிகளான சாரா,விக்டோரியா,இசபெல்லா,கிரேஸ்,நவோமி,டோரா கிட்டி,மற்றும்,மேரி ஆகியோர்....அவர்கள் 18ஆம் நூற்றாண்டை சார்ந்தவர்கள்..
அவர்களது புகைபடங்கள்... அதிக விவரங்கள்