Monday, March 31, 2008

முப்பரிமாணம்......

ஒரு சில முப்பரிமாண புகைப்படங்கள்.....

நான் இணையத்தில் சுட்டவை (தேடிப்பிடித்தது) .....!














இவையும் நான் சுட்டவை என் புகைப்படகருவிமூலம்....
ஓவியங்கள்....மலேசிய தொலைதொடர்பு கோபுரத்தின் கீழ் விற்கப்படுகின்றன....








பார்க்க
ஐரோப்பிய சாலை ஓவியங்கள்

Tuesday, March 25, 2008

பெண் புலியை தாக்கிய......மூளையற்ற ஆண் சிங்கம்.....

கீதாஞ்சலி கோலனாடு இங்கிலாந்து போமேன் வில்லே வசிக்கும் இந்திய வம்சாவளி, பெண் புலி...



இவர் தற்காப்பு (களரி) கலைகள் போதிக்கும் ஆசிரியை....
ஆனால் இவரிடமே....வம்புசெய்துவிட்டது ஒரு சிங்கம்.....

அதை இங்கு பாருங்கள்...


விபரங்களுக்கு

என்ன செய்ய 2 நிமிடத்தில் இந்த மாதிரி பதிவுதான் , போடலாம்....

Tuesday, March 18, 2008

பருந்துப்பார்வை...... உலகின் எல்லா இடங்களும்....


நம்மில் சிலருக்கு /பலருக்கு உள்ள ஆசை ,முடிந்தவரை உலகின் ஒரு சில இடங்களையாவது சுற்றிப்பார்த்து விடுவதுதான்.....

அதன் பகுதியாக....
இணையத்தில் புகைபடங்களை,சென்று வந்தோரின்,அனுபவங்களை படிப்பது,மூலமாக சிறிது மட்டுப்படும்.....

ஆனால் கூகுள்பூமி உபயத்தால்...உலகின் எந்த மூலையையும்,செயற்கைக்கோள் மூலமாக காண இயலுகிறது...இதில்.....முப்பரிமாண(3D), ,மற்றும் வீதி (street view)வழிப்பார்வைகளில் பார்க்க இயலும்...ஆனால் பருந்துப்பார்வை.....(bird eye view)?

அதற்கு இங்கு செல்லுங்கள்......




இது ஒரு விளையாட்டு..ஆனால் மிக உபயோகமான விளையாட்டு...

Friday, March 14, 2008

தாயை கொல்லும் தமையர்கள்..3 சில அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்...?



சென்ற இரு பதிவுகள்..

நாம் பிறந்தவுடன் பசும்பாலை குடித்தும், பால் ,தயிர் ,மோர்,வெண்ணெய், நெய்,என் பல தரப்பட்ட உணவுவகைகளாக உருவம் மாற்றி உண்டும்,கையுறை ,காலணி,அங்கி,கைப்பை, போன்ற அன்றாட உபயோகப்பொருள்களாக பயன்படுத்தியும் .....விவசாயதிற்கும் ,போக்குவரத்திற்கும் கூட பெரிதும் நமக்கு உதவுகின்றன..... பசுக்கள்,மாடுகள்
பசும்பாலில் உள்ள சத்துக்கள் பற்றிய சில விவரங்கள்..



தோலினால் ஆன பொருட்கள்....


இதுமட்டுமா...இதையும் பாருங்க...?
துளையுடன் கூடிய வயிறு...? உங்களுக்கு இருந்தால்..!எப்படி இருக்கும்...?
மனிதன் செய்யும் கொடூரத்தைபாருங்கள்....








நான் சிறுவயதில் கேள்விப்பட்டுஇருக்கின்றேன்...பால் கறக்கும் பசுக்களை , மாடுகளை,அதன் இரு கொம்புகளுக்கு இடையில் சுத்தியலினால் அடித்துகொள்வார்கள் என்று...அக்கொடுமையை இங்கு காணுங்கள்..





உங்களுக்கு பிட்சா பிடிக்குமா..? பர்கர்.....? அதற்கு இவ்வாறுதான் மீட் தயார் செய்கிறார்கள்....




ஆக நண்பர்களே...புலால் உண்ணாமை என்பது மட்டும் இன்றி, நம்மை, நம் உயிரை வாழ்ப்பிக்கும்,வாழவைக்கும் தாய்களான பசுக்கள் கொல்லாமை என்பதை முடிந்த வரை ,வலியுருத்துவோம்,கடைபிடிப்போம்....

Wednesday, March 12, 2008

அழகான மலேசிய .............பாடல்கள் !

மலேசிய தமிழ் பாடல்களில் என்னை கவர்ந்த பாடல்கள் சில......

1.




2.



3.


4.


இவற்றோடு மிக மிக பிடித்த பாடல்,உன்னை தொட்டு சென்ற தென்றல் எனும் பாடல் , தாமரை பாடல் தொகுப்பு, பாடியவர் ஜெசிகா,,,,அதன் ஒளிப்படம் கிடைக்கவில்லை... உங்களிடம் இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்களேன்,,,

Monday, March 10, 2008

சூட்டை தணிக்க...?




உலகின் வெப்ப நிலை உயர்ந்து கொண்டே செல்கிறது....அதை நாம் கட்டுப்படுத்தியாக வேண்டும்...

இல்லையெனில்







கட்டுப்படுத்த நம்மால் இயன்ற ,நாம் கடைபிடிக்க வேண்டிய ஒரு எளிய வழிமுறைகள்..

1.வீடு,அலுவலகங்கள்,போன்ற நம்மால் முடிந்த இடங்களில் ஒளிர் வாயு(fluorescent)கொண்ட மின் ஒளிப்பான்களை (bulbs)பயன் படுத்துங்கள்..

2.தேவை படாத சமயங்களில்/போக்குவரத்து குறிகளில்(traffic signals)நிற்கும்போதும்,வாகனங்களின் இயக்கத்தை நிறுத்திவிடுங்கள்..

3.மறுசுழற்சி செய்ய இயன்றவற்றை பொதுகழிவுகளில்(generalwaste) கலக்காதீர்கள்


4.முடிந்த வரை மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்கள்,பொருட்கள் உபயோகப்படுத்துங்கள்,பிலாஸ்டிக் பொருட்களை பயன் படுத்துவதை குறைத்துக்கொள்ளுங்கள்..

5.குழந்தைகள்/நீங்களும் நீர் ,நிலம்,காற்று மாசுபடுத்துதல் கற்றுகொடுங்கள்,தெரிந்து கொள்ளுங்கள்...உணவு பொருட்களை வீணாக்காதீர்கள்...

நீங்களும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்... நம்புங்கள்...

நம் முன்னோர்/ பெற்றோர் அழகான,தூய்மையான புவியை நமக்கு தந்து சென்றனர்,,,

நாம்.....?

நீங்களும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்...!

அதிக தகவல்கள் இங்கு

தாயை கொல்லும் தமையர்கள்...2



என்ன அமைதியான், அழகான பிராணி,மனிதன் பிறந்து வளரும் போதும் இதன் செங்குருதியை (பால்)உணவாக கொண்டு வளர்கின்றான்ன், சாவின் விளிம்பில் கூட பசுவின் பாலே அவனுக்கு மரணமேனும் மோட்சமளிக்கிறது...

இதுவரை பால்/பால் சார்ந்த பொருள்களை உண்ணாதவர் எவெரேனும் உள்ளீரா..?

அப்படி சாப்பிட்டுள்ளீர்கள் என்றால் , நீங்கள் பசுத்தாயின் புதல்வர்கள்..!
கட்டாயம் புலால் உண்ணும் போது நினைவு கொள்வீர் தோழர்களே...


கொலைகாரக்கூட்டம்


வேதனையின் உச்சத்தை பாருங்கள்....



குருதி,முதல் சாணம் வரை நாம் அதனிடம் இருந்து பெற்றதோடு அல்லாமல்...அதன் ஊன் உடலையும் உண்டு களிக்கின்றோம்..
இவை மட்டுமா...?இன்னும் வரும்...

Sunday, March 9, 2008

தாயை கொல்லும் தமையர்கள்....1

மானிடராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா....!

ஆம் மனிதர்களாய் இப்பூவுலகில் நாம் பிறந்திருக்க எனக்கு தெரிந்து நிச்சயம் இருவருக்கு நன்றிகள் சொல்லவேண்டும்...! அவர்கள் நம் பெற்றோர்கள்.....!

பெற்றோர்கள் என்பதோடு...படைத்தவர்கள் என்பதும் பொருந்தும்....
அவர்களில் தந்தை என்பவரை விட தன் உயிரூட்டி நம் உயிருடல் வளர்க்கும் அன்னையே மிக மேலானவர்..

உயிர்ப்பித்த பின்னரும் நம் உடல் ,உயிர் வளர்க்க , தன் செங்குருதியை,வெண்ணிற தாய்பாலாக்கி நம்மை உயிரை வளர்க்கிறார்.... நம் அன்னை....


ஒரு சில நேரங்களில் நோயுற்ற அன்னைகள் தாய்ப்பால்,தர இயலாத போதும்,இயற்கையின் விளைவுகளின் போதும்,வளர்ப்பு /வாடகை தாய்மார்கள்,பாலூட்டுவார்கள்..அது இயலாத பொழுதும், நாம் நடக்க ஆரம்பித்த /எந்தவொரு காரணத்தினாலோ தாய்ப்பால் கிடைக்காத பொழுது.... நம்மை வளர்க்கும்/ வாழவைக்கும் மற்றுமொரு தாய் தாய்ப்பசு....



உயிர்ப்பித்து,உருவாக்கிய அன்னைக்கு நிகராக நாம் ஒப்பிடுவதும், நம்மை தாங்கும் தாய் நாடு,பண்பு, புரிதல்களை போதிக்கும் தாய்மொழி,இவற்றிற்கு, ஈடாக பசுத்தாயும் நம்மை வளர்ப்பதில்/வாழ்விப்பதில் பெரும் பங்கு வகிக்கிறாள் என்பது மறுப்பதற்கில்லை..

நமக்கு பெற்ற தாய் மட்டுமே பாலூட்டுவாள்,ஒரு சிலருக்கு, சில சமயங்களிலேதான் வளர்ப்பு தாய் பாலூட்டுவாள்,இதிலும் மனிதனால் இன, சமய,சாதிகள் புகுத்துவிடப்படுகின்றது...ஆனால் இன,மத,மொழி,சாதி,சமய,நாடு போன்ற வேறுபாடுகள் பார்க்காது, தம் குருதியை நம் உயிர்,உடல் வளர்க்க கொடுக்கும் தாயை கொல்லும் தின்பது
எந்த வகையில் நியாயம்...?

இதுவரை பால்/பால் சார்ந்த பொருள்களை உண்ணாதவர் எவெரேனும் உள்ளீரா..?

அப்படி சாப்பிட்டுள்ளீர்கள் என்றால் , கட்டாயம் நீங்கள் பசுத்தாயின் புதல்வர்கள்..!
புலால் உண்ணும் போது நினைவு கொள்வீர் தோழர்களே...


சிலர் கேட்கலாம் பால் சைவமா, அல்லது அசைவமா என்று...?
நான் அகவை 16 முதல் என் சுய விருப்பத்தின்படி சைவனானேன்,ஒரிரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்த பொழுது ,பால் அசைவம் என்று எண்ணி மிக கடினப்பட்டு, ஏன் என்றால் அன்றாடம் உட்கொள்ளும் தேநீர்/காபி, தயிர் ,மோர் , நெய் மற்றும் எனக்கு பிடித்த இனிப்புகள் பால்கோவா,குலோப்ஜாமூன் போன்ற பால்/பால் சார்ந்த பொருட்களை முற்றிலுமாக ஏறக்குறைய 1 வருடம் தவிர்த்திருந்தேன்,( என் தமக்கைகு நன்றி, அவர்களும் சைவராகிவிட்டாகள்)ஆனால் தொடர்ந்து கடைபிடிக்க இயலாமல், மருத்துவரின் அறிவுரையோடு (நமது இந்தியர்களின் உணவில் தயிர்/ மோர்/நெய் போன்ற பால் மற்றும் சார்ந்த பொருட்கள் பெரும்பான்மை வகிப்பதோடு,உடற்குளிர்ச்சி/அழகு-வெயிலின் கொடுமை தவிர்க்க/ஆரோக்கியதிற்கும் உதவுவதால்)மீண்டும் உள்கொள்ள ஆரம்பித்தேன்...

ஆனாலும் பால் சைவமா அசைவமா என்று தெளிவில்லை,அக்காலகட்டத்தில் அய்யா அக்கினிச்சிறகு அவர்களின் பதிவில் பின்னூட்டமிட்டு இக்கேள்விகேட்டதற்கு...
Blogger emperor said...

திரு அக்னி சிறகு , அவர்களுக்கு , என் அன்பு வணக்கம்.........
உங்களது சைவம் , அசைவம் பற்றிய கட்டுரைகளை ,படித்தேன்...மிக அருமை...நானும் கடந்த ஒன்பது வருடங்களாக ,சைவ உணவை உட்கொண்டு வருகின்றேன்,தட் பொழுது மலேசியாவிலும், சிறிதே கடினம்... ஆனால் பால் மற்றும் பால் ,பொருட்களும் ,சைவமா ,அசைவமா....நானும் ஓர் வருடங்கள் விலக்கி இருந்தேன்... மீண்டும் உடல் சூட்டின் காரணமாக , மோர் , மற்றும் பால் பொருட்கள் சாப்பிட்டுகின்றேன்...தயவு செய்து விளக்கம் வேண்டும்
அன்புடன்
இரா . செந்தில் நாதன்
அன்புடன்

அவர் அளித்த விளக்கம்...

Blogger அக்னி சிறகு said...

பால் எப்படி உற்பத்தியாகிறது என்று பார்ப்போம். பால் பசு, கன்று ஈன்ற பிறகு உற்பத்தியாக தொடங்குகிறது. கன்று குடித்தது போக மீதிப்பால் தான் நமது முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. வலுக்கட்டாயமாக எடுக்கப்படுவதில்லை. கருமையம் பற்றிய விளக்கத்தின்படி பசு பால் உற்பத்தி செய்யும்போது எந்த துன்ப உணர்வையும் அனுபவிப்பதில்லை. அதனால் பாலில் உள்ள செல்களில் எந்த துன்ப உணர்வும் இயற்கையில் கிடையாது. அதனால் பால் குடிப்பதால் நீங்கள் எந்த உணர்வையும் அல்லது காந்த அலையையும் பால் வழியாக பெறுவதில்லை.(சிலர் பால் பசுவின் ரத்தினால் ஆனது என்று கூட சொல்லலாம். குழப்பிக்கொள்ள வேண்டாம்.)

இதன்படி பால் சைவ உணவே. மோர், தயிர் எதுவேண்டுமானாலும் உணவாக கொள்ளலாம். குழப்பம் வேண்டாம்.

நான் தெளிவு பெற்றென்.... நீங்கள்....?

மீண்டும் தொடர்வேன்...

தரவிறக்கம் / பதிவு செய்யாமல் வீடியோ( ஒலி&ஒளி)மின்னஞ்சல் அனுப்ப...!

வீடியோ மின்னஞ்சல்....

மிக எளிதான முறையில்,நீங்கள் எந்த மென்பொருளையும் தரவிறக்கம் செய்யாமலும்...

அந்த வலைபக்கத்தில் உறுப்பினராக பதிவு செய்யாமலும்.....அனுப்பலாம்

உங்களுக்கு வேண்டியவை...ஒரு வெப்காமிரா(வலை ஒலி&ஒளிபதிவு கருவி)ஒலிவாங்கி(மைக்)மின்னஞ்சல் முகவரிகள் அனுப்புநர் & பெருநர்....


நீங்கள்,எந்த மின்னஞ்சல் உபயோகப்படுத்துபவராக இருப்பினும் , இதை
பயன்படுத்தலாம்...அதிகபட்சமாக 5 நிமிடங்கள் பதிவுசெய்துஅனுப்பலாம்...இதில் குழும முறையும் உள்ளது....மேலதிக தகவல்கள் பெற... இங்கு

Friday, March 7, 2008

தேர்தலில் போட்டியிடும் வலைபதிவாளர்.....!.

வலைபதிவராகி...முழுசா ஒரு வருடம் முடியலை,வாழ்க்கையில் இன்னும்பெருசா ஒன்னும் சாதிக்கலை.... ஆனா சாதிப்பேன்...

பார்ப்போம் வாய்ப்பு கிடைத்தால், தேர்தலில் போட்டீயிடலாம்னு, நினைக்கிறேன்...?
நான் வென்ற பிறகு,எல்லோருக்கும்..இலவச கணிப்பொறி கட்டாயமாக உண்டு...

அமைதி ... அமைதி...

இப்ப விசயதிற்கு வருகிறேன்..பொதுவாழ்க்கைளிலோ, அரசியலிலோ பிரபலமா இருக்கறவங்க
தனி வலைப்பக்கமோ/வலைபதிவோ வைத்திருப்பது வழக்கமான ஒன்று...

ஆனா என்ன மாதிரி;)சரி விடுங்க மக்கா...!

ஒரு மென்பொருள் ஆலோசனையாளர், ஒரு பேச்சுக்கு சொன்னா நம்ம சிவாஜி மாதிரி...
200 கோடி மட்டும்தான் இல்ல,அதனால மக்களிடம் இருந்து நிதி திரட்டி போட்டியிடுகிறார்
இவரு


இவரு பேரு ஜெப் ஊய்

இப்ப இவரு மலேசிய அரசியலில் ஒரு முக்கிய புள்ளி,இந்த தேர்தல் 2008 பினாங்கு மாநில ஜெலுதோங் தொகுதியில் போட்டீடுகிறார்..

இவர் இதற்கு முன்னால் கெரக்கான் கட்சியிலிருந்து விலகி,DAP Democratic Action Party இணைந்து இந்த தேர்தலில் போட்டீயிடுகின்றார்...

அவரை பற்றிய ஊடக செய்திகள்..சில காண்க
star

மலேசியா இன்று


ஒரு சக வலைபதிவராக நாமும் அவரை வாழ்த்துவோம்...

உங்கள் கணிப்பொறிக்கு,கடவுச்சொல் வேண்டாம் , மிக முக்கியம்...!

நீங்கள் 24 மணி நேரமும்,இணைய தொடர்பில் இருக்கும்,கணிணி உபயோகிப்பாளரா..?

உங்களது கணிணி பிறர் வர இயலாத ,அல்லது தகுந்த பாதுக்காப்புள்ள இடத்தில் உள்ளதா...?

நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி உபயோகிப்பாளரா...?

ஒரே கணிணி மட்டும் பயன்படுத்துபவர்(அது உள்ள இடம் பாதுகாப்பாக இருப்பது முக்கியம்)
அல்லது அதன் மூலம் வேறோரு கணிணியை தொடர்பு கொள்ளவேண்டிய அவசியம் இல்லாதவர்..( remote )

கட்டாயமாக மடிக்கணிணிக்கு இது பயன்படாது

இவற்றிற்கு எல்லாம் ஆம் என்றால்,

சாதாரணமாக மிக எளிதான கடவுச்சொல்களை எ.கா 1234,123456,abc 123,அல்லது உங்கள் உள்நுழைவு பெயரையே(log in name)கடவுசொல்லாக பயன்படுத்துவதற்கு பதிலாக/மாற்றாக
நீங்கள் வெற்று(empty)அல்லது கடவுச்சொல் இல்லாமை(no password)முறையை பயன்படுத்தலாம்... இதனால் நம் அனுமதி இல்லாமல் நம் கணிணியுள் இணையம் மூலம் தகவல் திருடர்கள்(hackers)நுழைவது முற்றிலுமாக தடுக்கப்படும்....
கட்டாயமாக இது விண்டோஸ் எக்ஸ்பி உபயோகிப்பாளருக்கு மட்டுமே..
ஆதாரம்:

தகவல் திருட்டு&பாதுகாப்பான கடவுச்சொல் தொடர்பான ஒலி&ஒளி

Video: How to hack a Windows password

Thursday, March 6, 2008

உங்கள் கணிணி திரை சுத்தம் செய்ய,,!

உங்கள் கணிணி திரை அசுத்தமாக இருந்தால், என் நண்பன் உங்களுக்கு உதவுவான்..








எப்படி நம்ம யோசனை...

Wednesday, March 5, 2008

என் பார்வையில் மலேசியா 3 தேர்தல் நிலவரம்...

மலேசியாவின் அரசியல் கட்சிகள் குறித்து ,இந்த பதிவில் பார்த்தோம்...இப்பொழுது ஒரு சில முக்கிய தலைவர்களை& தகவல்களையும் பார்ப்போம்....

முதலில் இந்தியர்கள்


1.திரு .கர்ப்பால் சிங் - DAP Democratic Action Party

டி ஏ பி இன் தலைவர், பினாங்கு மாநில, புக்கிட்(மலை) குலுகோரில் தொகுதி,மக்களவை உறுப்பினர், தற்போதும் இங்குதான் போட்டியிடுகிறார்,வழக்குரைஞர்,சிங்கம் என மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர்...ஏன் என்றால் நாடாளுமன்றத்தில் , ஆளும் கட்சியினரின் செயல்பாடுகளை தைரியமாக விமர்சனம், கண்டனம் செய்த , செய்யும் ஒரே இந்தியர்.... அதனால் நாடாளு மன்றத்தை விட்டு 6 மாதம் விலக்கி வைக்கப்பட்டார்....1989 வருடம் இசா( ISA-Internel security act) சட்டத்தின் கீழ் முன்னால் பிரதமர் மகாதீரால் சிறை வைக்கப்பட்டவர்...

இவர் கட்டாயமாக வெற்றி பெருவார் என்று கணிக்கப்படுகின்றார்..

2.திரு .சாமிவேலு MIC Malaysian Indian congress

பெரும்பான்மை உலக தமிழர்களுக்கு , நன்கு அறிமுகம் ஆனவர்,ம இ க வின் தலைவர்,தற்போதய மலேசிய மந்திரிகளில் மூத்த அரசியல் அநுபவம் கொண்டவர்.. சிம்ம குரலோன்,தமிழர்களின் தலைவர்...( சிங்கத்தின் குகை என்று அழைக்கப்படும்) பேரா மாநில சுங்கை(ஆறு) சீப்புட், தொகுதி மக்களவை உறுப்பினர்,தற்போதும் இங்குதான் போட்டியிடுகிறார்,



இவரும் கட்டாயமாக வெற்றி பெறுவார் என்று கணிக்கப்படுகின்றார்..

3.திரு .பண்டிதன் ஐ பி எப் -Indian Progressive Front
முன்னால் ம இ க துணை தலைவர், பேரா மாநில தாப்பா தொகுதி மக்களவை உறுப்பினர்,திரு .சாமிவேலு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1988ல் ம இ க வைவிட்டு வெளியேறி,1990 IPF தொடங்கினார்,சில அதிரடி அரசியல் காட்சிகள் மூலம் மிக பரவலாக வளரவில்லை என்றாலும் , ஓரளவு மக்கள் ஆதரவை பெற்றார், 2006 ஆம் வருடம்
தீவிர உடல்நிலை குறைபாடு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்,நட்பு, மற்றும் அரசியல் காரணங்களுக்கா தேசிய முன்ணணியிலும் (BN பாரிசான் நேசனல்),ம இ கா திரு.சாமிவேலுவுடன்,கூட்டணி அமைத்து கொண்டுள்ளார்...

இந்த தேர்தலில் போட்டி இடவில்லை...

4.திரு.கேவியஸ் (PPP-People's Progressive Party)


ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணி அங்கம் வகிக்கும்,மலேசியாவின் இரண்டாவது பெரிய இந்திய கட்சியின் தலைவர்...பேரா மாநில தைப்பிங் மாநிலங்களவை உறுப்பினர்....


தைப்பிங் தொகுதியில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப் படுகிறார்...



5.கோ சூ கூன் (கெரக்கான் -Malaysian People's Movement Party)


பினாங்கு மாநில முதல்வர்,கெரக்கான் கட்சியின் தேசியதலைவர், பினாங்கு மாநில பத்து கவான் தொகுதி,மக்களவை உறுப்பினர்,கட்சியின் தேசிய தலைவராக 2007 முதல் பொறுப்பு ஏற்று கொண்டதால், இம்முறையோடு முதல்வர், பதவியில் இருந்து விலகுகிறார்...

நிச்சயம் வெற்றி பெருவார், ஏனெனில் இந்தியர்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்றுள்ளார்...


இவர்களோடு , மசிச தலைவர் திரு. ஓங் கா திங், பிரதமர் திரு .அஹமது படாவி,துணை பிரதமர் நஜீஸ்... ம இ க தலைவர்கள், திரு.சோதிநாதன்,திரு.பழனிவேல்,திருமதி .கோமளா போன்ற முன்ணனி வேட்பாளர்களும்...

முன்னால் துணை பிரதமரும், ஊழல் வழக்கில் சிறை சென்று திரும்பி,வருகிற ஏப்ரல் மாதம் வரை தேர்தலில் போட்டியிட முடியாத திரு. அன்வர் (கெடிலான்)தவிர்த்து

ஏனைய மேற்கண்ட வேட்பாளர்கள் கட்டாயமாக வெல்வார்கள்... என்று நான் எண்ணுகிறேன்

சில விபரங்கள்

முதல் முறையா இந்த தேர்தலில் அடையாள மை உபயோகப்படுத்தப்படுகின்றது...

மக்களவைக்கு போட்டி இடும் வேட்பாளர்கள்,ம வே(மலேசிய வெள்ளி)10000.00ம் வைப்பு தொகையாகவும், அதிக பட்ச செலவு ம வே-200000.00 க்கு,மிகாமலும்,மாநிலங்களவைக்கு போட்டியிடும் உறுப்பினர்கள் ம வே 5000.00ம்,வைப்பு தொகையாகவும், அதிக பட்ச செலவு ம வே-100000.00க்கு மிகாமல் இருக்க வேண்டும்..

வேட்பாளர்கள் தாங்கள் உபயோகித்த , விளம்பர தட்டி,பலகைகளை வாக்குபதிவு நடந்த 14 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்...

ஒரு ஒப்பீடு...


பொருள்கள் விலை

1.பெட்ரோல் 1 லி Rm 1.92 (unleaded)

2.குடிநீர் புட்டி 1 லி Rm 2.00 (Mineral water bottle)

இயன்ற நண்பர்கள், தாங்கள் வசிக்கும் நாட்டில் (இந்தியா உட்பட) மேற்கண்ட பொருள்களின் விலையை பின்னூட்டமிடும்மாறு கேட்டுகொள்கிறேன்..

Tuesday, March 4, 2008

என் பார்வையில் மலேசியா 2 , உண்டி 2008

மார்ச் 8, 2008 மலேசியாவின் 12 வது பொது தேர்தல்,உண்டி 2008 (மலாய் மொழியில் உண்டி என்றால் வாக்களிப்பு),தற்பொழுது தேர்தல் பரபரப்பில் உள்ளது....அது குறித்த விபரங்கள்

13 மாநிலங்களும், 3 யூனியன் பிரதேசங்களும் உள்ளடங்கி,சற்றுரேறக்குறைய சுமார், 27496000
மக்கள் கொண்ட...உலகின் 43 வது பெரிய நாடாகும், இங்கு மொத்தம் 222,டேவான் ரயாட்(மக்களவை)தொகுதிகள்,மற்றும் 505 வக்கில் ரயாட்(மாநிலங்களவை)தொகுதிகள் உள்ளன,
ஆளும் கூட்டணி கட்சிகளாக பாரிசான் நேசனல்(தேசிய முன்ணனி)உள்ளது..இதில் பெரும்பான்மை அல்லது தலைமை கட்சியாக...அம்னோ(UMNO-மலாய்)அதில் கூட்டணி கட்சிகளாக,ம சி ச(MCA-சீன),ம இ க(MIC-இந்திய)கெரக்கான்( PMP) போன்ற சற்று பெரிய கட்சிகளும், பி பி பி (PPP-இந்திய)
போன்ற 14 கட்சிகள் உள்ளன, இதுவரை அனைத்து மலேசிய பிரதமர்களும்,அம்னோ கட்சியை சார்ந்தவர்கள்...மேலும் இங்கு உள்ள 13 மாநிலங்களில் 12ல் அம்னோ தலைமையிலான,பாரிசான் நேசனல் (தேசிய முன்ணணி-Bn)உள்ளது,கிளந்தான் மாநிலம் மட்டும் பாஸ்(PAS) கட்சி வசம் உள்ளது....

முக்கிய எதிர் கட்சிகளாக கெடிலான்(PKR-) மற்றும் DAP
உள்ளன... இவை இரண்டும் கூட்டணி கட்சிகளாகும்....தவிர ம இ மு க(KIMMA),போன்றகட்சிகள் சேர்த்து 35 கட்சிகள் மொத்தம்...ஸ்ஸ்ஸ் ....
யப்பா , இப்பவே கண்ண கட்டுது....மீதி நாளைக்கு....

சில குறிப்புகள்..
முக்கிய இந்திய கட்சிகள் & தலைவர்கள்
1.ம இ க (மலேசிய இந்தியர் காங்கிரஸ்) - டத்தோ .சாமிவேலு

2.ஐ பி எப் ( இந்தியர் முன்னேற்ற முன்ணணி) - டத்தோ பண்டிதன்

3.பி பி பி(மக்கள் முன்னேற்ற முன்னணி)- டத்தோ கேவியஸ்

அதிக தகவல் தமிழில் அறிய மலேசியாஇன்று

பர பரப்பான இரண்டாவது இறுதி ஆட்டத்தில் இந்தியா வென்றது, தொடரை கைப்பற்றியது..!

ஆஸ்திரேலியாவுடனான...இரண்டாவது ஆட்டத்தில்,இந்தியா டாஸ் வென்று முதலில் இந்தியா பேட்டிங் செய்து, அபாரமாக ஆடி 50 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்பில் 258 ரன்கள் எடுத்தது..

சச்சின் டெண்டுல்கர் மிக சிறப்பாக 121 பந்துகளில் 98 ரன்களும்,யுவராஜ்38 பந்துகளில் 38 ரன்களும், தோனி 37 பந்துகளில் 36 ரன்களும் எடுத்தனர்...

பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா... அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து....49.4 ஓவர்களில்...249 ரன்கள் எடுத்து இந்தியாவிடம் பரிதாபமாக...தோற்றது....

சிறப்பாக பந்து வீசி , வெற்றிக்கு வழி வகுத்த பிரவீன் குமார் ஆட்ட நாயகனாக தேர்தெடுக்கப்பட்டார்....

தொடர் நாயகனாக நாதன் பிரெக்கன் தேர்ந்தேடுக்கப்பட்டார்..

இந்த தொடரோடு ஆடம் கில்கிறிஸ்ட் ஓய்வு பெறுகிறார்..

வாழ்த்துக்கள் இந்தியா...

விபரம் காண..
இங்கு பார்க்க

இந்தியா ,ஆஸ்திரேலியா இரண்டாவது இறுதி ஆட்ட விபரம், நேரொளி&ஒலி

ஆஸ்திரேலியாவுடனான...இரண்டாவது ஆட்டத்தில்,இந்தியா டாஸ் வென்று முதலில் இந்தியா பேட்டிங் செய்து, அபாரமாக ஆடி 50 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்பில் 258 ரன்கள் எடுத்தது..

சச்சின் டெண்டுல்கர் மிக சிறப்பாக 121 பந்துகளில் 98 ரன்களும்,யுவராஜ்38 பந்துகளில் 38 ரன்களும், தோனி 37 பந்துகளில் 36 ரன்களும் எடுத்தனர்...

தற்பொழுது ஆடி வரும் ஆஸ்திரேலியா...

6/199 42 ஓவர்கள்



இந்தியா வெற்றி பெற வாழ்த்துக்கள்....

இலவசமாக நேரொலி& ஒளி காண...

இங்கு தறவிறக்க்ம் செய்து .... பின்னர் இங்கு செல்லவும்... IE பயன்படுத்தவும்..

புதிய நிலவரம்...
1.211/6 44 ஓவர்கள்....

2.226/6 46 ஓவர்கள்...24 பந்துகளில் 33 ரன்கள்

3.237/7 ஓவர்கள்48, 3 விக்கெட்டுகள் தேவை நமக்கு

4. 246/8 49 ஓவர்கள், 2 விக்கெட்டுகள் தேவை நமக்கு இந்தியா 258/10 50 ஓவர்கள்..