Thursday, August 19, 2010

யார் இந்த உமாசங்கர்...?

ஒரு நோபால் வீசியதற்கு கோபப்படும் நாம்... !இங்கு .....................?



"உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை. புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.

நேர்மையான முறையில் வேலை பார்க்கும் ஒரு சில அதிகாரிகளையும் அதிகாரம் கொண்டும் அடக்க முயற்சிக்கும் அரசுக்கு தீவிரமான கண்டனங்கள்.. சுயலாபத்துக்காக அதிகாரிகளைப் பழிவாங்கும் போக்கினை இந்த அரசு கைவிட வேண்டும்.. துணிச்சலாக அரசை எதிர்த்து நிற்கும் உமாஷங்கரின் நேர்மையைப் பாராட்டுகிறோம்.."

அநீதிக்கு எதிரான உங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க நீங்கள் இங்கே கையெழுத்து இடலாம்.. வாருங்கள் நண்பர்களே.. பதிவர்கள் ஒன்றிணைந்து இதை சாதித்துக் காட்டுவோம்.

நன்றி :தருமி ஐயாவுக்கு
கார்த்திகைபாண்டியன்

Saturday, August 14, 2010

எது சுதந்திரம் ?


எது சுதந்திரம் ?

சுதந்திர தினமா ?
கொண்டாட்டமா ?
ஏன் ? எதற்கு ?

அடிமையாக இருந்தோமே அதற்கா
முதுகெலும்பு இல்லாமல்
அடிமையாக இருந்த
புழுக்கலுக்கு ஏது சுதந்திரம் ?

சுதந்திரம் வாங்கி தந்தார்களா ?
எந்த கடையில் ?

நாம் என்ன
சேற்றில் ஊறூம் எருமைகளா
அடிமைப் படுத்தவும் -பின்பு
சுதந்திரம் அளிக்கவும்

மனிதர்கள், தன்மானம் உள்ள மனிதர்கள்
சுதந்திரம் தின கொண்டாட்டம்
இனி தேவை இல்லை
நிறுத்திக்கொள்வோம்

சுதந்திர தினம் கொண்டாடும்
தினம் அல்ல , துக்க தினம்
இனி அப்படியே அனுசரிப்போம்
இத்தனை வருடம்
அடிமை வாழ்க்கைக்கு
எதற்கு கொண்டாட்டம்?

இது ஒரு பாடம்
வந்தவனெல்லாம் ஆண்டுவிட்டான்
இருந்ததை எல்லாம் சுறண்டிவிட்டான்
காலிப் பானையோடு
கையேந்தி நிக்கின்றோம் !


புரிகிறதா ? எது சுதந்திரம் ?
உன்னை எப்பொழுது நீ ஆள்கிறாயோ
அப்பொழுதுதான் நீ சுதந்திரம் அடைவாய்


ஆக்கம் :சுகன்யா