Wednesday, March 5, 2008

என் பார்வையில் மலேசியா 3 தேர்தல் நிலவரம்...

மலேசியாவின் அரசியல் கட்சிகள் குறித்து ,இந்த பதிவில் பார்த்தோம்...இப்பொழுது ஒரு சில முக்கிய தலைவர்களை& தகவல்களையும் பார்ப்போம்....

முதலில் இந்தியர்கள்


1.திரு .கர்ப்பால் சிங் - DAP Democratic Action Party

டி ஏ பி இன் தலைவர், பினாங்கு மாநில, புக்கிட்(மலை) குலுகோரில் தொகுதி,மக்களவை உறுப்பினர், தற்போதும் இங்குதான் போட்டியிடுகிறார்,வழக்குரைஞர்,சிங்கம் என மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர்...ஏன் என்றால் நாடாளுமன்றத்தில் , ஆளும் கட்சியினரின் செயல்பாடுகளை தைரியமாக விமர்சனம், கண்டனம் செய்த , செய்யும் ஒரே இந்தியர்.... அதனால் நாடாளு மன்றத்தை விட்டு 6 மாதம் விலக்கி வைக்கப்பட்டார்....1989 வருடம் இசா( ISA-Internel security act) சட்டத்தின் கீழ் முன்னால் பிரதமர் மகாதீரால் சிறை வைக்கப்பட்டவர்...

இவர் கட்டாயமாக வெற்றி பெருவார் என்று கணிக்கப்படுகின்றார்..

2.திரு .சாமிவேலு MIC Malaysian Indian congress

பெரும்பான்மை உலக தமிழர்களுக்கு , நன்கு அறிமுகம் ஆனவர்,ம இ க வின் தலைவர்,தற்போதய மலேசிய மந்திரிகளில் மூத்த அரசியல் அநுபவம் கொண்டவர்.. சிம்ம குரலோன்,தமிழர்களின் தலைவர்...( சிங்கத்தின் குகை என்று அழைக்கப்படும்) பேரா மாநில சுங்கை(ஆறு) சீப்புட், தொகுதி மக்களவை உறுப்பினர்,தற்போதும் இங்குதான் போட்டியிடுகிறார்,



இவரும் கட்டாயமாக வெற்றி பெறுவார் என்று கணிக்கப்படுகின்றார்..

3.திரு .பண்டிதன் ஐ பி எப் -Indian Progressive Front
முன்னால் ம இ க துணை தலைவர், பேரா மாநில தாப்பா தொகுதி மக்களவை உறுப்பினர்,திரு .சாமிவேலு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1988ல் ம இ க வைவிட்டு வெளியேறி,1990 IPF தொடங்கினார்,சில அதிரடி அரசியல் காட்சிகள் மூலம் மிக பரவலாக வளரவில்லை என்றாலும் , ஓரளவு மக்கள் ஆதரவை பெற்றார், 2006 ஆம் வருடம்
தீவிர உடல்நிலை குறைபாடு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்,நட்பு, மற்றும் அரசியல் காரணங்களுக்கா தேசிய முன்ணணியிலும் (BN பாரிசான் நேசனல்),ம இ கா திரு.சாமிவேலுவுடன்,கூட்டணி அமைத்து கொண்டுள்ளார்...

இந்த தேர்தலில் போட்டி இடவில்லை...

4.திரு.கேவியஸ் (PPP-People's Progressive Party)


ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணி அங்கம் வகிக்கும்,மலேசியாவின் இரண்டாவது பெரிய இந்திய கட்சியின் தலைவர்...பேரா மாநில தைப்பிங் மாநிலங்களவை உறுப்பினர்....


தைப்பிங் தொகுதியில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப் படுகிறார்...



5.கோ சூ கூன் (கெரக்கான் -Malaysian People's Movement Party)


பினாங்கு மாநில முதல்வர்,கெரக்கான் கட்சியின் தேசியதலைவர், பினாங்கு மாநில பத்து கவான் தொகுதி,மக்களவை உறுப்பினர்,கட்சியின் தேசிய தலைவராக 2007 முதல் பொறுப்பு ஏற்று கொண்டதால், இம்முறையோடு முதல்வர், பதவியில் இருந்து விலகுகிறார்...

நிச்சயம் வெற்றி பெருவார், ஏனெனில் இந்தியர்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்றுள்ளார்...


இவர்களோடு , மசிச தலைவர் திரு. ஓங் கா திங், பிரதமர் திரு .அஹமது படாவி,துணை பிரதமர் நஜீஸ்... ம இ க தலைவர்கள், திரு.சோதிநாதன்,திரு.பழனிவேல்,திருமதி .கோமளா போன்ற முன்ணனி வேட்பாளர்களும்...

முன்னால் துணை பிரதமரும், ஊழல் வழக்கில் சிறை சென்று திரும்பி,வருகிற ஏப்ரல் மாதம் வரை தேர்தலில் போட்டியிட முடியாத திரு. அன்வர் (கெடிலான்)தவிர்த்து

ஏனைய மேற்கண்ட வேட்பாளர்கள் கட்டாயமாக வெல்வார்கள்... என்று நான் எண்ணுகிறேன்

சில விபரங்கள்

முதல் முறையா இந்த தேர்தலில் அடையாள மை உபயோகப்படுத்தப்படுகின்றது...

மக்களவைக்கு போட்டி இடும் வேட்பாளர்கள்,ம வே(மலேசிய வெள்ளி)10000.00ம் வைப்பு தொகையாகவும், அதிக பட்ச செலவு ம வே-200000.00 க்கு,மிகாமலும்,மாநிலங்களவைக்கு போட்டியிடும் உறுப்பினர்கள் ம வே 5000.00ம்,வைப்பு தொகையாகவும், அதிக பட்ச செலவு ம வே-100000.00க்கு மிகாமல் இருக்க வேண்டும்..

வேட்பாளர்கள் தாங்கள் உபயோகித்த , விளம்பர தட்டி,பலகைகளை வாக்குபதிவு நடந்த 14 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்...

ஒரு ஒப்பீடு...


பொருள்கள் விலை

1.பெட்ரோல் 1 லி Rm 1.92 (unleaded)

2.குடிநீர் புட்டி 1 லி Rm 2.00 (Mineral water bottle)

இயன்ற நண்பர்கள், தாங்கள் வசிக்கும் நாட்டில் (இந்தியா உட்பட) மேற்கண்ட பொருள்களின் விலையை பின்னூட்டமிடும்மாறு கேட்டுகொள்கிறேன்..

4 comments:

said...

அடையாள 'மை' நீக்கப்பட்டு விட்டது! உண்'மை'யும் தான்.

said...

என் பதிவையும் படிக்கவும்.

http://karuppupaiyan.blogspot.com

said...

@வாசுதேவன் இலட்சுமணன். said...

தங்கள் வருகைகும்,மிக்க நன்றி

ஆம் அடையாள மையிடுதல் , இந்த முறை அமுல்படுத்தப் படவில்லை...

said...

@விடாதுகருப்பு

வருகைக்கு நன்றி ...

நான் அவ்வப்போது தங்கள் வலைபூவை
படிப்பதுண்டு...