Thursday, February 14, 2008

பொதுவுடமை..? காதல்.....? காதல் என்பது...?

காதல், .....?
இன்றைய இளசுகளின் கண்களில் நுழைந்து, இதயத்தை துளைப்பதோடு மட்டுமல்ல ,
அவர் தம் பெற்றோரின் பாசத்தையும் ,உற்றார் , உறவினர், நண்பர்கள், பணம், பொருள், பதவி ,ஏன் சில பல சமயங்களில்
காதலிப்பவர்களையே நொடியில் அழிக்க கூடியதும்,இனம் , மதம் , மொழி , வேறுபாடின்றி மனிதனை ஆக்கிரமிக்கும்.... காதல்......?
இதை பற்றிய என் இன்னொறு பதிவில் இட்டதை இங்கு மீள் பதிகிறேன்


காதல் ...இந்த மூன்றெழுத்து மந்திரசொல் ..... உலகில் எத்துணையோ சரித்திரங்களை ... .உருவாக்கியும் , அழித்தும் , உள்ளது , எப்படி ...

காதல் ...மனிதனுக்கு மட்டுமே வரும் ...ஒரு உன்னதமான உணர்வு...ஏன் என்றால் , எந்த விலங்குகளும் , தன் இணை மீது அதுவும் கூடும் காலங்களில் மட்டுமே ... காமத்தால் காதல் கொண்டிருக்கும்...

ஆனால் மனிதன் மட்டுமே ..

தன் இணை மீது , கல்யாணத்திற்கு முன்னும் ,கல்யாணத்திற்கு பின்பும் ,பிறப்பிலும், இறப்பிலும், அவன் ,அவள் சுக ,துக்கங்களிலும்,காதல் கொண்டிருக்கின்றான்...

ஆனால் காதல் ஆணுக்கு , பெண் மீதும், பெண்ணுக்கு ஆண் மீது வருவது இன்றி, மனிதன் தம் தாய்நாடு,மொழி, இனம், வாழ்க்கை, லட்சியங்கள் ,ஆகியவற்றின் மேலும் காதல் கொண்டிருந்தான் அதனாலேதான் வெற்றியும் ,பெறுகின்றான்...
காந்திஜி தீண்டாமை ஒழிப்பு மீதும் ..., நேதாஜி தாய் நாட்டின் மீதும், பாரதி தமிழ் மீதும்...,அம்பானி தொழில் மீதும் , கொண்ட காதலினால்தான் வெற்றியும் பெற்றார்கள்... ஹிட்லர் , மாவீரன் என்று போற்றப்படும் அலெக்சாந்தர் ,முசொலின் , மேலும் பலர்

ஆகையால் மனிதனின் காதல் மண் , பெண் , பொன் , பொருள் , இவைகளை தாண்டி வாழ்வின் ,லட்சியங்கள் ,சிந்தனைகள் மீதும் உருவாகும் போது ....அவன் வெற்றி பெற்று வரலாற்றில் ஜொலிகின்றான் ......

காதல் செய்வீர்,காதல் செய்வீர், இவ்வையகம் இன்புற ......

முதலில்...
வாழ்க்கையை காதல் செய்வீர் ,,,! வாழ்க்கையை காதல் செய்வீர் ,,,!


தலைப்புக்கு சம்பந்தமாய்.... பாலைவன் ரோஜாக்கள்





சுப்பர் ஸ்டார்


ஒரு புது படம்




Sunday, February 10, 2008

என் பார்வையில் மலேசியா...1

மலேசியாவில் கடந்த இரண்டு வருடங்களாக.. ஊர் சுற்றியதில்..........!
நான் எடுத்த புகைபடங்கள்.. எனக்கும் பிட் போட்டியில் கலந்துக்குற அளவுள பெரிய்ய்ய புகைப்பட கலைஞனா, வரணும் ஆசையில்ல.... ( அட சத்தியமாங்க...)
ஆனா நம்ம ஊரு , செல்லா அண்ணனோட ஊரு ஆச்சே... ஒரே இனம் , ரத்தம், அப்புறம்..... இருக்காத பின்னே..... எனக்கு அவரு ரொம்ப நாள் பழக்கம்,.....?

ஆனா என்ன அவருக்கு தெரியாது....ஹி ஹி ( மறப்போம் மன்னிப்போம்)
இனி நம்ம படங்கள் பேசும்......
நான் முதலில் ஊர் சுத்துன இடம் , குவான் சுவான் கோவில்... பினாங்கு அந்த புகைபடங்கள் இப்பொழுது இணைக்க இயலாததால் , முதலில் நாம் பார்க்க இருக்கும் இடம்.......
கேமரூன் மலையகம்....

கேமரூன் அப்படின்னாலே..... எனக்கும் ரொம்ப பிடித்த ஸ்டிராபெரிதான் சிறப்பு...
நாங்க முதலில் விடுதி எடுத்த உடனே போன இடம்... சின்னசாமி & மகன்கள், நடத்திவரும் பிக் ரெட் ஸ்டிராபெரி தோட்டம், மிக அழகாக பராமரிக்கின்றார்கள், நமக்கு பிடித்த பழங்களை,நாமே பறித்துக் கொள்ளலாம்

விற்பனைக்கு தயாராக ... சிறிய பழங்கள் அடங்கிய பெட்டி 1- 5 வெள்ளி
பெரிய பழங்கள் அடங்கிய பெட்டி 1- 7 வெள்ளி
நாமே பறித்தால் கிலோ 45 வெள்ளி

ஸ்டிராபெரி தோட்டம்


இளம் ஸ்டிராபெரி
மேலும் சில புகைபடங்கள
சொர்கத்தின் பறவை ( பூ)