Tuesday, August 12, 2008

ஒலிம்பிக்ஸ்...சிறப்பு புகை படங்கள்...கூல்..





Saturday, August 9, 2008

சித்தர்கள் வாழும் சதுரகிரி...1



கடந்த இந்த பதிவில் சதுரகிரி யாத்திரை பற்றி குறிப்பிட்டு இருந்தேன்....அதன் தொடராக இது...

நம் பாரத பூமியில் , பல்வேறு மகான்கள் வாழ்ந்து மறைந்துள்ளனர், இன்றும் அரூபமாக வாழ்ந்து கொண்டுஉள்ளார்கள்....கடவுள் இருக்கின்றாரா , இல்லையா என்று கேள்விகள்(என்னுள் கூட ) இன்றும் இருந்தாலும், சக மனிதர்களாக நம்மிடையே வாழ்ந்து,பல அதிசயங்கள் புரிந்த சித்தர்கள் இருந்ததை கட்டாயமாக மறுக்க இயலாது...ஆகவே...
முதலில் சித்தர்கள் அறிந்து கொள்வோம்...
அவர்களில் குறிப்பிடத்தக்க பதிணென் சித்தர்கள்,


1.திருமூலர்
2.இராமதேவர்
3.அகத்தியர்
4.கொங்கணவர்
5.கமலமுனி
6.சட்டமுனி
7.கருவூரார்
8.சுந்தரானந்தர்
9.வான்மீகர்
10.நந்தீசர்
11.பாம்பாட்டி
12.போகர்
13.மச்சமுனி
14.கோரக்கர்
15.பதஞ்சலி
16.தன்வந்திரி
17.குதம்பை
18.இடைக்காடர்

இவர்கள் அனைவரும் தம் வாழ்நாளில் ஒரு முறையாவது சதுரகிரி மலைக்கு வாசம் புரிந்துள்ளனர்...

இவர்களைப் பற்றிய, நான் புத்தகங்களில் படித்த,ஒரு சில விசயங்கள் உங்களுடன் விரைவில் பகிர்ந்துகொள்கிறேன்...

Thursday, August 7, 2008

சூரியனை விழுங்கிய பாம்பு(எ) நிலா...சூரிய கிரகணம் சில புகைபடங்கள்

சூரியனை பாம்பு விழுங்குவதாக ,நமது புராணங்களில் சொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது..ஆனால் நிசத்தில் சூரியனை விழுங்கும் பாம்பை,மன்னிக்கவும்,சூரியனை நிலா மறைக்கும் (ஆகஸ்டு-1-2008)படங்களை பாருங்கள்,

(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)
இது சைபீரியா நாட்டிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படமாகும்,ஒரு சில நிமிடங்கள் சூரியன் முழுவதுமாக மறைந்தது,இக்கிரகணம் கனடா,கீரீன்லாந்து,மத்திய இரஷ்யா,கிழக்கு கசகஸ்தான்,மேற்கு மங்கோலியா மற்றும் சீனாவிலும் முழுமையாக தெரிந்தது....!

(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)

(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)

அடுத்த சூரிய கிரகணம் , மீண்டும் 7 ஆண்டுகள் கழித்துதான் வரும்....

(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)

அடுத்த சூரிய கிரகணம் 2017 வருடம் வடக்கு அமரிக்காவிலும்,ஐரோப்பாவில் 2026லும்,ரஸ்யாவில்2030...தெரியும்....
(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)

Wednesday, August 6, 2008

என் முதல் பதிவு... இந்தியாவிலிருந்து....

இரண்டரை வருட வெளி நாட்டு வாழ்க்கை முடிந்து, இந்தியா வந்து இரண்டு மாதம் ஆகிவிட்டது...




இரண்டரை வருடமாக பிரிந்திருந்த,நண்பர்கள்,சொந்தம்,மரம், செடி ,கொடி, எல்லாதையும் பார்த்தாச்சு, ...



பயணம் முடிவான பொழுதே, கட்டாயமாக போக வேண்டும் என்று முடிவு செய்துதான் , வந்தேன், அது போல் 3 பவுணர்மிகளுக்கு ,சென்றும் வந்துவிட்டேன்...விரைவில்..அது குறித்து எழுத எண்ணம்.....சித்தர் பூமி சதுரகிரி....வெகுவிரைவில்...

க இரா.செந்தில் நாதன்...