Showing posts with label மலேசியா. Show all posts
Showing posts with label மலேசியா. Show all posts

Saturday, May 10, 2008

பயணம்.....



ஒரு சின்ன கவிதை முயற்சி.... மேலும் அதிகம் அன்புடன் பார்க்க,இதை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் போது நான் பயணித்துக்கொண்டிருப்பேன்.....

க இரா.செந்தில் நாதன்

Sunday, May 4, 2008

என் பார்வையில் மலேசியா...5

கடந்த இரண்டரை ஆண்டுகள்
மலேசிய வாசம், முற்றுப்பெருகிறது..ஆம் இந்த மாத மத்தியில் இந்தியா திரும்பவிருப்பதால்,இந்த வாழ்க்கைபயணத்தில், பல சிறந்த பாடங்கள் கற்றுத்தந்த மலேசியாவிற்கும்,மக்களுக்கும் என் நன்றிகள்,இங்கு நான் கண்டவரை , அல்லது என் வரையில் எந்தவொரு கசப்பான் சம்பவங்கள் நிகழவில்லை, ஒரு சில சிறு சிறு விசயங்கள் தவிர, பல நல்ல நண்பர்களையும்,அறிவையும் உருவாக்கியுள்ளது,

அந்த ஒருசில விசயங்கள்... விரைவில்...


இதுவரை...
என் பார்வையில் மலேசியா..1,

என் பார்வையில் மலேசியா..2,

என் பார்வையில் மலேசியா..3,

என் பார்வையில் மலேசியா..4,

இடுகைகளில் மலேசியாவில் நான் சென்றுபார்த்த ஒரு சில இடங்களில் ஒரு சில விசயங்களை பகிர்ந்து கொண்டேன்...
1.லங்காவி தீவு.. காண்க ஜில்லேன்று ஒருமலேசியா டிபிசிடி விரைவில்
2.கெண்டிங் மலைவாசற்தலம்.. இது ஒரு பொழுதுபோக்கு பூங்கா..
3.கேமரூன் மலைவாசற்தலம்.. இங்கு
4.கோலாலம்பூர் மற்றும் சுற்றுப்புறங்கள்.. விரைவில்
5.ஈப்போ லாஸ்ட் வோல்டு ஆப் தம்பூன்.. விரைவில்
6.தைப்பிங் உயிரினங்கள் காப்பகம்... விரைவில்
7.பிறை பறவைகள் சரணாலயம்..விரைவில்
8.பினாங்கு அதன் சுற்றுப்புறங்கள்..விரைவில்
9.லம்போங் பூஜோங் அருங்காட்சியகம் இதை இங்கு டிபிசிடி அவரது பதிவில் காண்க..
அதன் தொடர்ச்சியாக மலசியாவில் இந்தியர்களிடையே மிக புகழ் பெற்ற ,மாரான் திரு.மரத்தாண்டவரை இந்த இடுகையில் காண்போம்...புகைபடபதிவு...


View Larger Map


Sunday, April 13, 2008

என் பார்வையில் மலேசியா...4

மலேசியா வந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது,இந்த இரண்டு வருடங்களில் ஓரளவு சுற்றிப்பார்த்து (தெரிந்து)கொண்டுள்ளேன்,மலேசியாவில் நான் பார்த்த ஒரு சில முக்கியமான இடங்கள்...

1.லங்காவி தீவு..
2.கெண்டிங் மலைவாசற்தலம்..
3.கேமரூன் மலைவாசற்தலம்..
4.கோலாலம்பூர் மற்றும் சுற்றுப்புறங்கள்..
5.ஈப்போ லாஸ்ட் வோல்டு ஆப் தம்பூன்..
6.தைப்பிங் உயிரினங்கள் காப்பகம்...
7.பிறை பறவைகள் சரணாலயம்..
8.பினாங்கு அதன் சுற்றுப்புறங்கள்..
9.லம்போங் பூஜோங் அருங்காட்சியகம்

மேலும் பார்க்க கூடிய இடங்கள்...


மலாக்கா அதன் சுற்றுப்புறங்கள்,பங்கோர் தீவுகள்..இதில் நான்
ஏற்கனவேஇந்தபதிவில் கேமரூன் பற்றி ஓரளவு எழுதிஉள்ளேன்.. அதில் சற்று விரிவாக இன்று காண்போம்...


View Larger Map

ஈப்போவில் இருந்து புதியதாக துவங்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையில் நானும் எனது நண்பருமாக முதல் தனி சுற்றுப்பயணம் மலேசியாவில்,அதுவும் முழுக்க முழுக்க பேருந்து பயணம்....
பேருந்து ஈப்போ நிலையத்தில் நிற்கின்ற பொழுது, நான் மட்டும் கீழ் சென்று உணவு வாங்க சென்றேன்.. பேருந்தின் ஓட்டுநர் ஒரு தமிழர் , அவர் என்னை மலேசியர் என்று நினைத்துக்கொண்டார் போல,அய்யா நீ எந்த ஊர் என்றார்,( இங்கு போதுவாக இளைஞர்களை பெரியவர்கள் அன்பாக அய்யா என்றும்,இளைஞிகளை அம்மா,என்றும் அழைப்பர்) நான் பணிபுரியும் ஊரை சொன்னதோடு நான் இந்தியன் என்றும் தெரிவித்துவிட்டேன்,பிறகு ஏன் தைபூசத்திற்கு போகவில்லையா என்றார், நான் சொன்னேன் , என் நண்பன் சித்தப்பாவானதால், அவர் கலந்து கொள்ள இயலாது ,என்பதால் இருவரும் கேமரூன் வர உத்தேசித்தோம் என்றேன் , ஏற்பாடுகளை பற்றிகேட்டார்,ஒன்றும் செய்யவில்லை இனிமேல்தான் என்றோம்,எனவே அவருக்கு தெரிந்த நபரை ஏற்பாடு செய்யட்டுமா,என்றார் சரி என்றோம்,அது போல் அவர் கம்போங் ராஜா (ராஜக்களின் கிராமம்)என்ற ஊரில் ஒரு அந்த கால பென்ஸ் காருடன் (பெரும்பாலும் கேமரூனில் வாடகை ஊர்திகளாக பென்ஸ்)ஒரு ராஜா நின்றிருந்தார்..அவரது பெயர் மட்டும் தான் ராஜா,நாங்க இந்தியர்கள் என்று தெரிந்ததும்,அவர் நோக்கம் பெரும்பாலும் ,பணம் கறப்பதிலே இருந்தது,என்ன செய்வது அவர் தொழில் அப்படி...? அங்கிருந்து எங்களை ப்ரிஞ்சாங் அழைத்துச்சென்றார்,ஆனால் அப்பேருந்து ப்ரிஞ்சாங் வரை செல்லும் என்பதை பிறகு அறிந்து கொண்டேன்,கேமரூனில் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்கள்...1.பட்டாம் பூச்சிகள் பூங்கா,எனக்கு என்னவோ மனம் ஒப்பவில்லை, பட்டாம்பூச்சிகள் ஒருவித சோர்விலே இருந்தன...
அடுத்து காக்டஸ்வேலி(கள்ளிப்பூங்கா) மிக சிறப்பாக பராமரிக்கின்றார்கள்,ஓரளவு பெரிய பூங்கா,அடுத்து ஸ்ட்ராபெரி பழத்தோட்டம், நாங்கள் சின்னசாமி & மகன்கள் அவர்களது தோட்டத்திற்கு சென்றிருந்தோம்,அந்த இடுகை,,அதன் பிறகு போ டீ( BOH TEA)எனப்படும் தேயிலை தோட்டமுடனான தொழிற்சாலைக்கு சென்றிருந்தோம்,உடனடி,பச்சை,மற்றும் ஸ்டிராபெரி,எலுமிச்சை போன்ற சுவைகளில் தேயிலை வைத்திருந்தார்கள், நான் உடனடி மற்றும் எலுமிச்சை குளிர் தேநீர் இரு பொட்டலங்கள் வாங்கிக்கொண்டேன்,அங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையோர்களில் சொந்த ஊர் நாமக்கல் சுற்றுவட்டாரம் என்று , அந்த தொழிற்சாலையின் சுற்றுலாவழிகாட்டி மலேசிய இந்தியர் கூறினார்,அங்கிருந்து கிளம்பும் போது ,அந்த வாடகை ஊர்திக்கு மணி நேர அடிப்படையில் ,பேசியிருந்த போதும், அவர் எங்கள் அனுமதி இன்றி வெள்ளைகார தம்பதிகளை ஏற்றிகொண்டு வந்து,நீங்க கொஞ்சம் சமாளித்துக்கொள்ள முடியமா என்றார்,நானும் ஒன்றும் பிரச்சினை இல்லை என்று ஆங்கிலத்தில்,கூறிவிட்டு அமர்ந்து கொண்டோம்,என்ன செய்வது.?,வெள்ளைக்காரரும் உங்களுக்கு வசதிப்படுமா?என்று கேட்டார்,ஒன்றும் பிரச்சினை இல்லை சொல்லிவிட்டு,பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டோம்,அவர்கள் இங்கிலாந்து யார்க்சையர் பகுதியை சேர்ந்தவர்கள்,வட இந்திய சுற்றுப்பயணம் முடித்து,அப்படியே மலேசியா , பார்த்து தாய்லாந்து மற்றும் கம்போடியா வழியாக தம் நாடு திரும்பவிருப்பதாக கூறினார், உங்களுக்கு யார்க்சையர் தெரியுமா,,? என்றார், நான் ஓ.. கவுண்டி கிரிக்கெட்டு நடக்குமே என்றேன், நல்லது இந்தியர்கள் பெரும்பாலும் உலக நடப்புகளை தெரிந்துவைத்துள்ளீர்கள் என்றபடி,அந்த ஹர்பஜன் ,ஆண்ரு சிம்மன்ஸ் ப்ரச்சினை என்னவாயிற்று என்றார்,நான் சொன்னேன் ஆஸ்திரேலியர்களுக்கு எப்போதும் தாம் ரொம்ப உயர்ந்தவர்கள் என்ற நினைப்பு என்றேன், அவர் சொன்னார் உண்மையில் ஆண்ரு உண்மையான ஆஸ்திரேலியரே அல்ல, அவர் இங்கிலாந்தை சேர்ந்தவர் என்று கூறினார்... நான் வேகமாக அவர் ஆஸ்திரேலிய பூர்வ குடி என்று சொல்கிறனரே..என்றேன், இல்லை என் நண்பன் ஒருவனது ஊர்தான் ஆன்ருவின் சொந்த ஊர் என்றார்...அப்போழுது ஓட்டுனர் ராஜா நீங்க இங்கே இறங்கி பக்கத்தில் , ஒரு தமிழ் பள்ளி இருக்கின்றது, பார்த்து கொண்டுஇருங்கள், நான் பத்து நிமிடத்தில் இவர்களல் விட்டு விட்டு வருகிறேன் என்றுகூறினார்,எனவே நாங்கள கீழ் இறங்கி ,அத்தம்பதிகளிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டோம்...

தொடரும் பக்கங்கள்....

முந்தைய இடுகைகள்
என் பார்வையில் மலேசியா..1,

என் பார்வையில் மலேசியா..2,

என் பார்வையில் மலேசியா..3,

Wednesday, April 9, 2008

செந்தழல் ரவி , மலேசிய மூர்த்தி விவகாரம்.....

இன்று தட்ஸ்தமிழில் வெளி வந்துள்ளது....
இங்கு காண்க...

Wednesday, March 12, 2008

அழகான மலேசிய .............பாடல்கள் !

மலேசிய தமிழ் பாடல்களில் என்னை கவர்ந்த பாடல்கள் சில......

1.




2.



3.


4.


இவற்றோடு மிக மிக பிடித்த பாடல்,உன்னை தொட்டு சென்ற தென்றல் எனும் பாடல் , தாமரை பாடல் தொகுப்பு, பாடியவர் ஜெசிகா,,,,அதன் ஒளிப்படம் கிடைக்கவில்லை... உங்களிடம் இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்களேன்,,,

Friday, March 7, 2008

தேர்தலில் போட்டியிடும் வலைபதிவாளர்.....!.

வலைபதிவராகி...முழுசா ஒரு வருடம் முடியலை,வாழ்க்கையில் இன்னும்பெருசா ஒன்னும் சாதிக்கலை.... ஆனா சாதிப்பேன்...

பார்ப்போம் வாய்ப்பு கிடைத்தால், தேர்தலில் போட்டீயிடலாம்னு, நினைக்கிறேன்...?
நான் வென்ற பிறகு,எல்லோருக்கும்..இலவச கணிப்பொறி கட்டாயமாக உண்டு...

அமைதி ... அமைதி...

இப்ப விசயதிற்கு வருகிறேன்..பொதுவாழ்க்கைளிலோ, அரசியலிலோ பிரபலமா இருக்கறவங்க
தனி வலைப்பக்கமோ/வலைபதிவோ வைத்திருப்பது வழக்கமான ஒன்று...

ஆனா என்ன மாதிரி;)சரி விடுங்க மக்கா...!

ஒரு மென்பொருள் ஆலோசனையாளர், ஒரு பேச்சுக்கு சொன்னா நம்ம சிவாஜி மாதிரி...
200 கோடி மட்டும்தான் இல்ல,அதனால மக்களிடம் இருந்து நிதி திரட்டி போட்டியிடுகிறார்
இவரு


இவரு பேரு ஜெப் ஊய்

இப்ப இவரு மலேசிய அரசியலில் ஒரு முக்கிய புள்ளி,இந்த தேர்தல் 2008 பினாங்கு மாநில ஜெலுதோங் தொகுதியில் போட்டீடுகிறார்..

இவர் இதற்கு முன்னால் கெரக்கான் கட்சியிலிருந்து விலகி,DAP Democratic Action Party இணைந்து இந்த தேர்தலில் போட்டீயிடுகின்றார்...

அவரை பற்றிய ஊடக செய்திகள்..சில காண்க
star

மலேசியா இன்று


ஒரு சக வலைபதிவராக நாமும் அவரை வாழ்த்துவோம்...

Wednesday, March 5, 2008

என் பார்வையில் மலேசியா 3 தேர்தல் நிலவரம்...

மலேசியாவின் அரசியல் கட்சிகள் குறித்து ,இந்த பதிவில் பார்த்தோம்...இப்பொழுது ஒரு சில முக்கிய தலைவர்களை& தகவல்களையும் பார்ப்போம்....

முதலில் இந்தியர்கள்


1.திரு .கர்ப்பால் சிங் - DAP Democratic Action Party

டி ஏ பி இன் தலைவர், பினாங்கு மாநில, புக்கிட்(மலை) குலுகோரில் தொகுதி,மக்களவை உறுப்பினர், தற்போதும் இங்குதான் போட்டியிடுகிறார்,வழக்குரைஞர்,சிங்கம் என மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர்...ஏன் என்றால் நாடாளுமன்றத்தில் , ஆளும் கட்சியினரின் செயல்பாடுகளை தைரியமாக விமர்சனம், கண்டனம் செய்த , செய்யும் ஒரே இந்தியர்.... அதனால் நாடாளு மன்றத்தை விட்டு 6 மாதம் விலக்கி வைக்கப்பட்டார்....1989 வருடம் இசா( ISA-Internel security act) சட்டத்தின் கீழ் முன்னால் பிரதமர் மகாதீரால் சிறை வைக்கப்பட்டவர்...

இவர் கட்டாயமாக வெற்றி பெருவார் என்று கணிக்கப்படுகின்றார்..

2.திரு .சாமிவேலு MIC Malaysian Indian congress

பெரும்பான்மை உலக தமிழர்களுக்கு , நன்கு அறிமுகம் ஆனவர்,ம இ க வின் தலைவர்,தற்போதய மலேசிய மந்திரிகளில் மூத்த அரசியல் அநுபவம் கொண்டவர்.. சிம்ம குரலோன்,தமிழர்களின் தலைவர்...( சிங்கத்தின் குகை என்று அழைக்கப்படும்) பேரா மாநில சுங்கை(ஆறு) சீப்புட், தொகுதி மக்களவை உறுப்பினர்,தற்போதும் இங்குதான் போட்டியிடுகிறார்,



இவரும் கட்டாயமாக வெற்றி பெறுவார் என்று கணிக்கப்படுகின்றார்..

3.திரு .பண்டிதன் ஐ பி எப் -Indian Progressive Front
முன்னால் ம இ க துணை தலைவர், பேரா மாநில தாப்பா தொகுதி மக்களவை உறுப்பினர்,திரு .சாமிவேலு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1988ல் ம இ க வைவிட்டு வெளியேறி,1990 IPF தொடங்கினார்,சில அதிரடி அரசியல் காட்சிகள் மூலம் மிக பரவலாக வளரவில்லை என்றாலும் , ஓரளவு மக்கள் ஆதரவை பெற்றார், 2006 ஆம் வருடம்
தீவிர உடல்நிலை குறைபாடு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்,நட்பு, மற்றும் அரசியல் காரணங்களுக்கா தேசிய முன்ணணியிலும் (BN பாரிசான் நேசனல்),ம இ கா திரு.சாமிவேலுவுடன்,கூட்டணி அமைத்து கொண்டுள்ளார்...

இந்த தேர்தலில் போட்டி இடவில்லை...

4.திரு.கேவியஸ் (PPP-People's Progressive Party)


ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணி அங்கம் வகிக்கும்,மலேசியாவின் இரண்டாவது பெரிய இந்திய கட்சியின் தலைவர்...பேரா மாநில தைப்பிங் மாநிலங்களவை உறுப்பினர்....


தைப்பிங் தொகுதியில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப் படுகிறார்...



5.கோ சூ கூன் (கெரக்கான் -Malaysian People's Movement Party)


பினாங்கு மாநில முதல்வர்,கெரக்கான் கட்சியின் தேசியதலைவர், பினாங்கு மாநில பத்து கவான் தொகுதி,மக்களவை உறுப்பினர்,கட்சியின் தேசிய தலைவராக 2007 முதல் பொறுப்பு ஏற்று கொண்டதால், இம்முறையோடு முதல்வர், பதவியில் இருந்து விலகுகிறார்...

நிச்சயம் வெற்றி பெருவார், ஏனெனில் இந்தியர்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்றுள்ளார்...


இவர்களோடு , மசிச தலைவர் திரு. ஓங் கா திங், பிரதமர் திரு .அஹமது படாவி,துணை பிரதமர் நஜீஸ்... ம இ க தலைவர்கள், திரு.சோதிநாதன்,திரு.பழனிவேல்,திருமதி .கோமளா போன்ற முன்ணனி வேட்பாளர்களும்...

முன்னால் துணை பிரதமரும், ஊழல் வழக்கில் சிறை சென்று திரும்பி,வருகிற ஏப்ரல் மாதம் வரை தேர்தலில் போட்டியிட முடியாத திரு. அன்வர் (கெடிலான்)தவிர்த்து

ஏனைய மேற்கண்ட வேட்பாளர்கள் கட்டாயமாக வெல்வார்கள்... என்று நான் எண்ணுகிறேன்

சில விபரங்கள்

முதல் முறையா இந்த தேர்தலில் அடையாள மை உபயோகப்படுத்தப்படுகின்றது...

மக்களவைக்கு போட்டி இடும் வேட்பாளர்கள்,ம வே(மலேசிய வெள்ளி)10000.00ம் வைப்பு தொகையாகவும், அதிக பட்ச செலவு ம வே-200000.00 க்கு,மிகாமலும்,மாநிலங்களவைக்கு போட்டியிடும் உறுப்பினர்கள் ம வே 5000.00ம்,வைப்பு தொகையாகவும், அதிக பட்ச செலவு ம வே-100000.00க்கு மிகாமல் இருக்க வேண்டும்..

வேட்பாளர்கள் தாங்கள் உபயோகித்த , விளம்பர தட்டி,பலகைகளை வாக்குபதிவு நடந்த 14 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்...

ஒரு ஒப்பீடு...


பொருள்கள் விலை

1.பெட்ரோல் 1 லி Rm 1.92 (unleaded)

2.குடிநீர் புட்டி 1 லி Rm 2.00 (Mineral water bottle)

இயன்ற நண்பர்கள், தாங்கள் வசிக்கும் நாட்டில் (இந்தியா உட்பட) மேற்கண்ட பொருள்களின் விலையை பின்னூட்டமிடும்மாறு கேட்டுகொள்கிறேன்..

Tuesday, March 4, 2008

என் பார்வையில் மலேசியா 2 , உண்டி 2008

மார்ச் 8, 2008 மலேசியாவின் 12 வது பொது தேர்தல்,உண்டி 2008 (மலாய் மொழியில் உண்டி என்றால் வாக்களிப்பு),தற்பொழுது தேர்தல் பரபரப்பில் உள்ளது....அது குறித்த விபரங்கள்

13 மாநிலங்களும், 3 யூனியன் பிரதேசங்களும் உள்ளடங்கி,சற்றுரேறக்குறைய சுமார், 27496000
மக்கள் கொண்ட...உலகின் 43 வது பெரிய நாடாகும், இங்கு மொத்தம் 222,டேவான் ரயாட்(மக்களவை)தொகுதிகள்,மற்றும் 505 வக்கில் ரயாட்(மாநிலங்களவை)தொகுதிகள் உள்ளன,
ஆளும் கூட்டணி கட்சிகளாக பாரிசான் நேசனல்(தேசிய முன்ணனி)உள்ளது..இதில் பெரும்பான்மை அல்லது தலைமை கட்சியாக...அம்னோ(UMNO-மலாய்)அதில் கூட்டணி கட்சிகளாக,ம சி ச(MCA-சீன),ம இ க(MIC-இந்திய)கெரக்கான்( PMP) போன்ற சற்று பெரிய கட்சிகளும், பி பி பி (PPP-இந்திய)
போன்ற 14 கட்சிகள் உள்ளன, இதுவரை அனைத்து மலேசிய பிரதமர்களும்,அம்னோ கட்சியை சார்ந்தவர்கள்...மேலும் இங்கு உள்ள 13 மாநிலங்களில் 12ல் அம்னோ தலைமையிலான,பாரிசான் நேசனல் (தேசிய முன்ணணி-Bn)உள்ளது,கிளந்தான் மாநிலம் மட்டும் பாஸ்(PAS) கட்சி வசம் உள்ளது....

முக்கிய எதிர் கட்சிகளாக கெடிலான்(PKR-) மற்றும் DAP
உள்ளன... இவை இரண்டும் கூட்டணி கட்சிகளாகும்....தவிர ம இ மு க(KIMMA),போன்றகட்சிகள் சேர்த்து 35 கட்சிகள் மொத்தம்...ஸ்ஸ்ஸ் ....
யப்பா , இப்பவே கண்ண கட்டுது....மீதி நாளைக்கு....

சில குறிப்புகள்..
முக்கிய இந்திய கட்சிகள் & தலைவர்கள்
1.ம இ க (மலேசிய இந்தியர் காங்கிரஸ்) - டத்தோ .சாமிவேலு

2.ஐ பி எப் ( இந்தியர் முன்னேற்ற முன்ணணி) - டத்தோ பண்டிதன்

3.பி பி பி(மக்கள் முன்னேற்ற முன்னணி)- டத்தோ கேவியஸ்

அதிக தகவல் தமிழில் அறிய மலேசியாஇன்று

Sunday, February 10, 2008

என் பார்வையில் மலேசியா...1

மலேசியாவில் கடந்த இரண்டு வருடங்களாக.. ஊர் சுற்றியதில்..........!
நான் எடுத்த புகைபடங்கள்.. எனக்கும் பிட் போட்டியில் கலந்துக்குற அளவுள பெரிய்ய்ய புகைப்பட கலைஞனா, வரணும் ஆசையில்ல.... ( அட சத்தியமாங்க...)
ஆனா நம்ம ஊரு , செல்லா அண்ணனோட ஊரு ஆச்சே... ஒரே இனம் , ரத்தம், அப்புறம்..... இருக்காத பின்னே..... எனக்கு அவரு ரொம்ப நாள் பழக்கம்,.....?

ஆனா என்ன அவருக்கு தெரியாது....ஹி ஹி ( மறப்போம் மன்னிப்போம்)
இனி நம்ம படங்கள் பேசும்......
நான் முதலில் ஊர் சுத்துன இடம் , குவான் சுவான் கோவில்... பினாங்கு அந்த புகைபடங்கள் இப்பொழுது இணைக்க இயலாததால் , முதலில் நாம் பார்க்க இருக்கும் இடம்.......
கேமரூன் மலையகம்....

கேமரூன் அப்படின்னாலே..... எனக்கும் ரொம்ப பிடித்த ஸ்டிராபெரிதான் சிறப்பு...
நாங்க முதலில் விடுதி எடுத்த உடனே போன இடம்... சின்னசாமி & மகன்கள், நடத்திவரும் பிக் ரெட் ஸ்டிராபெரி தோட்டம், மிக அழகாக பராமரிக்கின்றார்கள், நமக்கு பிடித்த பழங்களை,நாமே பறித்துக் கொள்ளலாம்

விற்பனைக்கு தயாராக ... சிறிய பழங்கள் அடங்கிய பெட்டி 1- 5 வெள்ளி
பெரிய பழங்கள் அடங்கிய பெட்டி 1- 7 வெள்ளி
நாமே பறித்தால் கிலோ 45 வெள்ளி

ஸ்டிராபெரி தோட்டம்


இளம் ஸ்டிராபெரி
மேலும் சில புகைபடங்கள
சொர்கத்தின் பறவை ( பூ)




Wednesday, December 19, 2007

இங்கிலாந்து ராணியின் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட , கோரிக்கைகளின் முகப்பு....


மலேசிய நிலமையை பற்றி.. முந்தய பதிவில் கூறி உள்ளேன்...
நம்ம மலேசிய சகோதரர்களின் , கோரிக்கைகளை அண்ணன் TBCD , வலைப்பதிவிட்டு இருந்தார், அதன் தொடர்ச்சியாக.... அவர்களது கோரிக்கைகளின் முகப்பு , இங்கிலாந்து ராணியின் முன் சமர்பிக்க பட்டத்தட்கு சாட்சி...

பி .கு : இது இங்கிருந்து சுடப்பட்டது




Saturday, November 24, 2007

மலேய்சியா , உரிமை..

கடந்த சில மாதங்களாக , மலேய்சியாவில் பரபரப்பாக பேசப்படும் , விவாதிக்கப்படும் விசயம் , இன்று நான் ஒரு வலைப்பூவில் கண்டேன் , இந்தியர்களின் உரிமைகள் மறுக்கப்டுகின்றதா , என் என்னுலும் கேள்விகள் ,ஒரு இந்தியனாய் , இருந்து கொண்டு , என்னால் அமைதியாக பார்க்க மற்றும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள மட்டும் , இயன்றது ... வேதனைக்குறியது... அதை உங்களுடன் பகிர்ந்து , உங்கள் கருத்துகளையும் ,அறிய விளைகின்றேன்....

வலைப்பூ.. ( இங்கு சொடுக்கவும்)

இதை பற்றிய செய்தி ஸ்டார் பார்க்கவும்...

இவ்வியககத்தின் இணையம்

அன்புடன்

இரா .செந்தில் நாதன்