Tuesday, October 30, 2007

சுகாதார முன்னேற்றம்....!

முதல் முறையாக , நம்ம தமிழ்நாட்டில் , சென்னையில் இருந்து 30 கீ மீ, தொலைவில் உள்ள திருவாடந்தை , எனும் ஊரில் உள்ள பெண்கள் உயர் நிலை பள்ளியில், தானியங்கி சுகாதார குட்டை , வழங்கும் , இயந்திரத்தை நிறுவி உள்ளார்கள் , அதை பற்றிய ஒளி, ஒலி... இங்கே





இதன் மூலம், இப் பள்ளி கூடத்தில், வருகைப்பதிவு , எண்ணிக்கை உயருவதாக கூறினாலும், கட்டாயமாக அம் மாணவிகளின் சுகாதாரம் ஒரு படி உயர்ந்து உள்ளதை மறுக்க இயலாது, ஒரு முன் மாதிரி பள்ளிக்கூடம்... இதை அனைத்து பள்ளிகளிலும் கூட நடைமுறை படுத்தலாம்.

அன்புடன்
கரா. செந்தில் நாதன்

நன்றி
IBN LIVE

Monday, October 1, 2007

இந்தியாவின், முன்னேற்றம்...?

சேது சமுத்திர திட்டம்... சுற்றுப்புற சூழலை , சிறிது பாதித்தாலும்,பொதுவான பல பயன் கொண்டு ,( வேலை வாய்ப்பு ,பொருளாதார முன்னேற்றம் ) பெரும்பான்மையோர்॥ வரவேற்கின்றனர்.... நானும் கூட... செய்தி
ஹிந்துஸ்தான் டைம்ஸ் ,மற்றும் ஜூ வி....
சேது பாலத்தின் திட்ட மதிப்பு..2004 ஆம் வருடம்.. ரூபாய் 2400 கோடி... 2005 இல் திட்டம் துவங்கும் போது ( மணல் அள்ள ஆரம்பித்த பொழுது) , ஏறக்குறைய திட்ட மதிப்பு.. ரூபாய் 3500 கோடி , ஆனால் தட்போதைய நிலவரப்படி ரூபாய் 4000 கோடிகள் வரை , இத் திட்டத்தை முடிக்க தேவைப்படலாம்... ஆக பற்றாக்குறை... 1500 கோடிகள்....( அரசியல் வியாதிகளுக்கு ரொம்ப கம்மித்ான்) இதை எவ்வாறு ஈடு செய்வர்......( எல்லாம் நாம் வரி பணம் தாங்க) ? இந்நிலையில்... 01-10-07
அன்று தமிழக அரசு ,பொதுவேலை நிறுத்த, அழைப்பு அறிவிக்கின்றது... நல்ல வேளையாக நீதிமன்றம் தடை உத்தரவு போட்டது , நாட்டில் இன்றும் நீதி மன்றங்கள் , முறையாக , செயல்படுகின்றன என்பதை சுட்டியும் காட்டின... ஆனாலும் போது வேலைனிறுத்தத்ிக்கு பதில் உண்ணாவிரதம் ...என்று ஆனது... நடந்தது சற்று ஏறக்குறைய , வேலை நிறுத்தம் தான்... இதன் விளைவுகளை பார்ப்போம்.... முதலில் பொருளாதார ரீதியாக பார்ப்போம்... முதலில் கோவை மாவட்டம் திருப்பூர், சுமார் ரூபாய் 50000 கோடி வருட வியாபாரத்தில் ,ஒரு நாளைய இழப்பு சுமார் 100 கோடி,(ஆதாரம் : http://en.wikipedia.org/wiki/Economy_of_Tamil_Nadu) அடுத்து கரூர் சுமார் 13500 கோடி வருட வியாபாரத்தில் , ஒரு நாளைய இழப்பு 36 கோடி... இப்படி 29 மாவட்டங்களில் சுமாராக சுமாராக சொன்னாலே... இப்படி
இது போக சுமாராக 62400000 பேர் கடைசி கணக்கு எடுப்பின் படி , இதில் குழந்தைகள், முதியவர்கள் , ஊனமுற்றோர் , மற்றும் நம்ம அரசியல்வாதிகளையும் கணக்கில் விட்டுவிட்டு( ஏன் என்றாள் அவர்கள் நாடு முன்னேற , கால, நேர , பாகுபாடு இன்றி தொண்டு செய்பவர்கள்) பாதி பேரை, கணக்கில் எடுத்துக்கொள்வோம்... சுமார் 30000000 மக்கள் உடைய மனித மணி நேரங்கள் ..... வீணடிக்கப்பட்டன.... இது சற்று ஏறக்குறைய மலேய்சியாவின் மொத்த மக்களின் உழைப்புக்கு ஈடாகும்... ஜப்பானின் அரை பங்கு மக்களின் உழைப்பிட்கு ஈடாகும்....


இப்படியே நாம் பயணித்தால் ...விரைவில்....இந்தியா முன்னேறி விடும்.. 2020 இலக்கை அடைந்து விடலாம்....

அன்புடன்
கரா. செந்தில் நாதன்