1 அடி 11இஞ்சுகள், அவரின் மொத்த எடை சராசரி இரண்டு வயது குழந்தையைவிட குறைவாக 5 கிலோகிராம்கள் மட்டுமே...

அவர் வசிக்கும் நாக்பூரின் செல்ல ராணி இவரே,மக்கள் இவரை கடவுளின் குழ்ந்தையாக எண்ணி வழிபடுகின்றனர்.. ஆயிரத்திலோருத்தி,அல்லது ஈராயிரத்திலோருத்தியோ அல்ல... 25000 பேரில் ஒருத்தி..ஆம் மரபணுக்கோளாறால் ஏற்படும் அக்கொன்ரோபிலேசியா எனும் குறைபாடு 25000 பேரில் ஒருவருக்கே ஏற்படுமாம்...

14 வயதான ஜோதி... சராசரி மாணவிகள் போல் பள்ளி செல்கிறார்,
குள்ளையாக இருப்பதால் அனைவரது கவனமும் தன் மேல் இருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும்,மும்பை போன்ற பெரிய நகரத்தில் வேலை செய்பவராகவும்,உலகின் பல நகரங்களுக்கு பிரயாணம் செய்யவும் விரும்புகிறார்....

அவருக்கு மிக பிடித்த பஞ்சாபி பாடகர்,மைகா சிங்குடன் ஒரு இசை தொகுப்பும்,ஒரு புகழ் பெற்ற நடிகை ஆவதுமே தன் இலட்சியம் என்று கூறுகிறார்....
ஜோதியைவிட்டு ஒரு நாள் கூட பிரிந்து இருக்க இயலாது என அவரது பெற்றோர்கள் கூறுகிறனர்...

ஜோதியின் குட்டி முகத்தில் ,மங்காத புன்னகை தவழ நாம் வாழ்த்துவோம்...
தகவல் : தின அஞ்சல்
2 comments:
சுவாரசியமான செய்தி; அவர் முகத்தில் என்றும் சிரிப்பிருக்கட்டும்.
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
சுவாரசியமான செய்தி; அவர் முகத்தில் என்றும் சிரிப்பிருக்கட்டும்.
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் திரு.யோகன்,
ஜொலிக்கட்டும் ஜோதி...
Post a Comment