Monday, January 14, 2008

நமீதாவுடன் ஒரு பொங்கல்...

தைபொங்கள்..இன்பம் கூடி , துன்பம் விலக்கும் , நாள்...வாசல் பொங்கல்,
மாட்டு பொங்கல்,காணும் பொங்கல்,மஞ்சு விரட்டு( அதுதான் தடை போட்டுடாங்களே) இப்படி , இருக்கிறவன் , இல்லாதவன், படிச்சவர் , என்ன மாதிரி படிக்காதவங்கன்னு...
எல்லோரும் , வித விதமா பொங்கல் கொண்டாடுறாங்க,,வித்தியாசமா ...?
இந்த வருசம் பொங்கலை நமீதாவுடன் கொண்டாடலாம் வாங்க...
இங்கே வாங்க.....!

ஏன்னா அவங்களுக்கு உங்கள மாதிரி , நண்பர்கள்,சகோதர , சகோதரிகள் உதவி செஞ்சாதான் பொங்கல் , மட்டும் இல்லை... மத்த எல்லாமே...



தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்.....


அன்புடன்

கஇரா.செந்தில் நாதன்

Wednesday, January 9, 2008

அயல் நாட்டில் வசிக்கும் இந்தியர்களின்...... உதவிக்கு...?




வெளிநாடுகளி
ல் பணிபுரியும் ந்திய தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு உதவுவதற்கான 24 மணி நேர உதவி மையத்தை பிரதமர் மன்மோகன் சிங் இன்று துவக்கி வைத்தார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு , இந்த உதவி மையத்தை துவக்கி வைத்த பிரதமர், இந்த உதவி மையம் பல்வேறு மொழிகளில் இயங்கும் என்று தெரிவித்தார்.

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களின் பிரச்சனைகளில் தலையிட்டு அவர்களின் குறைகளை தீர்க்கவும்,தேவையான தகவல்களை அளிக்கவும்,இந்த மையம் உதவும் என்றார்.

இது ஒரு முன்னோடியான முயற்சி.இந்த மையம் நீண்ட காலத்திற்கு செயல்பட்டு, சட்டப்பூர்வமான வெளிநாட்டு சேவைகளை ஊக்குவிக்கும் என்று தாம் நம்புவதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

உடனடியாக செயல்பாட்டுக்கு வந்துள்ள இந்த உதவி மையத்தை 1800 - 11 - 3090 என்ற கட்டணமில்ல தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தங்களது பிரச்சனைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என வெளிநாட்டு இந்திய விவகாரங்களுக்கான அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துளன.

நன்றி யாகூ தமிழ்

அன்புடன்
இரா.செந்தில் நாதன்

Sunday, January 6, 2008

உலகின் மிக சிறந்தவர்கள்.....

அரிது , அரிது , மானிடராய் பிறத்தல் அரிது........!

மானிடராயினும் கூன் , குருடு செவிடு, நீக்கிப் பிறத்தல் அரிது ....

இது அவ்வைப்பிராட்டி சொன்னது...

கூன் , குருடு , செவிடாக இல்லாமல் பிறந்த எல்லோருமே.. நல்லவராக , சிறந்தவர்களாகவா வாழ்கின்றார்கள்...?

எத்தனை.. எத்தனை ...! பொய், புரட்டு , கபடம்... சுய லாபம் , சுய நலம், சுரண்டல்... பெண்கொடுமை, திருட்டு , இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...

எல்லா செல்வமும் கொண்ட ஒருவன் தர்மம் பண்ணுவது , எளிது ,
அது ஒரு பெரிய ஆச்சரிய பட கூடிய விசயமும் இல்லை, ஆனால் அவனும் நல்லவன்.... ஆனா...

அடுத்த வேளை உணவோ , அல்லது , ஏழ்மையில் உள்ள ஒருவன் அடுத்தவனுக்கு உதவுகிறான் என்றால்..அது ஆச்சரிய படகூடிய , பாராட்டப் படக்கூடிய ஒன்று...

அதுபோல , எல்லா உடல் உறுப்புகளும் , சரியாக இருந்து , சரியாக வேலை செய்யும் மனிதன், பாடினால், ஆடினால் , கவிதை எழுதினால், அது அவனோட ஒரு சிறப்பு...
அதுவே...காது கேட்காத , கண் தெரியாத , பேச இயலாத , கை, கால்கள் , நன்றாக வளராத... மனிதர்கள்... தம் சுய வேலைகளை தாமே செய்வது கடினம்...

ஆனால் அவர்கள் பாடுகிறார்கள் , ஆடுகின்றார்கள்,
அவர்களை இப்படி உற்சாகமான மனிதர்களாக மாற்றி , துள்ளித்திரிய விட்ட திரு.லாரன்சும், அவருடைய.. குழுவைசேர்ந்தவர்களுமே....என் பார்வையில் உலகின் மிக சிறந்தவர்கள்....

நீங்களும் உங்க கருத்தை சொல்லுங்களேன்....




பிரம்மனின் ( அப்படி இருந்தால்) மற்றுமொரு வரைந்து முடிக்க படாத ஓவியம்....


ஒலி, ஒளி காண்க...

Double Click on the Video Player to view fullscreen. PART 01-02













Full Screen
PART 01
PART 02


அன்புடன்

இரா .செந்தில் நாதன்
நன்றி..
ஆ.வி
சன் குழுமம்