Sunday, March 9, 2008

தாயை கொல்லும் தமையர்கள்....1

மானிடராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா....!

ஆம் மனிதர்களாய் இப்பூவுலகில் நாம் பிறந்திருக்க எனக்கு தெரிந்து நிச்சயம் இருவருக்கு நன்றிகள் சொல்லவேண்டும்...! அவர்கள் நம் பெற்றோர்கள்.....!

பெற்றோர்கள் என்பதோடு...படைத்தவர்கள் என்பதும் பொருந்தும்....
அவர்களில் தந்தை என்பவரை விட தன் உயிரூட்டி நம் உயிருடல் வளர்க்கும் அன்னையே மிக மேலானவர்..

உயிர்ப்பித்த பின்னரும் நம் உடல் ,உயிர் வளர்க்க , தன் செங்குருதியை,வெண்ணிற தாய்பாலாக்கி நம்மை உயிரை வளர்க்கிறார்.... நம் அன்னை....


ஒரு சில நேரங்களில் நோயுற்ற அன்னைகள் தாய்ப்பால்,தர இயலாத போதும்,இயற்கையின் விளைவுகளின் போதும்,வளர்ப்பு /வாடகை தாய்மார்கள்,பாலூட்டுவார்கள்..அது இயலாத பொழுதும், நாம் நடக்க ஆரம்பித்த /எந்தவொரு காரணத்தினாலோ தாய்ப்பால் கிடைக்காத பொழுது.... நம்மை வளர்க்கும்/ வாழவைக்கும் மற்றுமொரு தாய் தாய்ப்பசு....



உயிர்ப்பித்து,உருவாக்கிய அன்னைக்கு நிகராக நாம் ஒப்பிடுவதும், நம்மை தாங்கும் தாய் நாடு,பண்பு, புரிதல்களை போதிக்கும் தாய்மொழி,இவற்றிற்கு, ஈடாக பசுத்தாயும் நம்மை வளர்ப்பதில்/வாழ்விப்பதில் பெரும் பங்கு வகிக்கிறாள் என்பது மறுப்பதற்கில்லை..

நமக்கு பெற்ற தாய் மட்டுமே பாலூட்டுவாள்,ஒரு சிலருக்கு, சில சமயங்களிலேதான் வளர்ப்பு தாய் பாலூட்டுவாள்,இதிலும் மனிதனால் இன, சமய,சாதிகள் புகுத்துவிடப்படுகின்றது...ஆனால் இன,மத,மொழி,சாதி,சமய,நாடு போன்ற வேறுபாடுகள் பார்க்காது, தம் குருதியை நம் உயிர்,உடல் வளர்க்க கொடுக்கும் தாயை கொல்லும் தின்பது
எந்த வகையில் நியாயம்...?

இதுவரை பால்/பால் சார்ந்த பொருள்களை உண்ணாதவர் எவெரேனும் உள்ளீரா..?

அப்படி சாப்பிட்டுள்ளீர்கள் என்றால் , கட்டாயம் நீங்கள் பசுத்தாயின் புதல்வர்கள்..!
புலால் உண்ணும் போது நினைவு கொள்வீர் தோழர்களே...


சிலர் கேட்கலாம் பால் சைவமா, அல்லது அசைவமா என்று...?
நான் அகவை 16 முதல் என் சுய விருப்பத்தின்படி சைவனானேன்,ஒரிரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்த பொழுது ,பால் அசைவம் என்று எண்ணி மிக கடினப்பட்டு, ஏன் என்றால் அன்றாடம் உட்கொள்ளும் தேநீர்/காபி, தயிர் ,மோர் , நெய் மற்றும் எனக்கு பிடித்த இனிப்புகள் பால்கோவா,குலோப்ஜாமூன் போன்ற பால்/பால் சார்ந்த பொருட்களை முற்றிலுமாக ஏறக்குறைய 1 வருடம் தவிர்த்திருந்தேன்,( என் தமக்கைகு நன்றி, அவர்களும் சைவராகிவிட்டாகள்)ஆனால் தொடர்ந்து கடைபிடிக்க இயலாமல், மருத்துவரின் அறிவுரையோடு (நமது இந்தியர்களின் உணவில் தயிர்/ மோர்/நெய் போன்ற பால் மற்றும் சார்ந்த பொருட்கள் பெரும்பான்மை வகிப்பதோடு,உடற்குளிர்ச்சி/அழகு-வெயிலின் கொடுமை தவிர்க்க/ஆரோக்கியதிற்கும் உதவுவதால்)மீண்டும் உள்கொள்ள ஆரம்பித்தேன்...

ஆனாலும் பால் சைவமா அசைவமா என்று தெளிவில்லை,அக்காலகட்டத்தில் அய்யா அக்கினிச்சிறகு அவர்களின் பதிவில் பின்னூட்டமிட்டு இக்கேள்விகேட்டதற்கு...
Blogger emperor said...

திரு அக்னி சிறகு , அவர்களுக்கு , என் அன்பு வணக்கம்.........
உங்களது சைவம் , அசைவம் பற்றிய கட்டுரைகளை ,படித்தேன்...மிக அருமை...நானும் கடந்த ஒன்பது வருடங்களாக ,சைவ உணவை உட்கொண்டு வருகின்றேன்,தட் பொழுது மலேசியாவிலும், சிறிதே கடினம்... ஆனால் பால் மற்றும் பால் ,பொருட்களும் ,சைவமா ,அசைவமா....நானும் ஓர் வருடங்கள் விலக்கி இருந்தேன்... மீண்டும் உடல் சூட்டின் காரணமாக , மோர் , மற்றும் பால் பொருட்கள் சாப்பிட்டுகின்றேன்...தயவு செய்து விளக்கம் வேண்டும்
அன்புடன்
இரா . செந்தில் நாதன்
அன்புடன்

அவர் அளித்த விளக்கம்...

Blogger அக்னி சிறகு said...

பால் எப்படி உற்பத்தியாகிறது என்று பார்ப்போம். பால் பசு, கன்று ஈன்ற பிறகு உற்பத்தியாக தொடங்குகிறது. கன்று குடித்தது போக மீதிப்பால் தான் நமது முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. வலுக்கட்டாயமாக எடுக்கப்படுவதில்லை. கருமையம் பற்றிய விளக்கத்தின்படி பசு பால் உற்பத்தி செய்யும்போது எந்த துன்ப உணர்வையும் அனுபவிப்பதில்லை. அதனால் பாலில் உள்ள செல்களில் எந்த துன்ப உணர்வும் இயற்கையில் கிடையாது. அதனால் பால் குடிப்பதால் நீங்கள் எந்த உணர்வையும் அல்லது காந்த அலையையும் பால் வழியாக பெறுவதில்லை.(சிலர் பால் பசுவின் ரத்தினால் ஆனது என்று கூட சொல்லலாம். குழப்பிக்கொள்ள வேண்டாம்.)

இதன்படி பால் சைவ உணவே. மோர், தயிர் எதுவேண்டுமானாலும் உணவாக கொள்ளலாம். குழப்பம் வேண்டாம்.

நான் தெளிவு பெற்றென்.... நீங்கள்....?

மீண்டும் தொடர்வேன்...

0 comments: