Friday, November 30, 2007

ஆசை நாயகன் அஜித் , சங்கரின் ரோபோ....?






தலய பத்தி , ஒரு பதிவு எழுதவில்லை என்றால் , எப்படி என்னை பதிவராக ஏற்றுக்கொள்வார்கள்... ஆதலால் இது
நான் அஜித் ரசிகன் இல்லை , ஆனால் அஜித்தை பிடிக்க காரணம் , எந்த பின்புலமும் இல்லாமல் , தம் சுய உழைப்பால் , உயர்ந்தவர் , பலரை உயர்விததவர் , பந்தா இல்லாதவர் , அதிக தன்னம்பிக்கை உள்ளவர் , ஆனால் இவரை தலை கணம் ,கொண்டவர் என புரிந்து கொள்ள பட்டவர்,

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளி& ஒலிபரப்பான நிகழ்ச்சியில் அவரது குணாதிசயங்களை காணலாம்... அண்ணன் TBCD வலைப்பூவில் பார்க்கவும்


இப்போதான் சூடான செய்தி
தொடர்ந்து , வெற்றிகளையும் , சர்ச்சைகளையும் , குவித்து வரும் , தமிழ் திரை உலகின் , நாளைய,இயக்குநர்களின் ,தலைவன் , கனவு தொழில்சாலையினை புதிய பரிணாமத்தின், வெற்றிகளுக்கு கொண்டு சென்ற திரு .சங்கரின் , கனவு படமான ரோபோ , அதில் சாருக்கான் தயாரித்து , நடிபபதாக இருந்தது.. ஆனால் இப்போது திரு .அஜித் ,மற்றும் சங்கரும் இணைந்துள்ளார்கள் , என்பது செய்தி....
அன்புடன்

இரா .செந்தில் நாதன்

Saturday, November 24, 2007

மலேய்சியா , உரிமை..

கடந்த சில மாதங்களாக , மலேய்சியாவில் பரபரப்பாக பேசப்படும் , விவாதிக்கப்படும் விசயம் , இன்று நான் ஒரு வலைப்பூவில் கண்டேன் , இந்தியர்களின் உரிமைகள் மறுக்கப்டுகின்றதா , என் என்னுலும் கேள்விகள் ,ஒரு இந்தியனாய் , இருந்து கொண்டு , என்னால் அமைதியாக பார்க்க மற்றும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள மட்டும் , இயன்றது ... வேதனைக்குறியது... அதை உங்களுடன் பகிர்ந்து , உங்கள் கருத்துகளையும் ,அறிய விளைகின்றேன்....

வலைப்பூ.. ( இங்கு சொடுக்கவும்)

இதை பற்றிய செய்தி ஸ்டார் பார்க்கவும்...

இவ்வியககத்தின் இணையம்

அன்புடன்

இரா .செந்தில் நாதன்

Wednesday, November 7, 2007

நம்பிக்கை ஒளி

இணையத்தில் பார்த்த படம் ,
ஒரு சிறிய அல்ல சற்றே பெரிய குடும்பம், அவர்கள் உறங்க கூட , போதிய இடமில்லை , ஆனாலும் உயிர்களின் மேல் கருணை ,கொண்டு தம் வளர்ப்பு பிராணிகளுக்கு , தம் சிறு படுக்கையில் ,
இடம் கொடுத்து ,மழைநீர் கூரையில் இருந்து ,ஒழுகும் போதும் கூட, அவர்களின் முகத்தில் உள்ள ,நிம்மதியான புன்னகையை , பாருங்கள் , அத்தனை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை ,

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது , பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை அல்ல,
வாழ்க்கையே பிரச்சினையாய் உள்ளவர்கள் , மகிழ்ச்சியாய் வாழும் பொழுது ,நம் வாழ்க்கையில் உள்ளவை பிரச்சினையே அல்ல, கிடைத்த வாழ்க்கையை , மனம் நிறைவாக ஏற்று , மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வோம்...

இருளை அகற்றும் ஒளி போல், நாம் மனத்தில் உள்ள கவலைகளை நம்பிக்கை எனும் ஒளி(உழி ) கொண்டு அகற்றி ,வாழ்வு செழிக்க
அனைத்து நல் இதயங்களுக்கும் , உள்ளம் கனிந்த , தீபத்திருநாள் வாழ்த்துகள்...

அன்புடன்

கரா .செந்தில் நாதன்

Tuesday, October 30, 2007

சுகாதார முன்னேற்றம்....!

முதல் முறையாக , நம்ம தமிழ்நாட்டில் , சென்னையில் இருந்து 30 கீ மீ, தொலைவில் உள்ள திருவாடந்தை , எனும் ஊரில் உள்ள பெண்கள் உயர் நிலை பள்ளியில், தானியங்கி சுகாதார குட்டை , வழங்கும் , இயந்திரத்தை நிறுவி உள்ளார்கள் , அதை பற்றிய ஒளி, ஒலி... இங்கே





இதன் மூலம், இப் பள்ளி கூடத்தில், வருகைப்பதிவு , எண்ணிக்கை உயருவதாக கூறினாலும், கட்டாயமாக அம் மாணவிகளின் சுகாதாரம் ஒரு படி உயர்ந்து உள்ளதை மறுக்க இயலாது, ஒரு முன் மாதிரி பள்ளிக்கூடம்... இதை அனைத்து பள்ளிகளிலும் கூட நடைமுறை படுத்தலாம்.

அன்புடன்
கரா. செந்தில் நாதன்

நன்றி
IBN LIVE

Monday, October 1, 2007

இந்தியாவின், முன்னேற்றம்...?

சேது சமுத்திர திட்டம்... சுற்றுப்புற சூழலை , சிறிது பாதித்தாலும்,பொதுவான பல பயன் கொண்டு ,( வேலை வாய்ப்பு ,பொருளாதார முன்னேற்றம் ) பெரும்பான்மையோர்॥ வரவேற்கின்றனர்.... நானும் கூட... செய்தி
ஹிந்துஸ்தான் டைம்ஸ் ,மற்றும் ஜூ வி....
சேது பாலத்தின் திட்ட மதிப்பு..2004 ஆம் வருடம்.. ரூபாய் 2400 கோடி... 2005 இல் திட்டம் துவங்கும் போது ( மணல் அள்ள ஆரம்பித்த பொழுது) , ஏறக்குறைய திட்ட மதிப்பு.. ரூபாய் 3500 கோடி , ஆனால் தட்போதைய நிலவரப்படி ரூபாய் 4000 கோடிகள் வரை , இத் திட்டத்தை முடிக்க தேவைப்படலாம்... ஆக பற்றாக்குறை... 1500 கோடிகள்....( அரசியல் வியாதிகளுக்கு ரொம்ப கம்மித்ான்) இதை எவ்வாறு ஈடு செய்வர்......( எல்லாம் நாம் வரி பணம் தாங்க) ? இந்நிலையில்... 01-10-07
அன்று தமிழக அரசு ,பொதுவேலை நிறுத்த, அழைப்பு அறிவிக்கின்றது... நல்ல வேளையாக நீதிமன்றம் தடை உத்தரவு போட்டது , நாட்டில் இன்றும் நீதி மன்றங்கள் , முறையாக , செயல்படுகின்றன என்பதை சுட்டியும் காட்டின... ஆனாலும் போது வேலைனிறுத்தத்ிக்கு பதில் உண்ணாவிரதம் ...என்று ஆனது... நடந்தது சற்று ஏறக்குறைய , வேலை நிறுத்தம் தான்... இதன் விளைவுகளை பார்ப்போம்.... முதலில் பொருளாதார ரீதியாக பார்ப்போம்... முதலில் கோவை மாவட்டம் திருப்பூர், சுமார் ரூபாய் 50000 கோடி வருட வியாபாரத்தில் ,ஒரு நாளைய இழப்பு சுமார் 100 கோடி,(ஆதாரம் : http://en.wikipedia.org/wiki/Economy_of_Tamil_Nadu) அடுத்து கரூர் சுமார் 13500 கோடி வருட வியாபாரத்தில் , ஒரு நாளைய இழப்பு 36 கோடி... இப்படி 29 மாவட்டங்களில் சுமாராக சுமாராக சொன்னாலே... இப்படி
இது போக சுமாராக 62400000 பேர் கடைசி கணக்கு எடுப்பின் படி , இதில் குழந்தைகள், முதியவர்கள் , ஊனமுற்றோர் , மற்றும் நம்ம அரசியல்வாதிகளையும் கணக்கில் விட்டுவிட்டு( ஏன் என்றாள் அவர்கள் நாடு முன்னேற , கால, நேர , பாகுபாடு இன்றி தொண்டு செய்பவர்கள்) பாதி பேரை, கணக்கில் எடுத்துக்கொள்வோம்... சுமார் 30000000 மக்கள் உடைய மனித மணி நேரங்கள் ..... வீணடிக்கப்பட்டன.... இது சற்று ஏறக்குறைய மலேய்சியாவின் மொத்த மக்களின் உழைப்புக்கு ஈடாகும்... ஜப்பானின் அரை பங்கு மக்களின் உழைப்பிட்கு ஈடாகும்....


இப்படியே நாம் பயணித்தால் ...விரைவில்....இந்தியா முன்னேறி விடும்.. 2020 இலக்கை அடைந்து விடலாம்....

அன்புடன்
கரா. செந்தில் நாதன்

Thursday, September 6, 2007

தங்கள்... கருத்து...?(யார் காரணம்..?)


நன்றி









IBN LIVE
http://www.ibnlive.com/videos/47974/exsupermodel-begs-for-a-living-sleeps-on-streets.html

ஒற்றுமையின் , பலம்.... ?

நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை..?