
எது சுதந்திரம் ?
சுதந்திர தினமா ?
கொண்டாட்டமா ?
ஏன் ? எதற்கு ?
அடிமையாக இருந்தோமே அதற்கா
முதுகெலும்பு இல்லாமல்
அடிமையாக இருந்த
புழுக்கலுக்கு ஏது சுதந்திரம் ?
சுதந்திரம் வாங்கி தந்தார்களா ?
எந்த கடையில் ?
நாம் என்ன
சேற்றில் ஊறூம் எருமைகளா
அடிமைப் படுத்தவும் -பின்பு
சுதந்திரம் அளிக்கவும்
மனிதர்கள், தன்மானம் உள்ள மனிதர்கள்
சுதந்திரம் தின கொண்டாட்டம்
இனி தேவை இல்லை
நிறுத்திக்கொள்வோம்
சுதந்திர தினம் கொண்டாடும்
தினம் அல்ல , துக்க தினம்
இனி அப்படியே அனுசரிப்போம்
இத்தனை வருடம்
அடிமை வாழ்க்கைக்கு
எதற்கு கொண்டாட்டம்?
இது ஒரு பாடம்
வந்தவனெல்லாம் ஆண்டுவிட்டான்
இருந்ததை எல்லாம் சுறண்டிவிட்டான்
காலிப் பானையோடு
கையேந்தி நிக்கின்றோம் !
புரிகிறதா ? எது சுதந்திரம் ?
உன்னை எப்பொழுது நீ ஆள்கிறாயோ
அப்பொழுதுதான் நீ சுதந்திரம் அடைவாய்
ஆக்கம் :சுகன்யா
4 comments:
good...
நன்றி...!ரீகன்,,!
ரொம்ப அற்புதம். தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டுருக்கும் இந்த காட்சிகளையும், திடீர் ஞானோதய நிகழ்ச்சிகளையும் பார்க்கும் போது இது ஒரு நாடக ஒத்திகையோ என்று தான் தோன்றுகிறது. ஏதோ ஒன்று நம் மக்களுக்கு தேவைப்படுகிறது. இப்போது இந்த சுதந்திரக் காட்சிகள் என்பது பொழுது போக்கு காட்சி போல் மாறிக் கொண்டுருக்கிறது.
நீங்கள் சொன்ன உணர்பவர்கள் யார்?
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..!ஜோதிஜி..!
ஏதோ ஒன்று நம் மக்களுக்கு தேவைப்படுகிறது.
உண்மை
நானும் உணர முயற்சிப்பவேனே,,,
உணர்ந்தவர்கள்...?
Post a Comment