Sunday, April 13, 2008
ரத்தன் டாடாவுக்கு ஒரு கடிதம்...?
இந்தியாவின் முன்னெற்ற காரணிகளில் ஒருவரும்,சிறந்த மேலாண்மையாளரும்
கட்டுமானம்,மூலப்பொருள்கள்,சேவைத்துறை,நுகர்வோர் ,அறிவியல் தொழில்நுட்பம் என பரந்து விரிந்து கிடக்கும் சாம்ராஜ்யத்தின் மன்னரான திரு.ரத்தன் டாடா அவர்களே....
என் போன்ற இளைஞர்களுக்கு முன்னுதாரணமான...உங்களுக்கு ஒரு வேண்டுகோள்,
ஆலிவர் ரிட்லி,கடல்வாழ் ஆமைகளில் சிறிய வகைகளில் ஒன்று,இதன் இதய வடிவ ஆலிவ் நிறத்திற்காக இப்பெயர் பெற்றது...உலக இயற்கை மற்றும் இயற்கை வள பாதுகாப்பு நிறுவனத்தின் அழிந்துவரும் உயிரினங்களின் சிவப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளது... இதன் முக்கிய இனப்பெருக்க நிலப்பகுதி இந்தியாவில் இந்தியப்பெருங்கடல்கரைகளான,ஒரிசாவின் தேவி,காகிர்மாதா,ருசிகுல்யா ஆகிய பகுதிகளாகும்...
View Larger Map
இங்கு தாம்ராவில் தங்களது டாடா நிறுவனத்தால் கட்ட திட்டமிடப்பட்டுள்ள துறைமுகத்தால்,ஏறக்குறைய 150000,முதல் 350000 ஆமைகளது இனப்பெருக்கம் பாதிக்கப்படக்கூடும்,
(ஏற்கனவே எண்ணெய் ,எரிவாயு கிணறு தோண்டுதலினால் கடந்த 10 வருடங்களில் ஏற்கனவே 100000 மேற்பட்ட ஆமைகள் இறந்திருக்கின்றன) எனவே தாங்கள் சுற்றுப்புற ,உயிரிகளின் நலன் கருதி கட்டவிருக்கும் துறைமுகத்தை அதிக பாதிப்பளிக்காத அருகில் உள்ள வேறு ஏதேனும் இடத்திற்கு மாற்ற வேண்டுகின்றேன்....
மூலம் : பச்சைஅமைதி
ஆர்வமுள்ளவர்கள் தொடர்புகொள்ள :witness@in.greenpeace.org
விக்கி
Labels:
green peace,
letter,
Olive Ridley,
ratan tata,
request,
கடிதம்,
ரத்தன் டாடா,
வேண்டுகோள்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
:-(
மக்கள் தங்கள் முன்னேற்றம் என்ற குறுகிய பார்வையில் அடுத்த தலைமுறையை ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும் ..
மக்கள் தங்கள் முன்னேற்றம் என்ற குறுகிய பார்வையில் அடுத்த தலைமுறையை ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும் ..
சுய நலம் என்றுகூட கூறலாம்..
மறுக்க முடியாத உண்மை....
தங்கள் வருகைகும் , கருத்துக்கும் நன்றி நண்பரே...
Post a Comment