Monday, January 14, 2008

நமீதாவுடன் ஒரு பொங்கல்...

தைபொங்கள்..இன்பம் கூடி , துன்பம் விலக்கும் , நாள்...வாசல் பொங்கல்,
மாட்டு பொங்கல்,காணும் பொங்கல்,மஞ்சு விரட்டு( அதுதான் தடை போட்டுடாங்களே) இப்படி , இருக்கிறவன் , இல்லாதவன், படிச்சவர் , என்ன மாதிரி படிக்காதவங்கன்னு...
எல்லோரும் , வித விதமா பொங்கல் கொண்டாடுறாங்க,,வித்தியாசமா ...?
இந்த வருசம் பொங்கலை நமீதாவுடன் கொண்டாடலாம் வாங்க...
இங்கே வாங்க.....!

ஏன்னா அவங்களுக்கு உங்கள மாதிரி , நண்பர்கள்,சகோதர , சகோதரிகள் உதவி செஞ்சாதான் பொங்கல் , மட்டும் இல்லை... மத்த எல்லாமே...



தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்.....


அன்புடன்

கஇரா.செந்தில் நாதன்

Wednesday, January 9, 2008

அயல் நாட்டில் வசிக்கும் இந்தியர்களின்...... உதவிக்கு...?




வெளிநாடுகளி
ல் பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு உதவுவதற்கான 24 மணி நேர உதவி மையத்தை பிரதமர் மன்மோகன் சிங் இன்று துவக்கி வைத்தார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு , இந்த உதவி மையத்தை துவக்கி வைத்த பிரதமர், இந்த உதவி மையம் பல்வேறு மொழிகளில் இயங்கும் என்று தெரிவித்தார்.

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களின் பிரச்சனைகளில் தலையிட்டு அவர்களின் குறைகளை தீர்க்கவும்,தேவையான தகவல்களை அளிக்கவும்,இந்த மையம் உதவும் என்றார்.

இது ஒரு முன்னோடியான முயற்சி.இந்த மையம் நீண்ட காலத்திற்கு செயல்பட்டு, சட்டப்பூர்வமான வெளிநாட்டு சேவைகளை ஊக்குவிக்கும் என்று தாம் நம்புவதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

உடனடியாக செயல்பாட்டுக்கு வந்துள்ள இந்த உதவி மையத்தை 1800 - 11 - 3090 என்ற கட்டணமில்ல தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தங்களது பிரச்சனைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என வெளிநாட்டு இந்திய விவகாரங்களுக்கான அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துளன.

நன்றி யாகூ தமிழ்

அன்புடன்
இரா.செந்தில் நாதன்

Sunday, January 6, 2008

உலகின் மிக சிறந்தவர்கள்.....

அரிது , அரிது , மானிடராய் பிறத்தல் அரிது........!

மானிடராயினும் கூன் , குருடு செவிடு, நீக்கிப் பிறத்தல் அரிது ....

இது அவ்வைப்பிராட்டி சொன்னது...

கூன் , குருடு , செவிடாக இல்லாமல் பிறந்த எல்லோருமே.. நல்லவராக , சிறந்தவர்களாகவா வாழ்கின்றார்கள்...?

எத்தனை.. எத்தனை ...! பொய், புரட்டு , கபடம்... சுய லாபம் , சுய நலம், சுரண்டல்... பெண்கொடுமை, திருட்டு , இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...

எல்லா செல்வமும் கொண்ட ஒருவன் தர்மம் பண்ணுவது , எளிது ,
அது ஒரு பெரிய ஆச்சரிய பட கூடிய விசயமும் இல்லை, ஆனால் அவனும் நல்லவன்.... ஆனா...

அடுத்த வேளை உணவோ , அல்லது , ஏழ்மையில் உள்ள ஒருவன் அடுத்தவனுக்கு உதவுகிறான் என்றால்..அது ஆச்சரிய படகூடிய , பாராட்டப் படக்கூடிய ஒன்று...

அதுபோல , எல்லா உடல் உறுப்புகளும் , சரியாக இருந்து , சரியாக வேலை செய்யும் மனிதன், பாடினால், ஆடினால் , கவிதை எழுதினால், அது அவனோட ஒரு சிறப்பு...
அதுவே...காது கேட்காத , கண் தெரியாத , பேச இயலாத , கை, கால்கள் , நன்றாக வளராத... மனிதர்கள்... தம் சுய வேலைகளை தாமே செய்வது கடினம்...

ஆனால் அவர்கள் பாடுகிறார்கள் , ஆடுகின்றார்கள்,
அவர்களை இப்படி உற்சாகமான மனிதர்களாக மாற்றி , துள்ளித்திரிய விட்ட திரு.லாரன்சும், அவருடைய.. குழுவைசேர்ந்தவர்களுமே....என் பார்வையில் உலகின் மிக சிறந்தவர்கள்....

நீங்களும் உங்க கருத்தை சொல்லுங்களேன்....




பிரம்மனின் ( அப்படி இருந்தால்) மற்றுமொரு வரைந்து முடிக்க படாத ஓவியம்....


ஒலி, ஒளி காண்க...

Double Click on the Video Player to view fullscreen. PART 01-02













Full Screen
PART 01
PART 02


அன்புடன்

இரா .செந்தில் நாதன்
நன்றி..
ஆ.வி
சன் குழுமம்


Sunday, December 30, 2007

எழு...! இந்தியா ...! எழு....!


மங்களம் பொங்க , துன்பங்கள் விலகி ,இனி வரும் புத்தாண்டு அமைய,எல்லாம் வல்ல அருபேராற்றல்...அருள்புரியட்டும்.....
இனி ஒலி& ஒளி உங்களுக்காக...
ஒரு தலைவன் உருவாகின்றான்,



ஏ.ஆர் .ரகுமான்



சங்கர் ஹசான் லாய்





அமிதாப்..



Saturday, December 29, 2007

இந்தியா வல்லரசு ஆகுமா ?-1



அனைவருக்கும் நன்றிகள், இந்தியா வல்லரசாகுமா...? என்றால்

இந்தியா இப்பவே வல்லரசு நாடு தானையா !
என்று சொல்கின்றீர்.... ஒரு வகையில் , சந்தோசம் , ஒரு வகையில் வேதனை...?
உண்மைக்கு எளிமையே போதும். புள்ளி விவர பக்கங்கள்
தேவையில்லை...
ஆம் தேவை இல்லை , கேட்டு , கேட்டு புள்ளி விவரங்கள் நமக்கு புளித்து விட்டனவோ என்னவோ...
ஆனால் புள்ளி விவரங்களே நாட்டின் உண்மையான நிலவரங்களை கூறும்,
நமக்கென்ன நம் வீட்டில் உலை கொதிக்கின்றது , அது போதும் என்ற மனப்பான்மை...
பக்கத்துவீட்டில் , குண்டு வெடித்தால் கூட நம் வீட்டு சுவரிற்கு பாதிபில்லை , என்றால் சரி..
ஏன் ..? முன் பின் அறிமுகம் , இல்லாதவர் கூட பரவாஇல்லை, உறவிற்கு கூட மதிப்பில்லை..
அண்ணன் , தம்பிக்கு கூட உதவுவதில்லை ,இப்படியெ வாழ்ந்து பழகிவிட்டோம் , இப்படியே போனால் கணவன் ,மனைவி , உறவு கூட அமேரிக்காவை போல் மாறலாம், ஒரு நாள் கணவன் , அல்லது ஒரு நாள் மனைவி....

அமேரிக்க அதிபரின் செல்ல நாயின் பெயர்....... ?

மனிதம் , மறைந்து கொண்டு இருக்கின்றது , நாமோ குளு குளு அறையில் அமர்ந்து , கூழுக்கு இல்லாதவன் பற்றி பேசி , பேசி மாள்கின்றோம்...


ஒரு நாளில் இந்தியாவில் ஒரு வேளை உணவு இல்லாமல் , இறக்கும் இந்தியன் இன்னும் 7000.00 பேர், ஆனால் நாமோ உண்டு கொழுத்து , கொழுத்ததை கரைக்க, கடல் கரையில் ஓடிக்கொண்டு இருக்கின்றோம்...

என்ன விந்தய் , நான் ஒன்றும் அனைவரும் பட்டினி கிடக்க வேண்டும் என்று கூறவில்லை , நம் பகட்டை குறைத்து , பாசத்தையும் , நேசத்தையும் பெருக்கி , நம்மால் இயன்ற ஒரு வேளை , அல்லது , ஒரு கவளம் உணவோ, பணமோ , பொருளோ , பிறருக்கு கொடுத்து உதவலாம்....

கணினி வழி அன்னதானம்

சுகாதாரத்தில் சமீபத்தில் இந்திய புள்ளி விவரங்களைப் பாருங்கள்.


Align Center
1. பேறு காலத்தில் இரத்தசோகை (Anemia) யால் பாதிக்கப்படும் பெண்கள் அதிகம் இருக்கும் நாடு இந்தியா (88% விழுக்காடு).

ஏன் என்று கேள்வி எழுப்பினால், 88% விழுக்காடு பெண்களும் , ஏழைகளா ..? இல்லை நாகரீக மோகம் , இளநீரும் , பழரசமும் பருகியவர்கள் , பெப்சி , கோலா குடிக்கின்றார்கள் , அடை தோசை , கேழ்வரகு தோசை போய்...பான் பீசா , பர்கர் என்று உண்பதால் ,


2. ஐந்து வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளில் 80% பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 46% பேர் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் (எத்தியோபியா, சோமாளியாவில் கூட இது 36%தான்.)( கேவலம்)

ஆக எத்தியோப்பியாவும் , சோமாலியாவும் , கூட ஆரோக்கியம் அற்ற வல்லரசுகள்...?
நாகரீக மோகத்தின் உச்சம் இதுதான்... இளம் தளிர்களும் விதி விதிவிலக்கா என்ன ?
வருங்கால இந்தியா , வளமாக இருக்கும்...?

3. பெரியவர்களிடத்தும் சத்துக்குறைவு பாதிப்பு 40%_ல் உள்ளது.

இவர்கள் பாவம் , ஓடி , ஆடி , முடங்கி கிடப்பவர்கள் , ஒரு காலத்தில் தம் உயிர் கொடுத்து நம் இன்னுயிர் வளர்த்தவர்கள் , இவர்களை கவனிக்க நமக்கு நேரம் ஏது , நாமே வெந்ததையும் , வேகாததையும் தின்று அலைகின்றோம்,

4. மூன்று வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளில் 50% பேர் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். (இதைச் சொல்லும் பத்திரிகைகள் அது அடித்தட்டு / தாழ்த்தப்பட்ட சாதி மக்களிடம்தான் அதிகம் இருப்பதைச் சொல்லாமல் விடுவது எதனால்?)

, எப்போ பார் , அடித்தட்டு , தாழ்த்தப்பட்ட் சாதினு , சொல்றேள்..., அவங்கிட்ட 1 கோடி கொடுத்து பாருங்க , அப்ப அவங்களும் உயர்சாதி , உயர்சாதிதான் , சுரண்டனும் , சுரண்டனும் , மூட்டை தூக்கி , கல் உடைத்து , சாக்கடை , மலம் , அள்ளி இப்படி திருட்டு தனமா சம்பாதிக்கின்ற மக்களிடம் இருந்தும் ,

நேர்மையா மக்களின் வரிப்பணத்தில் , உழைப்பை உருஞ்சும் உயர்ந்தவங்க உயர்சாதின்னா என்ன செய்வது...

5. இந்தியாவில் 77% மக்கள் நாள் ஒன்றுக்கு ரூ.20 மட்டுமே கூலியாகப் பெறுகின்றனர். அதில் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர்தான் அதிகம்.

எப்படிங்க அதிகம் தருவார்கள், அவர்கள் உயர்ந்துவிட்டால் , இவனுகளுக்கு உழைபதற்கு , உருஞ்சுவதற்கு ஆள் வேண்டுமே...

முதலாளி பெரிய முதலாளியாக , வாழ்ந்து , சமூக செம்மலாகிச்சாகின்றான், தொழிலாளியோ , தொழிலாளியாகவே வாழ்ந்து மடிகின்றான்...

ஏன் இந்த சமூக அவலம் , சமூக ஏற்ற தாழ்வு,...?

தனிமனிதர்களுடைய



1.சுய நலம் , தான் , தன் குடும்பம் வாழ யாரையும் , கெடுக்கலாம் என்ற எண்ணம்,



2.தனிமனித ஒழுக்கம் இன்மை , அவன் வாழ்வில் ஒழுக்கம் இல்லாதவர்கள், இங்கு தலைவராகிறாகள்,அவனையும் நாய் போல்
பின்பற்று கிறார்கள், இங்கு ஒழுக்கம் என்பது யாதெனில்... நேரம் தவறாமை , போன்றவை அல்ல..
உண்மையாய் இருத்தல் ,முதலில் தன் மனசாட்சிக்கு ( அப்படின்னா..?) உண்மையானவனாய் இருத்தலும் ,தம் சுற்றம், குடும்பம் , நண்பன்..ஆகியோர்கள் இடத்திலும் , உண்மையை , சொல் , செயலிலும் நிலை நிறுத்துதல்...

இல்லையேல் தனிமனித ஒழுக்கமின்மை சமுதாய சீர்கெடுகலிலேமுடியும்..

உதாரணமாக கணவன் , மனைவியிடமும் , மனைவி கணவனிடமும் உண்மையாய் இல்லாவிட்டால் , முதலில் குடும்பமும் , அதன் தொடர்வாக சமுதாயமும் , அவர்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்ட ஆளில்லாமல் எதிர்கால சமுதாயமும் கெடும்...




3.பேராசை
எல்லாம் இருக்கும் அவனிடம் , அவனோ ஒன்றுமே இல்லை என்றால் தன்னடக்கம்,... எல்லாம் வைத்துக்கொண்டு , இன்னும் அலைவதே பேராசை..
பேராசை பிடித்த செல்வச்சீமான்களே உணருங்கள்...




4. புகழ்
இந்தப்போதை ஏறிவிட்டால் , பிணமும் கூத்தாடும் ,இது முதலில் மனிதனிற்கு அடிமை , பின்னர் அவனை அடிமை யாக்கும்...
இந்த போதையிலே மூழ்கி மூச்சிழந்தவர் ஏராளம்... மூழ்கடிக்கப்பட்டவர்களும் ஏராளம்...

ஆட்சியாளர்களின் அவலம்..
கஞ்சிக்கு வழி இல்லாத போதும் , கட்சிக்கொடிதூக்கி , ஓட்டு கேட்பவனுக்கும்,
இந்த முறையாவது நம்ம கஷ்டம், தீராதா என்று நம்பிகையுடன் ஒட்டுப்போடும் சாராசரி இந்திய குடிமகனும் குடிக்க சுத்தமான தண்ணீரே கிடைப்பதில்லை , அப்படி கிடைத்தால் குடி நீர் வரி, 0.25 காசுகள் , அதுவும் வாரம் இரு முறை மட்டும் ,ஆனால் குளு குளு அறையில் வசிக்கும் , இந்தியாவின் வருங்கால தான் தோன்றி தூண்கள் , குடிக்கும் குளிர்பான தயாரிப்பு தொழில் சாலைக்கு இருபத்தினான்கு மணி நேரமும் செல்லும் தண்ணீர் விலை 0.05 காசுகள் , அவனோ இரண்டு நிமிட விளம்பரதிற்கு 2 கோடி, செலவு செய்கின்றான், அதுவும் சுவை மிகுந்த நீரையே தயாரிக்க பயன் படுத்துவான், விற்பனை 1 லிட்டர் 50.00 ரூபாய்...சராசரி இந்தியர்களின் 2 பேருடைய இரண்டரை நாள் சம்பளம்.....
இதற்கு மட்டும் தாராள்மாக நீர் தரும் அரசு ...?



நீங்கள் குடிக்க வேண்டாம் என்று கூறவில்லை , உங்கள் உழைப்பு , உங்கள் பணம் ,அதில் நீங்கள் 5 இள நீர் குடிக்கலாம், அல்லது 3 தண்ணீர் கலக்காத,பழரசம் குடிக்கலாம், ஆரோக்கியம் கூட...... சிந்தியுங்கள்..... இளைஞர்களே.....!



புத்தாண்டு வருகின்றது , இனி வரும் ஆண்டிலாவது நம்மால் இயன்ற , சிறு சிறு உதவிகள் , நாம் தாய் தேசத்திற்கு , நம் சமுதாயதிற்கு , நம் மக்களுக்கு உதவுவதோடு, தேர்ந்தெடுத்து வாங்குதல் , மூலமும்...



நம் வாழ்வில் சுய ஒழுக்கம் , உண்மை யாய் இருத்தல்... சுய நலம் , பேராசை , புகழுக்கு அடிபணியாமல்.... சமூக ஏற்ற தாழ்வினை , ஒழிக்க நம் பங்கினை ஆற்றுவோம்.....



தமிழர்கள் என்று கூறி ஒன்று படுவோம் , தமிழன என்று மட்டும் தனித்திராமல்....!


தமிழையும் வளர்ப்போம் , மற்ற மொழிகளை அழிக்காமல்..?



இந்தியர்களாய் இணைவோம்.... இனி ஒரு புதுப் பாரதம் படைக்கவே...!


என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..!


அன்புடன்
இரா .செந்தில் நாதன்

நன்றி : செம்மலர் & அக்னி சிறகு

பி .குறிப்பு -
இவை யாவும் என் சொந்த கருத்துக்கள், ஒரு சராசரி இந்திய இளைஞனாய் , என்னுள் தோன்றிய கருத்துக்கள் , யாரையும் புண் படுத்தும் நோக்கத்துடன் எழுதப்படவில்லை , அங்ஙனம் இருந்தால் தெரியப்படுத்தவும் .......



Friday, December 28, 2007

இந்தியா வல்லரசு ஆகுமா ?

இந்தியா வல்லரசு ஆகுமா...?

இன்றைய இந்தியர்கள் , குறிப்பாக இளைஞர் மனதில் எழும் கேள்வி...?


இந்தியாவில் மட்டுமல்ல , பெரிய அண்ணன் அமரிக்கா, சீனா , போன்ற நம்ம நலம் விரும்பிகளும் எதிர்பார்க்கும் ,பயப்படும் விசயம்....


இந்த கேள்விக்கும் எனக்கும் ஒரு தொடர்பு உண்டு..... நான் பள்ளிக்கூடம் படிக்கும் காலத்தில் ( உண்மை ) இந்த தலைப்பிலே மூன்று முறை பேசி வென்றும் உள்ளேன், அப்பொழுதே க்ரையொஜெனிக் , போன்று மேற்கோள் காட்டி இந்தியா , கட்டாயம் வல்லரசு ஆகும் என்றும் கூறினேன், மூன்றாம் வருடம் இதே தலைப்பில் பேசியபோது ,எனது ஆசிரியையே பொருமை இழந்து , நீயும் மூன்று வருடங்களாக பேசிகொண்டுதான் இருக்கின்றாய், எப்ப இந்தியா வல்லரசாகும்னு..? கேட்டாங்க...

அதுக்கு நான் இப்போதான் படித்து கொண்டு இருககின்றோம் , நாங்க வந்து இந்தியாவை வல்லரசா ஆக்குவோம் என்று சொன்னேன்...

இப்படி இருக்க... இயக்குனர் சீமான் என்ன கூறுகின்றார் , என்பதை பாருங்கள்



இவை கூறுவதும் ஏற்று கொள்ளகூடியதாகத்தான் உள்ளது...

எப்படியோ , இனியாவது நாம் திருந்தி , வீ ட்டை மற்றும் அல்லாது நாட்டையும் முன்னெற்றுவோம்....

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் , இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்....



அன்புடன்

இரா.செந்தில் நாதன்

Thursday, December 27, 2007

தமிழ் வளர்ப்போம் , வாருங்கள்.... இயக்குனர் சீமான்

இது நாள் வரை , தம்பி பட இயக்குனர் சீமானை , ஒரு சராசரி சினிமா இயக்குனராக நினைதிருந்தேன்...

அவரின் தம்பி , படம் பார்த்த அனைவரையும் , பாதித்து இருக்கும் என்று நினைக்கின்றேன்,,

கதா நாயகன் ,சராசரி சினிமா இலக்கணங்களை உடைத்து, கோட்டு , சூட்டு போடுவதில்லை, பாரீன் காரில் வருவதும் இல்லை, அட.... கூலிங் கிளாஸ் கூட அணிவதில்லை,

அவன் செய்யும் காரியங்களூம்,சிந்திக்க தெரிந்த சாதாரண மனிதன் , சமுதாய சீர்கேடுகலால் ,உந்தப் பட்டு , பொருமை இழந்து செய்வனவே...



அதன் இயக்குனர் சீமான் , தன் தாய் மொழியின் நிலமை கண்டு.... பொங்கி எழுகின்றார்.... தமிழினமே..சிந்திப்பீர்....




அவரின் தமிழ் பற்று குறித்தும் , பிற மொழிகற்றல் குறித்து கூறும் போது ,
ஒரு வீட்டிற்க்கு எத்தனை... சன்னல்கள் வேண்டுமாணாலும், இருக்கலாம் , அது போன்று பிற மொழிகளும் ,வீட்டின் நுழைவாயில் போல் தமிழ் என்கிறார்...




இவர் கூற்றிலும் உண்மை உள்ளது , தமிழர்களே சிந்திப்பீர்...

அன்புடன்

இரா .செந்தில் நாதன்