அரிது , அரிது , மானிடராய் பிறத்தல் அரிது........!
மானிடராயினும் கூன் , குருடு செவிடு, நீக்கிப் பிறத்தல் அரிது ....
இது அவ்வைப்பிராட்டி சொன்னது...
கூன் , குருடு , செவிடாக இல்லாமல் பிறந்த எல்லோருமே.. நல்லவராக , சிறந்தவர்களாகவா வாழ்கின்றார்கள்...?
எத்தனை.. எத்தனை ...! பொய், புரட்டு , கபடம்... சுய லாபம் , சுய நலம், சுரண்டல்... பெண்கொடுமை, திருட்டு , இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...
எல்லா செல்வமும் கொண்ட ஒருவன் தர்மம் பண்ணுவது , எளிது ,
அது ஒரு பெரிய ஆச்சரிய பட கூடிய விசயமும் இல்லை, ஆனால் அவனும் நல்லவன்.... ஆனா...
அடுத்த வேளை உணவோ , அல்லது , ஏழ்மையில் உள்ள ஒருவன் அடுத்தவனுக்கு உதவுகிறான் என்றால்..அது ஆச்சரிய படகூடிய , பாராட்டப் படக்கூடிய ஒன்று...
அதுபோல , எல்லா உடல் உறுப்புகளும் , சரியாக இருந்து , சரியாக வேலை செய்யும் மனிதன், பாடினால், ஆடினால் , கவிதை எழுதினால், அது அவனோட ஒரு சிறப்பு...
அதுவே...காது கேட்காத , கண் தெரியாத , பேச இயலாத , கை, கால்கள் , நன்றாக வளராத... மனிதர்கள்... தம் சுய வேலைகளை தாமே செய்வது கடினம்...
ஆனால் அவர்கள் பாடுகிறார்கள் , ஆடுகின்றார்கள்,
அவர்களை இப்படி உற்சாகமான மனிதர்களாக மாற்றி , துள்ளித்திரிய விட்ட திரு.லாரன்சும், அவருடைய.. குழுவைசேர்ந்தவர்களுமே....என் பார்வையில் உலகின் மிக சிறந்தவர்கள்....
நீங்களும் உங்க கருத்தை சொல்லுங்களேன்....
பிரம்மனின் ( அப்படி இருந்தால்) மற்றுமொரு வரைந்து முடிக்க படாத ஓவியம்....
ஒலி, ஒளி காண்க...
Double Click on the Video Player to view fullscreen. PART 01-02
Full Screen
PART 01
PART 02
அன்புடன்
இரா .செந்தில் நாதன்
நன்றி..
ஆ.வி
சன் குழுமம்
Sunday, January 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment