Saturday, December 29, 2007

இந்தியா வல்லரசு ஆகுமா ?-1



அனைவருக்கும் நன்றிகள், இந்தியா வல்லரசாகுமா...? என்றால்

இந்தியா இப்பவே வல்லரசு நாடு தானையா !
என்று சொல்கின்றீர்.... ஒரு வகையில் , சந்தோசம் , ஒரு வகையில் வேதனை...?
உண்மைக்கு எளிமையே போதும். புள்ளி விவர பக்கங்கள்
தேவையில்லை...
ஆம் தேவை இல்லை , கேட்டு , கேட்டு புள்ளி விவரங்கள் நமக்கு புளித்து விட்டனவோ என்னவோ...
ஆனால் புள்ளி விவரங்களே நாட்டின் உண்மையான நிலவரங்களை கூறும்,
நமக்கென்ன நம் வீட்டில் உலை கொதிக்கின்றது , அது போதும் என்ற மனப்பான்மை...
பக்கத்துவீட்டில் , குண்டு வெடித்தால் கூட நம் வீட்டு சுவரிற்கு பாதிபில்லை , என்றால் சரி..
ஏன் ..? முன் பின் அறிமுகம் , இல்லாதவர் கூட பரவாஇல்லை, உறவிற்கு கூட மதிப்பில்லை..
அண்ணன் , தம்பிக்கு கூட உதவுவதில்லை ,இப்படியெ வாழ்ந்து பழகிவிட்டோம் , இப்படியே போனால் கணவன் ,மனைவி , உறவு கூட அமேரிக்காவை போல் மாறலாம், ஒரு நாள் கணவன் , அல்லது ஒரு நாள் மனைவி....

அமேரிக்க அதிபரின் செல்ல நாயின் பெயர்....... ?

மனிதம் , மறைந்து கொண்டு இருக்கின்றது , நாமோ குளு குளு அறையில் அமர்ந்து , கூழுக்கு இல்லாதவன் பற்றி பேசி , பேசி மாள்கின்றோம்...


ஒரு நாளில் இந்தியாவில் ஒரு வேளை உணவு இல்லாமல் , இறக்கும் இந்தியன் இன்னும் 7000.00 பேர், ஆனால் நாமோ உண்டு கொழுத்து , கொழுத்ததை கரைக்க, கடல் கரையில் ஓடிக்கொண்டு இருக்கின்றோம்...

என்ன விந்தய் , நான் ஒன்றும் அனைவரும் பட்டினி கிடக்க வேண்டும் என்று கூறவில்லை , நம் பகட்டை குறைத்து , பாசத்தையும் , நேசத்தையும் பெருக்கி , நம்மால் இயன்ற ஒரு வேளை , அல்லது , ஒரு கவளம் உணவோ, பணமோ , பொருளோ , பிறருக்கு கொடுத்து உதவலாம்....

கணினி வழி அன்னதானம்

சுகாதாரத்தில் சமீபத்தில் இந்திய புள்ளி விவரங்களைப் பாருங்கள்.


Align Center
1. பேறு காலத்தில் இரத்தசோகை (Anemia) யால் பாதிக்கப்படும் பெண்கள் அதிகம் இருக்கும் நாடு இந்தியா (88% விழுக்காடு).

ஏன் என்று கேள்வி எழுப்பினால், 88% விழுக்காடு பெண்களும் , ஏழைகளா ..? இல்லை நாகரீக மோகம் , இளநீரும் , பழரசமும் பருகியவர்கள் , பெப்சி , கோலா குடிக்கின்றார்கள் , அடை தோசை , கேழ்வரகு தோசை போய்...பான் பீசா , பர்கர் என்று உண்பதால் ,


2. ஐந்து வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளில் 80% பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 46% பேர் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் (எத்தியோபியா, சோமாளியாவில் கூட இது 36%தான்.)( கேவலம்)

ஆக எத்தியோப்பியாவும் , சோமாலியாவும் , கூட ஆரோக்கியம் அற்ற வல்லரசுகள்...?
நாகரீக மோகத்தின் உச்சம் இதுதான்... இளம் தளிர்களும் விதி விதிவிலக்கா என்ன ?
வருங்கால இந்தியா , வளமாக இருக்கும்...?

3. பெரியவர்களிடத்தும் சத்துக்குறைவு பாதிப்பு 40%_ல் உள்ளது.

இவர்கள் பாவம் , ஓடி , ஆடி , முடங்கி கிடப்பவர்கள் , ஒரு காலத்தில் தம் உயிர் கொடுத்து நம் இன்னுயிர் வளர்த்தவர்கள் , இவர்களை கவனிக்க நமக்கு நேரம் ஏது , நாமே வெந்ததையும் , வேகாததையும் தின்று அலைகின்றோம்,

4. மூன்று வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளில் 50% பேர் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். (இதைச் சொல்லும் பத்திரிகைகள் அது அடித்தட்டு / தாழ்த்தப்பட்ட சாதி மக்களிடம்தான் அதிகம் இருப்பதைச் சொல்லாமல் விடுவது எதனால்?)

, எப்போ பார் , அடித்தட்டு , தாழ்த்தப்பட்ட் சாதினு , சொல்றேள்..., அவங்கிட்ட 1 கோடி கொடுத்து பாருங்க , அப்ப அவங்களும் உயர்சாதி , உயர்சாதிதான் , சுரண்டனும் , சுரண்டனும் , மூட்டை தூக்கி , கல் உடைத்து , சாக்கடை , மலம் , அள்ளி இப்படி திருட்டு தனமா சம்பாதிக்கின்ற மக்களிடம் இருந்தும் ,

நேர்மையா மக்களின் வரிப்பணத்தில் , உழைப்பை உருஞ்சும் உயர்ந்தவங்க உயர்சாதின்னா என்ன செய்வது...

5. இந்தியாவில் 77% மக்கள் நாள் ஒன்றுக்கு ரூ.20 மட்டுமே கூலியாகப் பெறுகின்றனர். அதில் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர்தான் அதிகம்.

எப்படிங்க அதிகம் தருவார்கள், அவர்கள் உயர்ந்துவிட்டால் , இவனுகளுக்கு உழைபதற்கு , உருஞ்சுவதற்கு ஆள் வேண்டுமே...

முதலாளி பெரிய முதலாளியாக , வாழ்ந்து , சமூக செம்மலாகிச்சாகின்றான், தொழிலாளியோ , தொழிலாளியாகவே வாழ்ந்து மடிகின்றான்...

ஏன் இந்த சமூக அவலம் , சமூக ஏற்ற தாழ்வு,...?

தனிமனிதர்களுடைய



1.சுய நலம் , தான் , தன் குடும்பம் வாழ யாரையும் , கெடுக்கலாம் என்ற எண்ணம்,



2.தனிமனித ஒழுக்கம் இன்மை , அவன் வாழ்வில் ஒழுக்கம் இல்லாதவர்கள், இங்கு தலைவராகிறாகள்,அவனையும் நாய் போல்
பின்பற்று கிறார்கள், இங்கு ஒழுக்கம் என்பது யாதெனில்... நேரம் தவறாமை , போன்றவை அல்ல..
உண்மையாய் இருத்தல் ,முதலில் தன் மனசாட்சிக்கு ( அப்படின்னா..?) உண்மையானவனாய் இருத்தலும் ,தம் சுற்றம், குடும்பம் , நண்பன்..ஆகியோர்கள் இடத்திலும் , உண்மையை , சொல் , செயலிலும் நிலை நிறுத்துதல்...

இல்லையேல் தனிமனித ஒழுக்கமின்மை சமுதாய சீர்கெடுகலிலேமுடியும்..

உதாரணமாக கணவன் , மனைவியிடமும் , மனைவி கணவனிடமும் உண்மையாய் இல்லாவிட்டால் , முதலில் குடும்பமும் , அதன் தொடர்வாக சமுதாயமும் , அவர்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்ட ஆளில்லாமல் எதிர்கால சமுதாயமும் கெடும்...




3.பேராசை
எல்லாம் இருக்கும் அவனிடம் , அவனோ ஒன்றுமே இல்லை என்றால் தன்னடக்கம்,... எல்லாம் வைத்துக்கொண்டு , இன்னும் அலைவதே பேராசை..
பேராசை பிடித்த செல்வச்சீமான்களே உணருங்கள்...




4. புகழ்
இந்தப்போதை ஏறிவிட்டால் , பிணமும் கூத்தாடும் ,இது முதலில் மனிதனிற்கு அடிமை , பின்னர் அவனை அடிமை யாக்கும்...
இந்த போதையிலே மூழ்கி மூச்சிழந்தவர் ஏராளம்... மூழ்கடிக்கப்பட்டவர்களும் ஏராளம்...

ஆட்சியாளர்களின் அவலம்..
கஞ்சிக்கு வழி இல்லாத போதும் , கட்சிக்கொடிதூக்கி , ஓட்டு கேட்பவனுக்கும்,
இந்த முறையாவது நம்ம கஷ்டம், தீராதா என்று நம்பிகையுடன் ஒட்டுப்போடும் சாராசரி இந்திய குடிமகனும் குடிக்க சுத்தமான தண்ணீரே கிடைப்பதில்லை , அப்படி கிடைத்தால் குடி நீர் வரி, 0.25 காசுகள் , அதுவும் வாரம் இரு முறை மட்டும் ,ஆனால் குளு குளு அறையில் வசிக்கும் , இந்தியாவின் வருங்கால தான் தோன்றி தூண்கள் , குடிக்கும் குளிர்பான தயாரிப்பு தொழில் சாலைக்கு இருபத்தினான்கு மணி நேரமும் செல்லும் தண்ணீர் விலை 0.05 காசுகள் , அவனோ இரண்டு நிமிட விளம்பரதிற்கு 2 கோடி, செலவு செய்கின்றான், அதுவும் சுவை மிகுந்த நீரையே தயாரிக்க பயன் படுத்துவான், விற்பனை 1 லிட்டர் 50.00 ரூபாய்...சராசரி இந்தியர்களின் 2 பேருடைய இரண்டரை நாள் சம்பளம்.....
இதற்கு மட்டும் தாராள்மாக நீர் தரும் அரசு ...?



நீங்கள் குடிக்க வேண்டாம் என்று கூறவில்லை , உங்கள் உழைப்பு , உங்கள் பணம் ,அதில் நீங்கள் 5 இள நீர் குடிக்கலாம், அல்லது 3 தண்ணீர் கலக்காத,பழரசம் குடிக்கலாம், ஆரோக்கியம் கூட...... சிந்தியுங்கள்..... இளைஞர்களே.....!



புத்தாண்டு வருகின்றது , இனி வரும் ஆண்டிலாவது நம்மால் இயன்ற , சிறு சிறு உதவிகள் , நாம் தாய் தேசத்திற்கு , நம் சமுதாயதிற்கு , நம் மக்களுக்கு உதவுவதோடு, தேர்ந்தெடுத்து வாங்குதல் , மூலமும்...



நம் வாழ்வில் சுய ஒழுக்கம் , உண்மை யாய் இருத்தல்... சுய நலம் , பேராசை , புகழுக்கு அடிபணியாமல்.... சமூக ஏற்ற தாழ்வினை , ஒழிக்க நம் பங்கினை ஆற்றுவோம்.....



தமிழர்கள் என்று கூறி ஒன்று படுவோம் , தமிழன என்று மட்டும் தனித்திராமல்....!


தமிழையும் வளர்ப்போம் , மற்ற மொழிகளை அழிக்காமல்..?



இந்தியர்களாய் இணைவோம்.... இனி ஒரு புதுப் பாரதம் படைக்கவே...!


என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..!


அன்புடன்
இரா .செந்தில் நாதன்

நன்றி : செம்மலர் & அக்னி சிறகு

பி .குறிப்பு -
இவை யாவும் என் சொந்த கருத்துக்கள், ஒரு சராசரி இந்திய இளைஞனாய் , என்னுள் தோன்றிய கருத்துக்கள் , யாரையும் புண் படுத்தும் நோக்கத்துடன் எழுதப்படவில்லை , அங்ஙனம் இருந்தால் தெரியப்படுத்தவும் .......



1 comments:

said...

எனக்கெதற்கு நன்றிகள் செந்தில்நாதன்?