Wednesday, January 9, 2008
அயல் நாட்டில் வசிக்கும் இந்தியர்களின்...... உதவிக்கு...?
வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு உதவுவதற்கான 24 மணி நேர உதவி மையத்தை பிரதமர் மன்மோகன் சிங் இன்று துவக்கி வைத்தார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு , இந்த உதவி மையத்தை துவக்கி வைத்த பிரதமர், இந்த உதவி மையம் பல்வேறு மொழிகளில் இயங்கும் என்று தெரிவித்தார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களின் பிரச்சனைகளில் தலையிட்டு அவர்களின் குறைகளை தீர்க்கவும்,தேவையான தகவல்களை அளிக்கவும்,இந்த மையம் உதவும் என்றார்.
இது ஒரு முன்னோடியான முயற்சி.இந்த மையம் நீண்ட காலத்திற்கு செயல்பட்டு, சட்டப்பூர்வமான வெளிநாட்டு சேவைகளை ஊக்குவிக்கும் என்று தாம் நம்புவதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
உடனடியாக செயல்பாட்டுக்கு வந்துள்ள இந்த உதவி மையத்தை 1800 - 11 - 3090 என்ற கட்டணமில்ல தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தங்களது பிரச்சனைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என வெளிநாட்டு இந்திய விவகாரங்களுக்கான அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துளன.
நன்றி யாகூ தமிழ்
அன்புடன்
இரா.செந்தில் நாதன்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இந்தப் பதிவுகள் தமிழ்மணத்தில் திரட்டப்படவில்லையா..?
திரட்டப்படுகின்றதே..?
வருகைகு நன்றி..
தூதரகங்கள் திறன் வாய்ந்தவையாக செயல்பட்டாலே இதில் பாதிப் பிரச்சினைகள் தீர்வு பெறும்.காலம்தான் கணிக்கவேண்டும் தனி அமைப்பின் செயல்பாட்டினை.எனினும் அரசுக்கும்,பிரதமருக்கும் நன்றி.
Post a Comment