இன்று காலை கிடைத்த... இங்கு கிடைத்த தகவல்களின் படி..... இலங்கையில் போர் நடக்கவில்லை ...ஆமாம்... பண்டைய நாள்களில் கூட போர் நிகழ்ந்தால் , போது மக்கள்... அதிலும் பெண்கள், குழந்தைகள் , முதியோர்கள் மீது தாக்குதல்... நிகழ்த்தபட்டதாக ,வரலாறு இல்லை...
அப்படியென்றால் இலங்கையில் நிகழ்வது போரில்லை,
இது இன ஒழிப்பு...தமிழின ஒழிப்பு....
இதயம் கனக்கிறது....! இமைகள் அழுகின்றன...1
நா துடிக்கிறது...! நாதியற்று போனானோ என் தமிழன்...
இறைவா...?
நீ எங்கும் இருக்கின்றாய் என்றால்...! அங்கும் இருப்பாய் என்றால்..!
இவை கண்டாயொ...? , இல்லை உன் கண்கள் குருடோ..!
அழுகுரல் கேட்கவில்லையா..? நீ என்ன செவிடா...?
ஆறுதல் அளிக்க ... யாருமில்லா அனாதையா...? தமிழன்...?
இல்லை , இங்கு நீ இல்லை ... நீ இல்லை என்றால் என்ன?
அங்கு இருக்கின்றார்கள்..! ஆம் நல் உள்ளம் கொண்ட மனிதர்கள் உலகில் இருக்கின்றார்கள்...!
இவை கண்டு ... நம் ஈழ தாய்,தந்தை,சகோதர,சகோதரிகளுக்காக...அவர்கள் துயர் நீங்க,தனி ஈழம் பிறக்க... ஒரு நிமிடம் பிராத்தியுங்கள்... நண்பரே....
க இரா.செந்தில் நாதன்
Thursday, May 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment