Friday, May 2, 2008

மதம்..... பிடிக்காத.........மதம்......?????





முந்தைய பகுதி 1


முந்தைய பகுதி 2

ஒஷோ மறக்க,மறுக்க முடியாத மனிதர்....?,நமக்கு நெருங்கிய,அல்லது உறவினரோ நம்மைவிட்டு பிரியும் ,இறக்கும் தருணங்கள்....மிக கடினமானவை... ஆனால் அத்தகைய இறப்பை ஒரு விழாவாக கொண்டாட செய்தவர்...ஓஷோ... !

ஓஷோ...ஒரு வித்தியாசமானவர்,...!

"..நீங்கள் பேசுவது உண்மையாய் இருக்கலாம் , ஆனால் நான் நல்லதை (சில நல்ல பொய்கள்)மட்டும் பேசுவேன்..."


அவரிடம் தினமும் 60மிகி அளவு வேலியம்(Valium) எனும் போதை பொருள் உட்கொல்லும் பழக்கம் இருந்தது,மேலும் அவர் நைட்ரஸ் ஆக்சைடு(N2O) எனும் சிரிப்பூட்டும் வாயு நுகரும் பழக்கம் கொண்டவர் என்றும் கூறப்படுகின்றது...

ரஜினீஸ் புரம்...

1980 களில் ,ஓஷோ அவர்தம் ,வழிதொடர்பவர்களின் வேண்டுகோளின்படி,அமரிக்காவின் ஓரிகான் மாநிலத்திற்கு குடி பெயர்ந்தார்...அங்கு அவர்களுக்காக மத்திய ஒரிகானில் சுமார் 64000 ஏக்கர் நிலம் ,$5.75 மில்லியன் மதிப்பில் ,அதாவது 30 மடங்கு சந்தை நிலவரத்தைவிட அதிகம் கொடுத்து வாங்கப்பட்டது...

View Larger Map


" தியானம் கட்டாயமாக வியாபாரமாக்கப்பட கூடாது ஆச்சார்யா ரஜ்னீஷ்1971"

ஓஷோவிடம் ஏறக்குறைய 90 கும் மேற்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் இருந்தன...


ஆனால் 1985 வருடம்,போதை பொருள வைத்துஇருத்தல்,மற்றும் குடி நுழைவு முறைகேடு,உயிர்கிருகி தாக்குதல்,போன்ற பல்வேறு காரணங்கள் ஒஷோ மற்றும் அவரது ஆசிரம தலைமை நிர்வாகி மா ஆனந்த் ஷீலா மீது குற்றம் சாட்டி ,ஓஷோ நாடுகடத்தப்பட்டார்...மா ஆனந் ஷீலா சிறைதண்டனை பெற்று , அவர் நன்னடத்தை காரணமாக 1988 ல்,விடுதலை பெற்று தற்போழுது சுவிட்சர்லாந்தில் தாதியர் விடுதிவைத்துள்ளார்...


இதன் பிறகு இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அனுமதி மறுக்கப்பட்டு,இந்தியா திரும்பிய >ஓஷோ...உடல்நலக்குறைவினால்,ஜனவரி 19 ,1990ல் இயற்கை எய்தினார்...

அவருக்கு அமெரிக்காவில் ஆர்சனிக் விசம்,மற்றும் அணுக்கதிர் வீச்சுக்கு ஆட்படுத்தப்பட்டார் எனவும்,கூறப்படுகின்றது...

முற்றுலுமாக புரிந்து கொள்ளப்படாத ஓஷோ ஒரு,மர்மம் தான்,பல்வேறு தியான முறைகளை,உருவாக்கியவர்,மனிதனை கடவுளின் நிலைக்கு (அ)மேம்பட்ட நிலைக்கு உயர்த்த வழி காட்டியவர்,.... ஆனால்
அவரும் சராசரி மனிதர்களைப்போல்,பாலுணர்வும்,சொகுசான வாழ்க்கை முறைகளையும்,ஆடம்பரங்களையும் விருப்பினார்....அனுபவித்தார், ஆகவே.....?????

மனிதன் கடவுளை அடைதல் அ மேம்பட்ட நிலையை அடைதல் என்றால் என்ன...?
இருக்கும் நிலையில் இருந்து ஒரு மேன் மாறுதலை அடைதல் எனக்கொள்ளலாமா..ஆம் இது உடல்,மனம்,செயல் சார்ந்தது...ஒரு வேளை உணவு இல்லாதவனுக்கு, உணவு கிடத்தால் அவன் அளவில் அது உடல்மனம் சார்ந்த மேம்படுதல்,இதுவே ஒரு இளைஞனிடம் அவன் காதலி காதலை ஏற்றுக்கொண்டால் அது மனம் சார்ந்த மேன்படுதல்,இது பிறகு மாறலாம், ஆகவே ஒரு சில சிறிய அல்லது தற்காலிக மாற்றங்கள் மகிழ்ச்சியை கொடுக்கும்,எதுவுமே நீண்ட கால மகிழ்ச்சியை தராது,

எந்த ஒரு மதமும்,மார்க்கமும்,மனிதனை கடவுளாக்காது,மேம்பட்டவனாக ஆகக் கூடிய வழிமுறைகளை காட்டும், கற்றுக்கூட தராது....ஆம் மனிதம் மேம்பட்டவனாக மாறுவது என்பது அவனுள் ,அவன் எண்ணங்களுள் ஏற்படும் மாற்றமேயன்றி வேறில்லை,எண்ணம் நல்லனவாக,இருந்தால் சொல்,செயல்,நல்லனவாகும்...

இக்கட்டுரை யாவும் என் சொந்த கருத்து ,யாவரேனும் புண்படும் படி கருத்துக்கள் இருந்தால் ,மன்னிக்கவும்...

தொடர்புடைய முகவரிகள்..
தாபான்

புத்தகம்

ஓஷோ

விடுதலை முண்னணி


அன்புடன்
கஇரா.செந்தில்நாதன்




4 comments:

said...

ஆனால் அவரும் சராசரி மனிதர்களைப்போல்,பாலுணர்வும்,சொகுசான வாழ்க்கை முறைகளையும்,ஆடம்பரங்களையும் விருப்பினார்....அனுபவித்தார், ஆகவே.....????? //
எல்லா கடவுளர்களும் இந்த விஷயத்தில் ஒண்ணுதான் என்பது மிக பெரிய சோகம் என்றாலும், இவர்களை நம்பி பின்னால்
ஓடுபவர்களை என்ன சொல்ல :-(

said...

தங்கள் வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி...

said...

araivekkattuthanama irukku unga karuthu.muthalla mulusa therinthu kollungal osho vai patri piragu karuthu eluthungal.avar sogusu valkai valthar enbathum palunarvu kondirunthar enbathu ungalai ponra araivekkadugalin ninaippu.en thalaivar koorugirar "pathi unmayai vida mulu poi sirandathu" neengal pathi therindu kondathai vida mulusaga therinthu kollamal iruppathe nanru.nanbare ithu enathu thanipatta karuthu ungal manathai punpaduthiyirunthal mannikkavum

said...

prakasho said...

araivekkattuthanama irukku unga karuthu.muthalla mulusa therinthu kollungal osho vai patri piragu karuthu eluthungal.avar sogusu valkai valthar enbathum palunarvu kondirunthar enbathu ungalai ponra araivekkadugalin ninaippu.en thalaivar koorugirar "pathi unmayai vida mulu poi sirandathu" neengal pathi therindu kondathai vida mulusaga therinthu kollamal iruppathe nanru.nanbare ithu enathu thanipatta karuthu ungal manathai punpaduthiyirunthal mannikkavum


திரு பிரகாசோ..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

இந்த இடுகையின் தலைப்பிலேயே, நான் ஓஷொ வழியின் மேல் வைத்துள்ள கருத்து புரிந்துவிடும்..



http://all-opinion.blogspot.com/2008/04/1.html
மறைந்திருக்கும் உண்மைகள் என்ற ஓஷோ என்று அழைக்கப்படும்,ரஜினீஷ் அவரது புத்தகத்தை என் ஏறக்குறைய 15 வயதில் படித்தேன்....

ஆக தெரிந்தோ தெரியாமலோ...என் முதல் குரு ஓஷோ ஆனார்..

அவரை பற்றி அறிந்து கொள்ளும் ஆவலே..இவ்விடுகை..

எந்த ஒரு மதமும்,மார்க்கமும்,மனிதனை கடவுளாக்காது,மேம்பட்டவனாக ஆகக் கூடிய வழிமுறைகளை காட்டும்,

அவரவர்.. எண்ணத்தின் படியே வாழ்வு..