மலேசியா வந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது,இந்த இரண்டு வருடங்களில் ஓரளவு சுற்றிப்பார்த்து (தெரிந்து)கொண்டுள்ளேன்,மலேசியாவில் நான் பார்த்த ஒரு சில முக்கியமான இடங்கள்...
1.லங்காவி தீவு..
2.கெண்டிங் மலைவாசற்தலம்..
3.கேமரூன் மலைவாசற்தலம்..
4.கோலாலம்பூர் மற்றும் சுற்றுப்புறங்கள்..
5.ஈப்போ லாஸ்ட் வோல்டு ஆப் தம்பூன்..
6.தைப்பிங் உயிரினங்கள் காப்பகம்...
7.பிறை பறவைகள் சரணாலயம்..
8.பினாங்கு அதன் சுற்றுப்புறங்கள்..
9.லம்போங் பூஜோங் அருங்காட்சியகம்
மேலும் பார்க்க கூடிய இடங்கள்...
மலாக்கா அதன் சுற்றுப்புறங்கள்,பங்கோர் தீவுகள்..இதில் நான்
ஏற்கனவேஇந்தபதிவில் கேமரூன் பற்றி ஓரளவு எழுதிஉள்ளேன்.. அதில் சற்று விரிவாக இன்று காண்போம்...
View Larger Map
ஈப்போவில் இருந்து புதியதாக துவங்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையில் நானும் எனது நண்பருமாக முதல் தனி சுற்றுப்பயணம் மலேசியாவில்,அதுவும் முழுக்க முழுக்க பேருந்து பயணம்....
பேருந்து ஈப்போ நிலையத்தில் நிற்கின்ற பொழுது, நான் மட்டும் கீழ் சென்று உணவு வாங்க சென்றேன்.. பேருந்தின் ஓட்டுநர் ஒரு தமிழர் , அவர் என்னை மலேசியர் என்று நினைத்துக்கொண்டார் போல,அய்யா நீ எந்த ஊர் என்றார்,( இங்கு போதுவாக இளைஞர்களை பெரியவர்கள் அன்பாக அய்யா என்றும்,இளைஞிகளை அம்மா,என்றும் அழைப்பர்) நான் பணிபுரியும் ஊரை சொன்னதோடு நான் இந்தியன் என்றும் தெரிவித்துவிட்டேன்,பிறகு ஏன் தைபூசத்திற்கு போகவில்லையா என்றார், நான் சொன்னேன் , என் நண்பன் சித்தப்பாவானதால், அவர் கலந்து கொள்ள இயலாது ,என்பதால் இருவரும் கேமரூன் வர உத்தேசித்தோம் என்றேன் , ஏற்பாடுகளை பற்றிகேட்டார்,ஒன்றும் செய்யவில்லை இனிமேல்தான் என்றோம்,எனவே அவருக்கு தெரிந்த நபரை ஏற்பாடு செய்யட்டுமா,என்றார் சரி என்றோம்,அது போல் அவர் கம்போங் ராஜா (ராஜக்களின் கிராமம்)என்ற ஊரில் ஒரு அந்த கால பென்ஸ் காருடன் (பெரும்பாலும் கேமரூனில் வாடகை ஊர்திகளாக பென்ஸ்)ஒரு ராஜா நின்றிருந்தார்..அவரது பெயர் மட்டும் தான் ராஜா,நாங்க இந்தியர்கள் என்று தெரிந்ததும்,அவர் நோக்கம் பெரும்பாலும் ,பணம் கறப்பதிலே இருந்தது,என்ன செய்வது அவர் தொழில் அப்படி...? அங்கிருந்து எங்களை ப்ரிஞ்சாங் அழைத்துச்சென்றார்,ஆனால் அப்பேருந்து ப்ரிஞ்சாங் வரை செல்லும் என்பதை பிறகு அறிந்து கொண்டேன்,கேமரூனில் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்கள்...1.பட்டாம் பூச்சிகள் பூங்கா,எனக்கு என்னவோ மனம் ஒப்பவில்லை, பட்டாம்பூச்சிகள் ஒருவித சோர்விலே இருந்தன...
அடுத்து காக்டஸ்வேலி(கள்ளிப்பூங்கா) மிக சிறப்பாக பராமரிக்கின்றார்கள்,ஓரளவு பெரிய பூங்கா,அடுத்து ஸ்ட்ராபெரி பழத்தோட்டம், நாங்கள் சின்னசாமி & மகன்கள் அவர்களது தோட்டத்திற்கு சென்றிருந்தோம்,அந்த இடுகை,,அதன் பிறகு போ டீ( BOH TEA)எனப்படும் தேயிலை தோட்டமுடனான தொழிற்சாலைக்கு சென்றிருந்தோம்,உடனடி,பச்சை,மற்றும் ஸ்டிராபெரி,எலுமிச்சை போன்ற சுவைகளில் தேயிலை வைத்திருந்தார்கள், நான் உடனடி மற்றும் எலுமிச்சை குளிர் தேநீர் இரு பொட்டலங்கள் வாங்கிக்கொண்டேன்,அங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையோர்களில் சொந்த ஊர் நாமக்கல் சுற்றுவட்டாரம் என்று , அந்த தொழிற்சாலையின் சுற்றுலாவழிகாட்டி மலேசிய இந்தியர் கூறினார்,அங்கிருந்து கிளம்பும் போது ,அந்த வாடகை ஊர்திக்கு மணி நேர அடிப்படையில் ,பேசியிருந்த போதும், அவர் எங்கள் அனுமதி இன்றி வெள்ளைகார தம்பதிகளை ஏற்றிகொண்டு வந்து,நீங்க கொஞ்சம் சமாளித்துக்கொள்ள முடியமா என்றார்,நானும் ஒன்றும் பிரச்சினை இல்லை என்று ஆங்கிலத்தில்,கூறிவிட்டு அமர்ந்து கொண்டோம்,என்ன செய்வது.?,வெள்ளைக்காரரும் உங்களுக்கு வசதிப்படுமா?என்று கேட்டார்,ஒன்றும் பிரச்சினை இல்லை சொல்லிவிட்டு,பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டோம்,அவர்கள் இங்கிலாந்து யார்க்சையர் பகுதியை சேர்ந்தவர்கள்,வட இந்திய சுற்றுப்பயணம் முடித்து,அப்படியே மலேசியா , பார்த்து தாய்லாந்து மற்றும் கம்போடியா வழியாக தம் நாடு திரும்பவிருப்பதாக கூறினார், உங்களுக்கு யார்க்சையர் தெரியுமா,,? என்றார், நான் ஓ.. கவுண்டி கிரிக்கெட்டு நடக்குமே என்றேன், நல்லது இந்தியர்கள் பெரும்பாலும் உலக நடப்புகளை தெரிந்துவைத்துள்ளீர்கள் என்றபடி,அந்த ஹர்பஜன் ,ஆண்ரு சிம்மன்ஸ் ப்ரச்சினை என்னவாயிற்று என்றார்,நான் சொன்னேன் ஆஸ்திரேலியர்களுக்கு எப்போதும் தாம் ரொம்ப உயர்ந்தவர்கள் என்ற நினைப்பு என்றேன், அவர் சொன்னார் உண்மையில் ஆண்ரு உண்மையான ஆஸ்திரேலியரே அல்ல, அவர் இங்கிலாந்தை சேர்ந்தவர் என்று கூறினார்... நான் வேகமாக அவர் ஆஸ்திரேலிய பூர்வ குடி என்று சொல்கிறனரே..என்றேன், இல்லை என் நண்பன் ஒருவனது ஊர்தான் ஆன்ருவின் சொந்த ஊர் என்றார்...அப்போழுது ஓட்டுனர் ராஜா நீங்க இங்கே இறங்கி பக்கத்தில் , ஒரு தமிழ் பள்ளி இருக்கின்றது, பார்த்து கொண்டுஇருங்கள், நான் பத்து நிமிடத்தில் இவர்களல் விட்டு விட்டு வருகிறேன் என்றுகூறினார்,எனவே நாங்கள கீழ் இறங்கி ,அத்தம்பதிகளிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டோம்...
தொடரும் பக்கங்கள்....
முந்தைய இடுகைகள்
என் பார்வையில் மலேசியா..1,
என் பார்வையில் மலேசியா..2,
என் பார்வையில் மலேசியா..3,
Sunday, April 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இந்த பத்தி பிரிச்சி எழுதுறதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க... :P
தங்கள் வருகைகு நன்றி...
TBCD said...
இந்த பத்தி பிரிச்சி எழுதுறதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க... :P
இல்லையே நான் ஒன்றும் நினைக்கலயே...
இவ்வளவு பெரிய பதிவெல்லாம் நான் எழுதுவேன்னு, நானே நினைக்கலெயே... அதுதான் சாரி மறந்துட்டென்... :P
Post a Comment