Thursday, August 19, 2010

யார் இந்த உமாசங்கர்...?

ஒரு நோபால் வீசியதற்கு கோபப்படும் நாம்... !இங்கு .....................?



"உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை. புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.

நேர்மையான முறையில் வேலை பார்க்கும் ஒரு சில அதிகாரிகளையும் அதிகாரம் கொண்டும் அடக்க முயற்சிக்கும் அரசுக்கு தீவிரமான கண்டனங்கள்.. சுயலாபத்துக்காக அதிகாரிகளைப் பழிவாங்கும் போக்கினை இந்த அரசு கைவிட வேண்டும்.. துணிச்சலாக அரசை எதிர்த்து நிற்கும் உமாஷங்கரின் நேர்மையைப் பாராட்டுகிறோம்.."

அநீதிக்கு எதிரான உங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க நீங்கள் இங்கே கையெழுத்து இடலாம்.. வாருங்கள் நண்பர்களே.. பதிவர்கள் ஒன்றிணைந்து இதை சாதித்துக் காட்டுவோம்.

நன்றி :தருமி ஐயாவுக்கு
கார்த்திகைபாண்டியன்

Saturday, August 14, 2010

எது சுதந்திரம் ?


எது சுதந்திரம் ?

சுதந்திர தினமா ?
கொண்டாட்டமா ?
ஏன் ? எதற்கு ?

அடிமையாக இருந்தோமே அதற்கா
முதுகெலும்பு இல்லாமல்
அடிமையாக இருந்த
புழுக்கலுக்கு ஏது சுதந்திரம் ?

சுதந்திரம் வாங்கி தந்தார்களா ?
எந்த கடையில் ?

நாம் என்ன
சேற்றில் ஊறூம் எருமைகளா
அடிமைப் படுத்தவும் -பின்பு
சுதந்திரம் அளிக்கவும்

மனிதர்கள், தன்மானம் உள்ள மனிதர்கள்
சுதந்திரம் தின கொண்டாட்டம்
இனி தேவை இல்லை
நிறுத்திக்கொள்வோம்

சுதந்திர தினம் கொண்டாடும்
தினம் அல்ல , துக்க தினம்
இனி அப்படியே அனுசரிப்போம்
இத்தனை வருடம்
அடிமை வாழ்க்கைக்கு
எதற்கு கொண்டாட்டம்?

இது ஒரு பாடம்
வந்தவனெல்லாம் ஆண்டுவிட்டான்
இருந்ததை எல்லாம் சுறண்டிவிட்டான்
காலிப் பானையோடு
கையேந்தி நிக்கின்றோம் !


புரிகிறதா ? எது சுதந்திரம் ?
உன்னை எப்பொழுது நீ ஆள்கிறாயோ
அப்பொழுதுதான் நீ சுதந்திரம் அடைவாய்


ஆக்கம் :சுகன்யா

Monday, July 5, 2010

பாரத் பந்த்...?தேவையா..?


சேது சமுத்திர திட்டம்... சுற்றுப்புற சூழலை , சிறிது பாதித்தாலும்,பொதுவான பல பயன் கொண்டு ,( வேலை வாய்ப்பு ,பொருளாதார முன்னேற்றம் ) பெரும்பான்மையோர் வரவேற்கின்றனர்.... நானும் கூட... செய்தி
ஹிந்துஸ்தான் டைம்ஸ் ,மற்றும் ஜூ வி....
சேது பாலத்தின் திட்ட மதிப்பு..2004 ஆம் வருடம்.. ரூபாய் 2400 கோடி... 2005 இல் திட்டம் துவங்கும் போது ( மணல் அள்ள ஆரம்பித்த பொழுது) , ஏறக்குறைய திட்ட மதிப்பு.. ரூபாய் 3500 கோடி , ஆனால் தட்போதைய நிலவரப்படி ரூபாய் 4000 கோடிகள் வரை , இத் திட்டத்தை முடிக்க தேவைப்படலாம்... ஆக பற்றாக்குறை... 1500 கோடிகள்....( அரசியல் வியாதிகளுக்கு ரொம்ப கம்மித்ான்) இதை எவ்வாறு ஈடு செய்வர்......( எல்லாம் நாம் வரி பணம் தாங்க) ? இந்நிலையில்... 01-10-07
அன்று தமிழக அரசு ,பொதுவேலை நிறுத்த, அழைப்பு அறிவிக்கின்றது... நல்ல வேளையாக நீதிமன்றம் தடை உத்தரவு போட்டது , நாட்டில் இன்றும் நீதி மன்றங்கள் , முறையாக , செயல்படுகின்றன என்பதை சுட்டியும் காட்டின... ஆனாலும் போது வேலைனிறுத்தத்ிக்கு பதில் உண்ணாவிரதம் ...என்று ஆனது... நடந்தது சற்று ஏறக்குறைய , வேலை நிறுத்தம் தான்... இதன் விளைவுகளை பார்ப்போம்.... முதலில் பொருளாதார ரீதியாக பார்ப்போம்... முதலில் கோவை மாவட்டம் திருப்பூர், சுமார் ரூபாய் 50000 கோடி வருட வியாபாரத்தில் ,ஒரு நாளைய இழப்பு சுமார் 100 கோடி,(ஆதாரம் : http://en.wikipedia.org/wiki/Economy_of_Tamil_Nadu) அடுத்து கரூர் சுமார் 13500 கோடி வருட வியாபாரத்தில் , ஒரு நாளைய இழப்பு 36 கோடி... இப்படி 29 மாவட்டங்களில் சுமாராக சுமாராக சொன்னாலே... இப்படி
இது போக சுமாராக 62400000 பேர் கடைசி கணக்கு எடுப்பின் படி , இதில் குழந்தைகள், முதியவர்கள் , ஊனமுற்றோர் , மற்றும் நம்ம அரசியல்வாதிகளையும் கணக்கில் விட்டுவிட்டு( ஏன் என்றாள் அவர்கள் நாடு முன்னேற , கால, நேர , பாகுபாடு இன்றி தொண்டு செய்பவர்கள்) பாதி பேரை, கணக்கில் எடுத்துக்கொள்வோம்... சுமார் 30000000 மக்கள் உடைய மனித மணி நேரங்கள் ..... வீணடிக்கப்பட்டன.... இது சற்று ஏறக்குறையமலேய்சியாவின் மொத்த மக்களின் உழைப்புக்கு ஈடாகும்... ஜப்பானின் அரை பங்கு மக்களின் உழைப்பிட்கு ஈடாகும்....


இப்படியே நாம் பயணித்தால் ...விரைவில்....இந்தியா முன்னேறி விடும்..2020 இலக்கை அடைந்து விடலாம்....

அன்புடன்
கரா. செந்தில் நாதன்

Sunday, March 28, 2010

என் இதயம் துளைத்த......!


ரொம்ப நாளா பதிவு எழுத.........
எழுத நினைச்சேன் முடியல.......!

தவிர்க்க முடியாத சில காரணங்களால் ,இப்ப எழுதறேன்...!அதுவும் பர்சனலான விசயம்,
காதலிமட்டுமல்ல,காதலும் என்ன வெறுக்குதோன்னு நினைக்கிற அளவு...!
விரக்தியின் எல்லை ////// என்ன ..... கழுதை கெட்டா குட்டிசெவறு...!
மனிசன் கெட்டா... டாஸ்மார்க் பாரு,,,,
**********************************************************************************
காதலிச்சா மட்டும் தான் காதல் வருமா என்ன...
ஒரு சாம்பிள்

சூரிய விரோதம்

கருந்தோல்
வெயில் அங்கி

உடல் கன்றிச் சிவந்து
ஒளி குடிக்கும் தாவரம்

சிறு களைகொத்தியுடன்
தன் நிலம் திருத்தித் தவழும்

உடல் சுக்கென
வற்றி வதங்கிய
பெருந்தெய்வம்
என் அன்னை

பனை தாங்கும்
வெப்பம்
தான் தாங்குமவள்
சரீரம் பூத்த
வியர்வையையும் விடாமல்
நக்கி உறிஞ்சும்
கொடுஞ் சூரியன்

கைக்குக் கிடைப்பானெனில்
இவ் அரிவாளால்
வெட்டித் தரிப்பேன்
ஒரு சுள்ளி போலே

*******************************************************************************************
வற்றிய குளத்தின்
களிமண் சகதியில்
துள்ளித் துள்ளி விழுவது
மீனின் துடிப்பா
குளத்தின் துடிப்பா?

இதை எழுதியது நான் இல்லைங்.... அவரை அறிமுகப்படுத்து அளவுக்கு நான் உயரவில்லை எனினும்...நட்பின் பொருட்டு நவிழ்தல் ,

அவர்தான்



இவர் தான் இமயங்கள் இணையும் ரெட்டசுழி படத்தின் துவக்க பாடலானபட்டாளம் பாருடா எனும் பாடலை எழுதி உள்ளார்.... பொதுவாக தமிழ் திரைப்படங்களில் சிறுவர்களுக்கான விடயங்கள் மிக குறைவு... ஆனால் வெயில் ,பசங்க படங்கள் விதிவிலக்கானவை.. இந்த பாடலை கேட்டும் போது திரையாக்கம் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடிகிறது...
மற்றுமொரு சிறுவர்..கொண்டாட்டத்திற்கான , அழகான பாடல்...
கேட்கையில் வேறோரு உலகில் நான் பயணிப்பதை போல் உணர்கிறேன்,இசை (piper ) போல ஒருவகையான் மேறகத்திய சாயலை கொண்டுள்ளது...
கார்த்திக் ராஜாவின் உழைப்பு .... வீண்போகவில்லை... ராகாவில் முதல் 10 இடங்களில் முதலிடத்தில் உள்ளது.....
நம் பக்கத்தில் இருந்து மேலும் ஒருவர்...மிக்க மகிழ்ச்சியாக உள்ளது....!
மிக எளிமையான..மனிதர்...அவர்தம் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற
அருட் பேராற்றல் , அருள் புரியட்டும்...!

*******************************************************
வர்ணங்கள் , ஓவியங்கள் வரைவதில் நாட்டம் உண்டெனில் இது உங்களுக்கு உதவும்.....

இது ஒரு புது உலகை உங்களுக்கு ஏற்படுத்தும்....

Twitter, petre,Flame





நம்ம அனைத்து சொந்தங்களுக்கும்....வருகிற 22-03-10, அன்று அருள்மிகு கொண்டாத்தம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ,நீர் மோர் மற்றும் பானக்கம் ,ஊற்றுவதால், தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு
கேட்டுகொள்கிறேன்...


service our motto

Wednesday, January 13, 2010

என்னை கவர்ந்தவர்களும் ,பதிவர் அரசியலும்...


அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ...

இன்பம் துவக்கி.... இல்லம் ,உள்ளம் ... நிறைந்த மகிழ்வை ,

வெண் கதிர்கோன்.... அருளட்டும் .....


கடந்த
வருட நினைவுகளின் தொடர்ச்சி...

கடந்த
வருடம் ....புதிதாய் புதிய நண்பர்கள் பலருக்கும் ,
எனக்கும்
நட்பெனும் ஜனனம் கொடுத்த ஜனவரி ....
தலைவர்
வெயிலானுக்கு மின்னஞ்சல் அனுப்பியதன் விளைவாக ,செயலாளர் அமுக்கினார் ,பொருளாளர் ஈரவெங்காயமும் ,மற்றும் ராமன்குட்டியும் .. அப்புறமாக அண்ணனும் , அன்பின் முரளியும் அறிமுகமாகி வருடமாகின்றது ....

முதல் பதிவர் சந்திப்பு பிரபல பதிவர் அதிஷா , அவரின் சகோதரி திருமணத்தில் நடந்தது , அங்கு தான் அண்ணாச்சியையும் , சஞ்சய் காந்தியையும் , அதிஷாவையும் , மட்டுமல்ல தலையையும் , செயலையும் முதன் முதலில் சந்தித்தேன் .....

உரையாடல் பின்வருமாறு...
நண்பர்களே வணக்கம் ,

நானும் திருப்பூர்காரன்தான் ,இன்றுதான் தங்களைப்பற்றி அறிந்தேன் , பேரரசன்

-----

நல்வரவு பேரரசன்.
முதல்ல உங்க வலைத்தளத்தை சரிபண்ணுங்க. வலைப்பக்கத்தை திறந்தால் பாப்-அப் விண்டோ திறக்கிறது.
சரி! நண்பர்களே விரைவில் திருப்பூரில் ஒரு கூட்டம் ஏற்பாடு பண்ணிவிடலாம்.
--
அன்புடன்,
☼ வெயிலான்.
---------
சிக்கிட்டாருய்யா! அமுக்கு!
அளவில்லா அன்போடு
-கிருஷ்ணா

--------
ஒருத்தர் கிடைக்கக்கூடாதே!!!! அதுக்குள்ள அமுக்கிடுவீங்களே!!! :) :)

ம்ம்ம்..

வாங்க பேரரசன்!!! ஒருநாளைக்கு எல்லோரும் மீட் பண்ணுவோம்!!

ஆதவன்
-------
சிக்கிண்டாருடோய் ஒரு பதிவரு...
வாயெல்லாம் நம நமங்குது வெயிலான்...
போட்டுத் தாக்கிறலாமா..?

வியாழன் மதியம் லன்ஞ்..?

சீக்கிரமா கன்ஃபார்ம் பண்ணுங்க..

regards
Saminathan


---------

போட்டுத் தாக்கிறலாமா?னு கேட்டதும் செந்தில ஆளவே காணோம். பயப்படாதீங்க செந்தில்!
மொதல்ல உங்க அறிமுகத்தை சொல்லுங்க.
ஞாயிறாயிருத்தல் நலம்ங்கிறார் பரிசல்!
மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்? சொல்கிறீர்கள்?
அவரவர் விருப்பங்களைச் சொன்னால், விரைவில் சந்திக்கலாம்.
முரளி,
கடலையூர் செல்வம் மின்னஞ்சல் முகவரியையும் இதோடு சேர்த்து விடுங்கள்.
பரிசல்,
தமிழ் உதயா முகவரி........
வேறு யாராவது திருப்பூரார்கள் இருந்தால் அவர்களையும் இந்த மின்னஞ்சலில் சேருங்கள்.
சந்திக்கலாம் விரைவில்......
அன்புடன்,
☼ வெயிலான்

இதற்கு அப்புறம் எழுத....பொதுகூட்டம் கூட்டனும்...,இப்படியான பதிவர் உலகத்தில்,, நானும்...விழுந்தேன்.......
இத்தகைய வியத்தகு நண்பர்களை தந்த காலமெனும் ,ஓடத்திற்கு ஓராயிரம் நன்றி.....

நானும் சீரியஸா நிறைய எழுத நினைகின்றேன் முடியல.... அதனால்...

2010 நான் மிக எதிர்பார்க்கும் படம் , தமிழ்படம்...
ஆமாங்க... தயாநிதி அழகிரி தயாரிக்கும் தமிழ்படம்...
இயக்குனர் அமுதன்.....

அது பற்றி தொலைகாட்சியில் வந்த நேர்காணல்....


ப்டம் தான் , நல்ல காமெடியா இருக்கும்னு , பார்த்தா? நேர்காணல் அதவிட , காமெடி போங்க....

சிவா , தயாநிதி அழகிரிகிட்ட கேட்குறாரு.... எதனால இந்த படத்தை தயாரிக்கணும்னு நினைசீங்கன்னு....


அதுக்கு அவர் என்ன பதில் சொல்லி இருப்பார்ன்னு நினைகிறீர்கள்...?

என்னை மதுரைக்கு தூக்கிடு போய்..மிரட்டி படம் எடுக்க சொன்னாங்கன்னு...!

மனுசன் ரியலி , சிம்பிள்...அதான் ... எனக்கு அவரை பிடித்தது...
***************************************************************************
பின்னலூருக்கு வருகை புரிந்த அண்ணன் திரு,தாமிராவோடு ..... கலந்துரையாட சந்தர்ப்பம் கிடைத்தது.... அதுவும் அவதாரை மிஸ் பண்ணி... சாரி முரளி....


மிக மிக அழகான , மாலைபொழுதாக ...இனிமையா (ABSOLUTE) இருந்தது.... ஈரோட்டு மாப்பிள்ளைகள் கார்த்தியும்.. (boobs)அதாங்க பூபதியும்...ஈரோட்டு சிங்கம் வால்பையனும்...கலந்து சிறப்பித்தார்கள்.....மேலும் திருபூரில் இருந்து இளைய இளவல்...இம்சித்தார்....


மகிழ்வான..நிறைவான தருணம்.... யாதனில் நண்பர்களுடன் உண்ணும் விருந்து...
விகடன்ல மதன் சொல்லி இருக்கிறாரு... அதன் படியே..மிக மிக நிறைவான , மகிழ்வான தருணம்.. இது...

நன்றி நண்பர்களே...

******************************************************************

சரி பொங்கல் அதுவுமா... பேரரசன்னு பெயரை வச்சுகிட்டு சும்மா , இருந்தா எப்படி...

சாம்ராஜ்யத்தை சுத்தி பார்க்க போறேன்... அதுவும் பறக்கும் ஒத்த கொம்பு குதிரையில்..(unicorn) கும்பகோணம், ஜெயம் கொண்டம்(கங்கை கொண்ட சோழபுரம்) அப்புறமா தரணி புகழும் ..பெரிய கோவில்னு பெரிய பட்டியல்...
வெற்றிகரமா வந்து மிச்சம் சொல்லுறேன்.....
நண்பர்கள் தொடர்புக்கு...
98947 83597

இங்கே பதிவு செய்தா 4 பேருக்கு உதவியா இருக்கும்....

Friday, January 1, 2010

ஒரு இனிய அனுபவம்..

அன்பு கொண்ட ,அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
முதல்ல கொஞ்சம் சுய விளம்பரம்.. நீங்க இது வரைக்கும் இங்கே பதிவு செய்யலைனா ..நல்ல நாள் அதுவுமா,நல்ல காரியம் செய்யுங்கோ .....

புத்தாண்டு சிறப்பு ஒலி,ஒளியும் ..... பாருங்கோ ,மத்தவை பின்னுடடதுல ,

ரொம்ப நாள் கழித்து எழுதரேன்,ஆனா நிறைய படிக்கறேன்..(முயற்சிக்கறேன்)ஆனா பதிவர், பதிவர் சார்ந்த நிகழ்வுகளில் அதிகம் ,கலந்து கொள்கிறேன் ...முதலில் சிறுகதை பட்டறை ,இங்குதான் அதிக பதிவர்களை,அறிந்து கொண்டேன் ,குருஜி ஜியோராம் ஜி ,திரு . பட்டாம்பூச்சி ,திரு . தண்டோரா ,இயக்குனர் கேபிள் சங்கர் , நண்பர் நெய்தல் ,மற்றும் சகா கார்க்கி...எழுத்தாளர் நர்சிம்,திரு அப்துல்லா ,திரு ஆதி போன்ற நல்ல நண்பர்கள் கிடைத்தனர்...... கடந்த வருட சுவடுகள் தொடரும் .....


செயலாளர் பரிசல்காரனும் , இயக்குனர் திரு.சுரேகா , சகா முரளி ,நண்பர் சத்யம் இணைந்து கலக்கிய...

Tuesday, July 21, 2009

சூரியனை விழுங்கிய பாம்பு(எ) நிலா...சூரிய கிரகணம் சில புகைபடங்கள்( மீள்)

சூரியனை பாம்பு விழுங்குவதாக ,நமது புராணங்களில் சொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது..ஆனால் நிசத்தில் சூரியனை விழுங்கும் பாம்பை,மன்னிக்கவும்,சூரியனை நிலா மறைக்கும் (ஆகஸ்டு-1-2008)படங்களை பாருங்கள்,

(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)
இது சைபீரியா நாட்டிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படமாகும்,ஒரு சில நிமிடங்கள் சூரியன் முழுவதுமாக மறைந்தது,இக்கிரகணம் கனடா,கீரீன்லாந்து,மத்திய இரஷ்யா,கிழக்கு கசகஸ்தான்,மேற்கு மங்கோலியா மற்றும் சீனாவிலும் முழுமையாக தெரிந்தது....!

(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)

(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)

அடுத்த சூரிய கிரகணம் , மீண்டும் 7 ஆண்டுகள் கழித்துதான் வரும்....

(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)

அடுத்த சூரிய கிரகணம் 2017 வருடம் வடக்கு அமரிக்காவிலும்,ஐரோப்பாவில் 2026லும்,ரஸ்யாவில்2030...தெரியும்....
(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)